Category Archives: சிறுகதை விமர்சனம்

 • அக்கரைப் பச்சை – 4 : கணேஷ் பாபுவின் கனவுலகவாசிகள்

  Posted on January 6, 2018 by பாலமுருகன் in சிறுகதை விமர்சனம்.

  சிங்கப்பூரில் வசிக்கும் கணேஷ் பாபு பற்றி தோழி சுஜாவிடமிருந்து தெரிந்து கொண்டேன். சிறுகதை எழுத்தாளராகவும் நல்ல விமர்சகராகவும் அறியப்படும் அவர் தங்கமீன் வாசகர் வட்டத்தில் ‘கவிதை இரசனை’ என்கிற நவீன கவிதைகள் பற்றிய ஓர் விமர்சன அங்கத்தையும் பல வருடங்களாக நடத்தி வருகிறார். இலக்கியம் தொடர்பான விமர்சனங்களிலும் விவாதங்களிலும்  தீவிரமாக  ஈடுப்பட்டு வரும் அவருடைய ‘கனவுலகவாசிகள்’ சிறுகதை அக்கரைப் பச்சை தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு படைப்பாளன் தான் வாழும் காலத்தின் சாட்சியமாக இருத்தல் அவசியம். இன்றும் பலர் உடலை இந்நூற்றாண்டில் இருத்திக் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • அக்கரைப் பச்சை – 3 (சிங்கப்பூர் சிறுகதைகள் விமர்சனம்) சித்ரா ரமேஸின் ஒரு நாள் ராணி- ஒப்பனைகள் நிரம்பிய வாழ்க்கை

  Posted on December 21, 2017 by பாலமுருகன் in சிறுகதை விமர்சனம்.

    ‘தனியுடமை சமூகத்திற்குள் வந்து அதன் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரிக்கும்பொழுது, உடைமையைப் பெற மனிதர் அலையும்போது, இதன் காரணமாக ஊருக்குள்ளும், உறவுக்குள்ளும் முரண் அதிக்கரிக்கிற போது சிக்கல் புறத்தில் மட்டுமல்லாமல் அகத்திற்குள்ளும் பாதிப்பை ஏற்படுத்தும்’ – கோவை ஞானி (தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும்) சிங்கப்பூரில் கடந்த 22 ஆண்டுகளாக வசித்து, தமிழ் இலக்கியம் சார்ந்தும், கல்வியியல் சார்ந்தும் ஒரு புது இரசனை உருவாக்கத்தில் தன்னை முழுவதுமாக ஈடுப்படுத்தி, வாசகர் வட்டத்தின் வழியாகத் தன்னை ஆர்வமிக்க ஓர் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • அக்கரைப் பச்சை – 2 (சிங்கப்பூர் சிறுகதைகள் விமர்சனம்) ராம் சந்தரின் அப்புவின் கனவு: கனவுகள் கண்டு சாகும் இயந்திரங்கள்

  Posted on December 19, 2017 by பாலமுருகன் in சிறுகதை விமர்சனம்.

  கனவுகள் பற்றி எனக்கு எப்பொழுதும் ஒரு வியப்புண்டு. சிறுவயதில் கனவுகள் வந்துவிடும் என்கிற பயத்தில் கண்களை மூடாமல் வீட்டுத் தகரத்தையே பார்த்துக் கொண்டிருப்பேன். கனவு நிழல் போல என் உறக்கத்தைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். எப்பொழுது அது உறக்கத்தை விழுங்கி நம் இரவை ஆட்கொள்ளும் என இன்றளவும் யாராலும் கணிக்க இயலாத விந்தையே கனவு. சிக்மெண்ட் ப்ராய்ட் கனவுகள் பற்றி சொல்லும் விளக்கம் விரிவானவை. அதுவரை மாயைப் போல தோற்றமளிக்கும் கனவுகள் பற்றி உளவியல் ரீதியில் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • அக்கரைப் பச்சை – 1 (சிங்கப்பூர் சிறுகதை விமர்சனம்) அழகுநிலாவின் விரல்

  Posted on December 18, 2017 by பாலமுருகன் in சிறுகதை விமர்சனம்.

  அகநாழிகை இதழின் ஆசிரியரும் அகநாழிகை பதிப்பகத்தின் பதிப்பாளருமான எழுத்தாளர் பொன். வாசுதேவன் அவர்கள் ஜூலை 2017ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தமிழ்ச் சிறுகதைகள் சிலவற்றை ‘அக்கரைப் பச்சை’ என்கிற தலைப்பில் தொகுத்து வெளியீட்டுள்ளார். தற்சமயம் சிங்கையில் தீவிரமாக எழுதி வரும் நண்பர்களின் பலரின் சிறுகதைகளைத் தொகுப்பில் கண்டதும் ஆர்வம் மேலிட்டது. சமீபத்தில் சிங்கையில் வெளிவந்த இத்தொகுப்பின் வழியாக சிங்கப்பூர் நவீனத் தமிழ்ச் சிறுகதைகள் குறித்த ஒரு விரிவான விமர்சனக் கருத்தாக்கத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என நம்புகிறேன். ஒரு […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • உயிர்தெழல் : இறந்தகாலத்தின் ஓசைகள் சிறுகதை தொகுப்பிற்கு, எழுத்தாளர் சீ.முத்துசாமியின் முன்னுரை

  Posted on September 9, 2017 by பாலமுருகன் in சிறுகதை விமர்சனம்.

  மரணம் மனிதன் எதிர்க்கொள்ளும் இருண்மை வெளியின் உச்சபட்ச புதிரின் ஆழ்வெளி. பிரக்ஞை அழிந்த வெளி. சன்னஞ் சன்னமாக முழு பிரக்ஞை வெளிக்குள் நிகழும் மரணம் அதற்கு முன்பானது. முதுமையும் வறுமையும் நொய்மையும் சுமந்தபடி, மனிதனுள் நிகழும் அந்த மரணம் துயரமிக்கது. அது வரையிலான அவனது உலகத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடும். ஆழ்கடலின் இருளுக்குள் கைவிடப்பட்ட குழந்தையின் மரண ஓலம் எதிரொலிக்கும் மயானக் காடு. காலம் அவனது உடலுக்குள் புகுத்திவிடும் நோய்மைக்கு நிகராக மனம், மூளை என அவனது […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • ஒளி என்பது வெளுப்பான இருட்டு- கே.பாலமுருகனின் சிறுகதைகள் விமர்சனம்

  Posted on June 29, 2017 by பாலமுருகன் in கட்டுரைகள், சிறுகதை விமர்சனம்.

           இருள் என்பது குறைந்த ஒளி என்கிற பாரதியின் கூற்றை முற்றமுழுக்க மறுதலிப்பவராய் தெரிகிறார் பாலமுருகன். அவரைப் பொறுத்தவரை ஒளி என்பதேகூட வெளுப்பான இருட்டுதான் போலும். ஆமாம், அவருக்கு பூமியே ஒரு இருளுருண்டையாகத்தான் தெரிகிறது. எனவே அவரது கதையுலகமும் இருளுக்குள் தான் இயங்குகிறது. இருட்டு இருட்டு என்று இருட்டைப் பற்றியே இத்தனைக் கதைகள் எழுத முடியுமா என்கிற மலைப்பு ஒருபுறமிருக்க அதைப் பற்றி இன்னும் சொல்லிமுடிக்கவில்லை என்கிற ஒரு துயரத்தோடுதான் அவரது ஒவ்வொரு கதையும் முடிந்திருக்கிறது என்பதைத்தான் […]

  Share Button
  Continue Reading...
  1 Comment.
 • சீ.முத்துசாமி என்கிற மலேசிய நவீன படைப்பிலக்கியத்தின் குரல்

  Posted on June 15, 2017 by பாலமுருகன் in சிறுகதை விமர்சனம்.

  மலேசிய நவீன இலக்கியத்தின் தனித்துவமான படைப்பிலக்கியத்தின் குரல் சீ.முத்துசாமியினுடையது என்பதை அவருடன் பழகிய நாட்களிலும் அவருடைய சிறுகதைகளை வாசித்த போதும் புரிந்துகொண்டேன். 2007 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடந்த ஒரு நாவல் பட்டறையில்தான் சீ.முத்துசாமியைச் சந்தித்தேன். அப்பொழுது மலேசிய ஞாயிறு பத்திரிகைகளில் நான் எழுதத் துவங்கிய காலக்கட்டம் என்பதால் அவரால் என்னை அடையாளம் காண முடிந்தது. எழுத வரும் இளையோர்களைத் தட்டிக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் படைப்புப் போதாமை குறித்தும் சமரசமில்லாமல் விமர்சிக்கக்கூடிய ஆற்றல் உள்ள ஒரு […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • துஞ்சல்: இருண்ட மனங்களுக்கிடையே அகவழிப் பயணம்

  Posted on June 1, 2016 by பாலமுருகன் in சிறுகதை விமர்சனம்.

  புனைவுகளைப் பற்றி பேசும்போது எனக்கு எப்பொழுதும் ஒரு தயக்கம் ஏற்படுவதுண்டு. சிறுகதைகள் சொற்களின் ஊடாக மனத்துடன் நூதனமாக உரையாடக்கூடியவை. உரையாடல் என்று சொல்வதைக் காட்டிலும் ஒரு முணுமுணுப்பு என வைத்துக் கொள்ளலாம். மனங்களில் அழுந்தி கிடக்கும் மௌனங்களுக்குத் திறவுக்கோளாக, சொல்லப்படாமல் வெகுநாள் தவித்துக் கொண்டிருந்த மன இருள்களின் மீது பாய்ச்சப்படும் வெளிச்சமாக ஒரு சிறுகதை வளர்ந்து வாசகப் பரப்பில் நிற்கிறது. அதனை எதிர்க்கொள்ளும் ஒரு வாசக மனம் தன்னுள்ளும் இருக்கும் ஏதோ ஒரு புள்ளியுடன் இணைகிறது. தன்னையும் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • மலேசிய – சிங்கப்பூர் சிறுகதைகள் ஒரு வாசகப் பார்வை – தொடர் 3 சு.யுவராஜனின் அல்ட்ரோமேன்: குடும்ப வன்முறையின் வீச்சம்

  Posted on December 27, 2015 by பாலமுருகன் in சிறுகதை விமர்சனம்.

  ‘பெண்ணினம் சார்ந்து மனித மூளை கொள்ளும் எதிர்வினைகளுக்கும் பிற ஜீவராசிகள் கொள்ளும் எதிர்வினைகளுக்கும் சம்பந்தம் இல்லை. மனித மூளை மட்டுமே பெண்ணினத்தை அடக்க முயல்கிறது’ – சுந்தர ராமசாமி (செப்டம்பர் 2002) 2002ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இடைநிலைப்பள்ளியில் ஆறாம் படிவம் படித்துக் கொண்டிருக்கும்போது நண்பர் காளிதாஸ் மூலமே அவருடைய அண்ணன் எழுத்தாளர் சு.யுவராஜன் பற்றி தெரிய வந்தது. அப்பொழுது அவர் மலாயாப்பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். ‘ஊதுபத்தி சிறுவன்’ சிறுகதையை வாசிக்கும்படி நண்பர்கள் கேட்டுக்கொண்டனர். அப்பொழுது தமிழ் இலக்கியத்திலும் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.