Monthly Archives: January 2016

 • Ola Bola- மலேசிய வரலாற்றின் குரல்

  Posted on January 31, 2016 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  ‘ஹரிமாவ் மலாயா’ எனக் கம்பீரமாக அழைக்கப்பட்ட மலேசியக் காற்பந்து குழுவிலுள்ள விளையாட்டாளர்களின் மனப்போராட்டங்களையும், ஈகோ போரையும், குடும்ப சிக்கல்களையும், குழுவில் நடந்த மனக் கசப்புகளையும், தியாகங்களையும் 1980களின் பின்னணியில் வைத்து ஓர் அழுத்தமான திரைக்கதையுடன் ‘ஓலா போலா’ படைக்கப்பட்டுள்ளது. 1963ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மலேசியக் காற்பந்து குழுவின் எழுச்சி காலம் என 1980-களைச் சொல்லலாம். மலேசியக் காற்பந்து விளையாட்டாளர் மொக்தார் ஆசியாவின் சிறந்த காற்பந்து வீரர் எனும் புகழைப் பெற்று முன்னிலையில் இருந்த காலம். அப்பொழுது ஆசியாவிலேயே […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • தைப்பூசம் – அதிர்ச்சி தகவல்கள்

  Posted on January 22, 2016 by பாலமுருகன் in பத்தி.

  குறிப்பு: ஒரு வருடத்தில் தைப்பூசத்தில் மட்டும் மொத்தம் 5 மில்லியன் லீட்டர் பால் சாக்கடையில் கலக்குவதாகத் தகவல் சொல்கிறது.   வெடிகுண்டும் குண்டு வெடியும் தொடர்ந்து இரண்டு நாட்களாகத் தைப்பூசத் திருத்தலங்களில் வெடிகுண்டு போடப்போவதாக பல தரப்புகளிலிருந்து தகவல்கள் வந்திருப்பதாக வாட்சாப் மூலம் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அது இருக்கட்டும், ஆனால், தைப்பூசத்திற்குத் தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்த செல்பவர்களும் அவர்களுடன் செல்பவர்களும் அல்லது தைப்பூசத்திற்குச் செல்லும் பொதுமக்களும் முதலில் தயவு செய்து குப்பைகளைக் கீழே போடாதீர்கள். […]

  Share Button
  Continue Reading...
  2 Comments.
 • உலக சினிமா தொடர் 2: ஸ்பானிஷ் சினிமா: ஒரு தீ மூட்டியும் ஒரு சவப்பெட்டியும்

  Posted on January 19, 2016 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  ஒவ்வொரு வருடங்களும் தூரத் தேசங்களுக்கு வேலைக்குப் போகும் ஏராளமான மனிதர்களில் யாரெனும் ஒருவரைத் தற்செயலாக எங்காவது பார்த்துப் பேசியிருக்கிறீர்களா? விட்டு வந்த நிலம் குறித்த கவலைகளும் ஏக்கங்களும் நிறைந்த கண்களைத் தரிசிக்கக்கூடும். மனைவி மக்களைப் பிரிந்து வருடக் கணக்கில் ஊர் திரும்பாமலேயே கிடைக்கும் இடத்தில் பெரிய எதிர்ப்பார்ப்புகள் ஏதுமின்றி உலகமெங்கும் பல தொழிலாளிகள், பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் சிதறிக் கிடக்கிறார்கள். அது போன்றவர்களின் மன உளைச்சலையும் பரிதவிப்பையும் நேரில் காட்சிகளாகக் கொடுத்து நம்மை வியப்பிலும் பயத்திலும் ஆழ்த்தும் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • மலைகள் இதழுக்கான நேர்காணல்: என் படைப்புகளில் நான் அலைந்து திரிகிறேன்

  Posted on January 15, 2016 by பாலமுருகன் in நேர்காணல்கள்.

  படிக்க வேண்டியதற்கும் படைக்க வேண்டியதற்கும் மத்தியில் இருக்கும் இடைவேளியைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.   கேள்வி: உங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ள முடியுமா? கே.பாலமுருகன்: நான் ஓர் எழுத்தாளன். ஆசிரியரும்கூட. எனது கே.பாலமுருகன் வலைத்தளத்தில் என்னைப் பற்றி தேவையான அறிமுகம் உண்டு. இப்படி எல்லாம் நேர்காணல்களிலும் என்னைப் பற்றி நான் கிளி பிள்ளை போல ஒப்புவிப்புவதில் சோம்பேறித்தனமாக இருப்பதால் வலைத்தளத்தின் முகவரியை இணைக்கிறேன். (http://balamurugan.org). உங்களையும் சேர்த்து இந்தத் தமிழ்ச்சமூகத்தின் தேடல்கள் மீது எனக்கு எப்பொழுதுமே நம்பிக்கை […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • தமிழ்ப்பள்ளியே என் தேர்வு எனும் முழக்கம் இனவெறியா? உதயசங்கரின் விமர்சனங்களுக்கான எதிர்வினை

  Posted on January 13, 2016 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  மலேசியாவில் மட்டுமல்ல சிறுபான்மை மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பெரும்பான்மையினரால் தொடர்ந்து சீண்டப்பட்டும்/ ஒடுக்கப்படும் ஒரு சிறுபான்மை சமூகம் தன் அடையாளங்களின் மீது வைக்கப்படும் எந்த விமர்சனத்தையும் பற்று நிறைந்த சூழலிலேயே எதிர்க்கொள்ளும். அச்சமூகத்தின் பிடிமானமே அத்தகைய அடையாளங்கள்தான். அந்த அடையாளங்களை நேரடி விவாதத்திற்கு எடுப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தொனி மிக முக்கியமானது. அது கொஞ்சம் பிசகினாலும் அச்சமூகத்த்தின் நம்பிக்கைகளை நேரடியாகப் பாதிக்கும். பன்முகச் சூழலில் வாழு யாவருக்கும் இது தெரிந்திருக்க வேண்டும். நம் கருத்தை ஒன்றின்மீது […]

  Share Button
  Continue Reading...
  1 Comment.
 • உலக சினிமா தொடர் – 1 : Camp X –Ray திரைவிமர்சனம் ஈராக் சினிமா: ஒரு சிறையின் மிகக்கொடூரமான தனிமை

  Posted on January 11, 2016 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  ஒரு தூக்குக் கைதியின் சிறையில் அவன் மரணத்திற்குப் பிறகு என்ன இருக்கும்? மௌனம்.   சில வருடங்களுக்கு முன்பு கோலாலம்பூரில் இருக்கும் ‘புடு சிறை’ பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தபோது அங்குப் போக நேரிட்டது. பல ஆண்டுகளாகச் சிறை கைதிகள் வாழ்ந்து தண்டனைகளை அனுபவித்த ஒவ்வொரு சிறையையும் கடக்கும்போது விவரிக்க இயலாத ஒரு தனிமையின் கதறல் மனத்தில் அப்பிக்கொண்டதை உணர முடிந்தது.  மரணத் தண்டனை என்னைப் பொறுத்தவரை சட்டத்தின் அனுமதியுடன் செய்யப்படும் கொலையே. சட்டமும் தண்டனைகளும் ஒரு மனிதன்/ […]

  Share Button
  Continue Reading...
  1 Comment.
 • ஜகாட் – திரைப்படப் புத்தகப் போட்டி இரண்டாம் சுற்றின் வெற்றியாளர்: ஜெ. அரவின் குமார்

  Posted on January 9, 2016 by பாலமுருகன் in Jagat Book Contest.

  இரண்டாம் சுற்றின் வெற்றியாளர் அரவின் குமாரின் கேள்விக்கான பதில்: கேள்வி: ஜகாட் திரைப்படத்தில் ஒருவன் குற்றவாளியாக மாறுவதற்கு எந்தெந்த சூழல்கள் காரணமாக அமைகின்றது என முன்வைக்கப்படுகிறது? பதில்: குற்றங்களின் பின்னணி ஆராயப்படுகின்றப்போது, குற்றவாளியின் பின்னணியும் ஆராயப்பட வேண்டும் என்பது ஜகாட் திரைப்படம் காட்டும் சிந்தனை. குற்றம் புரிந்தவனைச் சார்ந்திருக்கும் குடும்ப நிலை, சமுதாய நிலை ஆகியவை குற்றங்களில் ஈடுபடுவதற்கான முதன்மை காரணிகளாகத் திகழ்கின்றன என்பதை ஜகாட் படம் காட்டுகிறது. வறுமையினிருள் மெல்ல ஒளிரும் கொஞ்சம் நஞ்ச கல்வி, நம்பிக்கைகளின் குறையொளியை […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • குற்றம் கடிதல்: ஒரு மன்னிப்பின் முன்னே மண்டியிடுதல்

  Posted on January 8, 2016 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  ‘குற்றமே பகையாக மாறலாம்’ என்கிற தெளிவான கருத்துடன் சமூகத்தை நோக்கி விரிகிற குற்றம் கடிதல் படம் பள்ளிக்கூடங்களில் இழைக்கப்படும் குற்றங்களுக்கான மையப்புள்ளியைத் தேடி விரிவாக முனைந்துள்ளது என்றே சொல்லலாம். தற்கால சூழலில் இயங்கி வரும் பள்ளிக்கூடங்கள் என்பது அடுத்த தலைமுறை சந்ததியை உருவாக்கி வெளியே அனுப்பும் தொழிற்சாலை என்பதைப் போல பல தமிழ் சினிமாக்கள் காட்ட முனைந்திருக்கின்றன. டோனி, சாட்டை, நண்பன் போன்ற படங்களைக் குறிப்பிட்டு சொல்லலாம். ஆனால், குற்றம் கடிதல் எவ்வித மாற்றுக் கருத்தையோ அல்லது […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • ஜகாட் திரைப்படம்- புத்தகப் பரிசு இரண்டாம் சுற்று

  Posted on January 4, 2016 by பாலமுருகன் in Jagat Book Contest.

  கடந்த புத்தகப் பரிசு போட்டிக்கு 6 பதில்கள் கிடைக்கப்பெற்றன. அதில் ச.நாகேன் அவர்களின் பதில் ஜகாட் திரைப்படத்தின் சாரத்தைச் சொல்வதாக அமைந்திருந்தது.  ஜகாட் திரைப்படம் மூன்றாம் வாரத்தை நோக்கி திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. உள்ளூர் சினிமாவை ஆதரிப்பதன் மூலம் இங்கு நல்ல படைப்பாளிகள் எதிர்காலத்தில் உருவாவர்கள். ஆகவே, இன்னும் ஜகாட் திரைப்படத்தைப் பார்க்காதவர்கள் கீழ்கண்ட திரையரங்குகளில் போய் பார்க்கலாம்.   இரண்டாம் சுற்றுக்கான கேள்வி: ஜகாட் திரைப்படத்தில் ஒருவன் குற்றவாளியாக மாறுவதற்கு எந்தெந்த சூழல்கள் காரணமாக அமைகின்றது […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • எப்பொழுது நீங்கள் கடைசியாகச் சிரித்தீர்கள்?

  Posted on January 3, 2016 by பாலமுருகன் in பத்தி.

    சிரிப்பது கடினமாக மாறிவிட்ட, சிரிப்பது வெட்கப்படும் ஒன்றாக மாறிவிட்ட ஒரூ சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனக்கு தெரிந்து என் அப்பா அவரது கடைசி சில ஆண்டுகள் சிரிக்கவே மறந்திருந்தார். ஒருமுறை கூட அவர் எதற்காகவும் சிரித்துப் பார்த்ததில்லை. எப்பொழுது வாழ்க்கை அவரிடமிருந்து சிரிப்பைப் பிடுங்கியிருக்கும் என்பதை அறியவே முடியவில்லை. எந்தச் சூழல், எந்தத் தருணம், எந்தச் சம்பவம் அவர் சிரிப்பை வெறுக்கக் காரணமாக இருந்திருக்கும் எனத் தெரியாமலே போய்விட்டது. ‘சிரிப்போம் வாருங்கள், சிந்திப்போம் வாருங்கள்’ என்ற […]

  Share Button
  Continue Reading...
  No Comments.