Monthly Archives: June 2017

 • ஒளி என்பது வெளுப்பான இருட்டு- கே.பாலமுருகனின் சிறுகதைகள் விமர்சனம்

  Posted on June 29, 2017 by பாலமுருகன் in கட்டுரைகள், சிறுகதை விமர்சனம்.

           இருள் என்பது குறைந்த ஒளி என்கிற பாரதியின் கூற்றை முற்றமுழுக்க மறுதலிப்பவராய் தெரிகிறார் பாலமுருகன். அவரைப் பொறுத்தவரை ஒளி என்பதேகூட வெளுப்பான இருட்டுதான் போலும். ஆமாம், அவருக்கு பூமியே ஒரு இருளுருண்டையாகத்தான் தெரிகிறது. எனவே அவரது கதையுலகமும் இருளுக்குள் தான் இயங்குகிறது. இருட்டு இருட்டு என்று இருட்டைப் பற்றியே இத்தனைக் கதைகள் எழுத முடியுமா என்கிற மலைப்பு ஒருபுறமிருக்க அதைப் பற்றி இன்னும் சொல்லிமுடிக்கவில்லை என்கிற ஒரு துயரத்தோடுதான் அவரது ஒவ்வொரு கதையும் முடிந்திருக்கிறது என்பதைத்தான் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • யார் கொலையாளி? – பாகம் 2 ( ஒரு விசாரணைத் தொடர்)

  Posted on June 25, 2017 by பாலமுருகன் in யார் கொலையாளி?.

  கொல்லப்பட்டவளைப் பற்றிய விவரங்கள்: இறந்தவரின் பெயர்: தினேஸ்வரி இடம்: சேலாயாங் அம்பாட் அடுக்குமாடி கொல்லப்பட்டவைக்கான காரணம்: தெரியவில்லை கொல்லப்பட்ட விதம்: மணிக்கட்டில் சிறிய வெட்டுக்காயம், தலையில் மண்டை ஓட்டில் சிறிய பிளவு (கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்), ஆங்காங்கே இரத்தக் கசிவு. கொலை கண்டறியப்பட்ட நேரம்: 21 ஜூன் 2017, இரவு 8.45க்கு கொலை செய்யப்பட்ட நாள்: கண்டறியப்பட்ட நாளில்  கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொல்லப்பட்டவரின் சில விவரங்கள்: ஒரு தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவி. சொந்த வீடு டாமான்சாரா. […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுகதை: சாவித் துவாரம்

  Posted on June 24, 2017 by பாலமுருகன் in சிறுகதைகள்.

  முனியாண்டி வெகுநேரம் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார். கதவு திறக்கப்பட்டதும் காலில் விழுந்திட முடிவு செய்துவிட்டார். ஓராயி பவுடர் பூசும் சத்தம் கேட்டது. சரக் சரக் என ஒட்டத் தடுமாறும் பவுடரை முகத்தில் அவள் தேய்க்கும் சத்தம். அவளுக்குப் பிடித்தது அந்தச் சிவப்பு நிற டப்பாவில் இருக்கும் ‘பேபி பவுடர்’தான். அதைப் பூசிக் கொண்டு அவள் வெளியே வரும்போது இப்பொழுதுதான் தொட்டிலிலிருந்து எகிறிக் குதித்து நடந்து வரும் குழந்தையைப் போல தெரிவாள். அதற்கே முனியாண்டி தவம் கிடக்க வேண்டும். […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சீ.முத்துசாமி சிறுகதைகளில் குறியீட்டு மொழி ஓர் ஆய்வு

  Posted on June 21, 2017 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  இலக்கியம் என்பது மொழியின் ஊடாக நிகழ்த்தப்படும் கலையாகும். மொழியே பிரதானமாக இருந்து இலக்கியப் படைப்புகளுக்கு வெளிப்பாட்டு தளத்தை உருவாக்குகிறது. மொழி என்பது காட்சிகளின், பொருள்களின், செயல் வடிவங்களின் பிரதிநிதியாக குறியீட்டு ஒழுங்குகளால் கட்டமைக்கப்பட்டுள்ளன. சொல் என்பதே ஒரு பொருளைக் குறிக்கும் பொருட்டு உருவானதே. பின்னர், அப்பொருள் சார்ந்து செயல் வடிவங்களுக்குரிய சொற்கள் பிறந்தன என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். அதே மொழியைக் கொண்டுத்தான் மனிதன் தன் உணர்வுகளை நூதனமான முறையில் படைப்பிலக்கியத் திறன்களோடு இலக்கியமாகப் படைக்கத் துவங்கினான். அத்தகைய […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • கேலி வதையின் உச்சநிலை – ஆபத்தும் களையப்படுதலும்

  Posted on June 18, 2017 by பாலமுருகன் in பத்தி.

  கடந்த 2015ஆம் ஆண்டில் மட்டும் பள்ளிக்கூடங்களில் சுமார் 3000 கேலி வதை பிரச்சனைகள் ஏற்பட்டதாகத் தகவல் கூறப்படுகிறது. (http://smasanews.com/index.php/semasa/item/372-3-000-kes-buli-di-sekolah-direkod-pada-2015)   கடந்த ஜூன் 6ஆம் திகதி இரவு கேலி வதையின் கொடூரமான முகம் இன்னொரு உயிரைப் பறித்துவிட்டது. 18 வயது ஆகிய நவீன் என்கிற இளைஞர் ஐந்து பேர் கொண்ட இன்னொரு இளைஞர் கூட்டத்தால் கடுமையாகத் தாக்கப்பட்டு, குதத்தின் வழியாக போத்தல் சொருகப்பட்டு துன்பப்படுத்தப்பட்டுள்ளார். மூளை சாவு அந்த இளைஞருக்கு மட்டுமல்ல என்றே நினைக்கத் தோன்றுகிறது. இதுபோன்ற வன்கொடுமையாளர்கள் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சீ.முத்துசாமி என்கிற மலேசிய நவீன படைப்பிலக்கியத்தின் குரல்

  Posted on June 15, 2017 by பாலமுருகன் in சிறுகதை விமர்சனம்.

  மலேசிய நவீன இலக்கியத்தின் தனித்துவமான படைப்பிலக்கியத்தின் குரல் சீ.முத்துசாமியினுடையது என்பதை அவருடன் பழகிய நாட்களிலும் அவருடைய சிறுகதைகளை வாசித்த போதும் புரிந்துகொண்டேன். 2007 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடந்த ஒரு நாவல் பட்டறையில்தான் சீ.முத்துசாமியைச் சந்தித்தேன். அப்பொழுது மலேசிய ஞாயிறு பத்திரிகைகளில் நான் எழுதத் துவங்கிய காலக்கட்டம் என்பதால் அவரால் என்னை அடையாளம் காண முடிந்தது. எழுத வரும் இளையோர்களைத் தட்டிக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் படைப்புப் போதாமை குறித்தும் சமரசமில்லாமல் விமர்சிக்கக்கூடிய ஆற்றல் உள்ள ஒரு […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சபரிநாதன் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை

  Posted on June 13, 2017 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு முதன்முறையாக வந்திருந்தபோது எழுத்தாளர் கோணங்கியின் வீட்டில்தான் இரண்டுநாள் தங்கியிருந்தேன். கோவில்பட்டியில் ஊர் முழுவதும் சுற்றி அலைந்துவிட்டு கழுகுமலை சிற்பங்கள், கொஞ்சம் உரையாடல் என பகல் நீர்த்துப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் மழையுடன் சபரிநாதன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். என்னைவிட இளையவரான சபரிநாதனை அவர் வீட்டில் வைத்து நான், செல்மா, யவனிகா, கோணங்கி என நால்வரும் சந்தித்தோம். அப்பொழுது கோணங்கி மிகவும் உற்சாகத்துடன் சபரிநாதனின் ‘களம் – காலம் – ஆட்டம்’ எனும் கவிதை […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • தாவரங்களின் நாவும் மனித தற்கொலைகளும் – The Happening

  Posted on June 9, 2017 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  அம்மா தினமும் காலையில் எழுந்தவுடன் வீட்டின் எதிர்புறத்தில் இரும்பு கதவில் ஊர்ந்து கிடக்கும் கொடியைப் பார்த்துக் கொண்டிருப்பார். ஒவ்வொருநாளும் அதன் அளவு நீண்டு கொண்டே இருக்கும். அதனைப் பார்த்தப்படியேதான் எங்களின் காலை பொழுதுகள் விடியும். கொடி ஊர்வதைப் போல எங்களுக்குள் வீட்டைச் சுற்றியிருக்கும் தாவரங்கள் மீதான அன்பும் ஊர்ந்து ஊறிக் கிடக்கின்றன. அப்பா கொண்டு வந்து சேர்த்த செடிகளில் வர்ணங்கள் எப்பொழுதும் வேறுவேறாகத்தான் தெரியும். காலையில் பார்க்கும்போது இருந்த வர்ணம் மாலையில் சூழலுக்குத் தகுத்தமாதிரி மங்கிப் போயிருக்கும். […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • பேய் விடுதியில் ஒரு நாள்

  Posted on June 7, 2017 by பாலமுருகன் in பத்தி.

  நேற்று முன்தினம் யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்குத் தமிழ்மொழிப் பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காகக் காலையிலேயே ஜாசின் நகரை வந்து சேர்ந்தேன். பரப்பரப்பில்லாத கடைத்தெருக்கள். 200 மீட்டருக்கு ஒருமுறை நாற்சந்தி வட்டம். மீண்டும் மீண்டும் தோன்றி நான்காக உடைந்து மீண்டும் ஒரு சிறிய தெருவையே காட்டி நின்றது. ஒட்டுமொத்தமாக 20 நிமிடத்திலேயே சுற்றிவிட முடிந்த சிறிய நகரம்தான். காலை உணவுக்குப் பிறகு பள்ளிக்குச் செல்லலாம் என முடிவெடுத்த பிறகு ஜாசின் சிறுநகரைச் சுற்றி உணவுக் கடை தேடி அலைந்தேன். திறக்கப்படாத கடைகள் […]

  Share Button
  Continue Reading...
  1 Comment.
 • ஜெயமோகன் வழிநடத்திய மூன்று நாள் நவீன இலக்கிய முகாம்- 2017

  Posted on June 4, 2017 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  கூலிம் நவீன இலக்கியக் களத்தின் ஏற்பாட்டில் கடந்த 2 ஜூன் தொடங்கி 4 ஜூன் வரை கூலிம் சுங்கை கோப் பிரம்மவித்யாரண்யம் மலைச்சாரல் ஆசிரமத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களும் வழிநடத்திய மூன்று நாள் நவீன இலக்கிய முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  நவீன இலக்கியக் களம் நண்பர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக இலக்கியம், ஆன்மீகம், தத்துவம்,உளவியல், வாசிப்பு என்கிற வகையில் தொடர்ந்து கலந்துரையாடல், சந்திப்புகள், இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். அவ்வரிசையில் […]

  Share Button
  Continue Reading...
  2 Comments.