Monthly Archives: January 2018

 • ஓர் ஊருல ஓர் ஆமை இருந்துச்சாம்… அப்புறம் இன்னொரு ஊர்ல இன்னொரு ஆமை இருந்துச்சாம்

  Posted on January 17, 2018 by பாலமுருகன் in பத்தி.

  இன்று சிறுவர்களிடம் கதைக் கேட்கச் சென்றிருந்தேன். வருடத் துவக்கத்தில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலர் எப்பொழுதும் அழுகையுடனும் பயத்துடனும் பள்ளிக்கூடத்தோடு ஒன்ற முடியாமலும் இருப்பார்கள். அவர்களின் பயத்தை உடைக்க நான் வழக்கமாகக் கையாளும் உத்தி, கதைச் சொல்லச் சொல்லிக் கேட்பது. அது அவர்களுக்கு மட்டும் ஒரு வடிக்கால் அல்ல. வருடத் தொடக்கத்தில் பணிச்சுமை கொஞ்சம் அழுத்தமாக இருக்கும் எனக்கும் ஒரு வடிக்கால்தான். அத்தனை நகைச்சுவையும் யதார்த்தமும் நிரம்பிய ஒரு கனநேர பொழுது அது. முதலில் ஒரு மாணவி […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • கணேஷ் பாபுவின் வாசிப்பு – ஒரு கடிதம்

  Posted on January 14, 2018 by பாலமுருகன் in கடிதம்.

    வணக்கம் பாலா, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். என்னுடைய வாசிப்பு குறித்து கேட்டிருந்தீர்கள். என் அம்மா நிறைய வாசிப்பார்கள். சுஜாதாவின் தீவிர வாசகி. அதனால் எனக்கு கணேஷ் என்றும் என் தம்பிக்கு வசந்த் என்றும் பெயரிட்டார்கள். என்னுடைய பள்ளியிறுதி வகுப்பில் அம்மாதான் முதன்முதலில் கல்கியின் பொன்னியின் செல்வனை வாசிக்கத் தூண்டினார்கள். அதன்பின் சரித்திரப் புதினங்கள் அனைத்தையும் வாசித்தேன்(கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், கோவி மணிசேகரன் இவர்கள் எழுதிய அனைத்து நாவல்களையும் வாசித்தேன். பின்னர் அது சலிப்பூட்டத் தொடங்கியதும் பாலகுமாரனை […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுகதை: தங்கவேலுவின் 10ஆம் எண் மலக்கூடம்

  Posted on January 10, 2018 by பாலமுருகன் in சிறுகதைகள்.

  கொஞ்சம்கூட பிசிறில்லாத  சதுர வடிவத்திலான பள்ளிங்கு கற்கள் வெறித்துக் கிடந்தன. கால்களை வைத்து நடக்கவே அசூசையாக இருக்கும்.  நவீன கழிவறை மிக நேர்த்தியான ஒழுங்குடன் கண்ணாடி போன்ற தரை விரிந்து படர மனம் தடுமாறும். மெதுவாக நெகிழிக் கதவைத் தள்ள வேண்டும். ஒரே மையத்தில் போய் குவிந்து கொள்கின்ற கதவு. மீண்டும் இழுத்தால் பழைய நிலைக்கே வந்து கழிவறையை மூடிக் கொள்ளும். இதை இழுத்து உள்ளே நுழையவே சிரமமாக இருந்துவிடுகிறது. சடசடவென ஒரு சத்தம் வேறு. உள்ளே […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • அக்கரைப் பச்சை – 4 : கணேஷ் பாபுவின் கனவுலகவாசிகள்

  Posted on January 6, 2018 by பாலமுருகன் in சிறுகதை விமர்சனம்.

  சிங்கப்பூரில் வசிக்கும் கணேஷ் பாபு பற்றி தோழி சுஜாவிடமிருந்து தெரிந்து கொண்டேன். சிறுகதை எழுத்தாளராகவும் நல்ல விமர்சகராகவும் அறியப்படும் அவர் தங்கமீன் வாசகர் வட்டத்தில் ‘கவிதை இரசனை’ என்கிற நவீன கவிதைகள் பற்றிய ஓர் விமர்சன அங்கத்தையும் பல வருடங்களாக நடத்தி வருகிறார். இலக்கியம் தொடர்பான விமர்சனங்களிலும் விவாதங்களிலும்  தீவிரமாக  ஈடுப்பட்டு வரும் அவருடைய ‘கனவுலகவாசிகள்’ சிறுகதை அக்கரைப் பச்சை தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு படைப்பாளன் தான் வாழும் காலத்தின் சாட்சியமாக இருத்தல் அவசியம். இன்றும் பலர் உடலை இந்நூற்றாண்டில் இருத்திக் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சீ.முத்துசாமி – மலேசிய நவீன இலக்கியத்தின் நேர்மையான குரல்

  Posted on January 5, 2018 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  2017ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதைப் பெற்ற மலேசிய நவீன இலக்கியத்தின் படைப்பிலக்கியக் குரலான சீ.முத்துசாமி அவர்களுக்கு என் வாழ்த்துகள். தமிழ் இலக்கியம் என்றால் அது தமிழகம்தான் என்கிற மாயையைக் களைத்தெறிந்து தமிழர்கள் வாழும் நிலத்தில் பரவியிருக்கும் தமிழிலக்கிய படைப்புகளை, இலக்கிய செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து அதன்பால் தன் ஆழ்ந்த வாசிப்பை முன்னெடுத்து விஷ்ணுபுரம் எனும் அங்கீகாரத்தைத் தந்தமைக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கும் என் நன்றி. விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு சுவாமி பிரம்மாநந்தாவுடன் வருவதற்கான அனைத்துத் திட்டங்களும் இருந்தன. […]

  Share Button
  Continue Reading...
  No Comments.