Monthly Archives: February 2016

 • சுடர் மாணவர்களுக்கான பயிற்சி நூல் வெளியீடை முன்னிட்டு ஆசிரியர், எழுத்தாளர் கே.பாலமுருகனுடன் ஒரு சந்திப்பு

  Posted on February 11, 2016 by பாலமுருகன் in நேர்காணல்கள்.

  தினகரன்: வணக்கம். சுடர் என்கிற பெயர் எப்பொழுது எப்படி அடையாளம் கண்டீர்கள்? கே.பாலமுருகன்: திட்டமிட்டுத் தேர்ந்தெடுத்த பெயர் அல்ல சுடர். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக ஓர் எளிமையான பயிற்சி நூல் தயாரித்து வழங்க வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தேன். ஆண்டு முழுவதும் பல தமிழ்ப்பள்ளிகளுக்குப் பயணித்த அனுபவத்தினூடாக ஒவ்வொரு மாணவர்களுக்குள்ளும் ஒரு தேடல் எப்பொழுதும் சுடர் விட்டுக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. அவர்களின் கேள்விகளும் ஆர்வமுமே அதனைப் பிரதிபலித்தது. ஆகையால், சுடர் என்ற ஒரு சொல் எனக்குள் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • தாரை தப்பட்டை: ஓங்கி ஒலிக்க முடியாத அடித்தட்டு கலை

  Posted on February 9, 2016 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

    100% பாலாவின் வழக்கமான படம். கொஞ்சமும் தன் பாணியைக் காலத்திற்கேற்ப உருமாற்றிக் கொள்ளாத பிடிவாதமான படைப்பாளியின் அரதபழமையான கதை. குரூரமான மனித வதை எல்லோருக்கும் உளவியல் ரீதியில் ஏற்புடையதல்ல என்பதாலேயே தாரை தப்பட்டை மக்கள் மத்தியில் கவனம் பெறவில்லை. கரக்காட்டக்காரர்களின் விளிம்புநிலை வாழ்க்கையைப் பதிவு செய்திருப்பது ஆறுதல். இத்தனை கொடூரமான மனிதர்களை பாலாவினால் மட்டுமே காட்ட முடியும் என நினைக்கிறேன். மையக் கதை, தன்னையே காதலித்து வாழ்ந்த கரக்காட்டக்கார சூராவளியை ஒரு அயோக்கியனுக்குத் திருமணம் செய்து […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • விசாரணை – குரலற்ற மனிதர்களின் மீதான வன்முறை

  Posted on February 7, 2016 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  மிக நீண்ட இடைவேளிக்குப் பிறகு மனத்தை அதிரவைத்த திரைப்படம். நம் மனத்தை ஒரு படம் உலுக்க முடிந்தால் அதைப் படம் என்பதா அல்லது நிஜம் என்பதா? அதிகாரம் எளிய மனிதர்களை உடல்/உள ரீதியில் வதை செய்யும் ஒவ்வொரு காட்சியும் மிரட்டுகிறது. வெற்றி மாறன் தமிழ் சினிமாவின் மாபெரும் கதைச்சொல்லி என்பதில் சந்தேகம் இல்லை. திரையரங்கைவிட்டு ஒரு பெரிய கூட்டமே சத்தமில்லாமல் கனத்த மனத்துடன் வெளியே வந்ததை என் வாழ்நாளில் இன்று மட்டுமே அனுபவித்தேன். ஈவிரக்கமற்ற அமைப்பு தன் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • நான் முக்கியமானதாகக் கருதும் 2015ஆம் ஆண்டின் மிகச் சிறந்த தமிழ்ப்படங்கள்- பாகம் 1

  Posted on February 6, 2016 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  சினிமாவில் நான் எதையும் சாதிக்கப் போவதில்லை. அது என் துறையும் கிடையாது. ஆனால், நான் தீவிரமான சினிமா இரசிகன். சினிமாவில் முக்கியமான கூறுகளான, இசை, ஒளிப்பதிவு, ஒலி, வர்ணம், வசனம், திரைக்கதை, கதை, இயக்கம், பின்னணி இசை என பலவற்றை கூர்ந்து கவனிக்கும் பயிற்சியை உலக சினிமாக்களின் வழியும் சினிமா சார்ந்த நூல்களின் வழியும் பழகிக் கொண்டேன். ஒரு சினிமாவை அதன் கலாச்சாரப் பின்னணியோடும் அந்நாட்டின் அரசியல் சூழலோடும், கலை வெளிபாடுகளுடனும் இணைத்துப் புரிந்து கொள்ளும் விமர்சிக்கும் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.