Monthly Archives: June 2016

 • அசோகமித்ரனின் கண்ணாடி சிறுகதையை முன்வைத்து- சொல்வெளி கலந்துரையாடல்

  Posted on June 22, 2016 by பாலமுருகன் in பத்தி.

  தமிழ் இலக்கிய சூழலில் அசோகமித்ரனின் மிகச் சிறந்த சிறுகதைகள் எனச் சொல்லப்படக்கூடிய புலி கலைஞன், பயணம் போன்ற சிறுகதைகளை வாசிக்க வாய்ப்புக் கிடைத்தபோது அசோகமித்ரனின் கதைஉலகம் தவிர்க்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட, விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மனித மனங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியவை என கடந்தகாலங்களில் அறிய முடிந்தது. ஆனால், சொல்வெளி கலந்துரையாடலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கதை முற்றிலும் அகோகமித்ரனின் வேறொரு கதை உலகத்திற்குள் இட்டுச் சென்றுள்ளது என்றுத்தான் சொல்ல வேண்டும். இங்கு அசோகமித்ரன் என்ற கதைச்சொல்லி வேறொரு அதிர்வலைகளை உருவாக்குகிறார். வேறொரு மனிதர்களைக் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுகதை: மண்டெ

  Posted on June 15, 2016 by பாலமுருகன் in சிறுகதைகள்.

    லோரோங்னா ரோடு. அதுவும் லோரோங் 64ன்னா எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும். நாலு வீடு பெரிய மண்டைங்களோட வீடு. எல்லாம் கஞ்சா தவுக்கே. எவனாவது படம் காட்டெ வந்தானா அவன் மோட்டரெ எரிச்சுருவாங்க. ஆள் மாட்டனா அடிச்சி தூக்கிக் காட்டுல போட்டுருவாங்க. அதுல ஒரு மண்டையெ பாக்கத்தான் பெரிய ஆஸ்ப்பித்திரிக்கு வந்துருக்கென். ரோட்ல லாரிக்காரன் மோதிட்டு ஓடிட்டான். கஞ்சா பாவ் பண்றவனுக்கெல்லாம் இதான் கதின்னு சொல்லிட்டு பொண்டாட்டி பிள்ளைங்களும் பாக்கவே வரல. கேக்கப் போனென். வீட்டுல […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • குழந்தைகள் சினிமா: தனிமை குழந்தைகளின் எதிரி

  Posted on June 5, 2016 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  “ஜப்பானிய சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் விநோதமான ஒரு பழக்கம் தொடங்கியிருந்த காலக்கட்டம். ஒரு தனிமையான அறைக்குள் தன்னைச் சுயமாக அடைத்துக்கொண்டு வீட்டிலுள்ள மனிதர்களைச் சந்திக்காமல், பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல் 9 வருடத்திற்கு மேலாக சுயவதைக்கு ஆளாகியிருந்தார்கள். இவர்களை ஜப்பானிய அரசு ‘hikikoman’ என அடையாளப்படுத்தியது. ஒவ்வொரு வீட்டிலும் நாம் அடிக்கடி வீட்டிற்கு வெளியேயும் அல்லது வீட்டிற்குள்ளேயும் பரவலாகக் காணமுடியாத குழந்தைகள் இருக்கவே செய்கிறார்கள். உறவுக்காரர்கள் நண்பர்கள் வீடு தேடி வரும்போது அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டு நம் பார்வையிலிருந்து […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • துஞ்சல்: இருண்ட மனங்களுக்கிடையே அகவழிப் பயணம்

  Posted on June 1, 2016 by பாலமுருகன் in சிறுகதை விமர்சனம்.

  புனைவுகளைப் பற்றி பேசும்போது எனக்கு எப்பொழுதும் ஒரு தயக்கம் ஏற்படுவதுண்டு. சிறுகதைகள் சொற்களின் ஊடாக மனத்துடன் நூதனமாக உரையாடக்கூடியவை. உரையாடல் என்று சொல்வதைக் காட்டிலும் ஒரு முணுமுணுப்பு என வைத்துக் கொள்ளலாம். மனங்களில் அழுந்தி கிடக்கும் மௌனங்களுக்குத் திறவுக்கோளாக, சொல்லப்படாமல் வெகுநாள் தவித்துக் கொண்டிருந்த மன இருள்களின் மீது பாய்ச்சப்படும் வெளிச்சமாக ஒரு சிறுகதை வளர்ந்து வாசகப் பரப்பில் நிற்கிறது. அதனை எதிர்க்கொள்ளும் ஒரு வாசக மனம் தன்னுள்ளும் இருக்கும் ஏதோ ஒரு புள்ளியுடன் இணைகிறது. தன்னையும் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.