Monthly Archives: July 2016

 • சிறுகதை: இக்கவிதையில் விலங்குகள், பறவைகள் யாவும் துன்புறுத்தப்படவில்லை

  Posted on July 28, 2016 by பாலமுருகன் in சிறுகதைகள்.

  கீழ்க்கண்ட கதையில் வரும் அனைத்து சம்பவங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுபவன அல்ல. கவிதை உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து. அதிகமான கவிதைகள் தீங்கையே விளைவிக்கும். குறிப்பு: இக்கதையில் விலங்குகள் யாவும் துன்புறுத்தப்படவில்லை. நன்றி: இதுவரை கவிதைகளை விடாமல் வாசித்து மருத்துவனையில் சேர்க்கப்பட்டவர்கள்; என் கவிதைகளை வாசித்து இரத்தம் சூடாகி சமூகப் புரட்சிகளில் ஈடுபட்டவர்கள். படிக்கவே இல்லையென்றாலும் அலுக்காமல் ‘லைக்’ போட்ட முகநூல் நண்பர்கள். சிறுகதை:   கண் விழித்தேன். அறையே இருட்டாக இருந்தது. சட்டென படுக்கையைவிட்டு எழும் முன்பே […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுகதை: பறவையே எங்கு இருக்கிறாய்?

  Posted on July 11, 2016 by பாலமுருகன் in சிறுகதைகள்.

  கடைசியாக அலமாரியை எடுத்து வைக்கும்போது எனக்கு மட்டும் கொஞ்சம் இடம் மிச்சமாக இருந்தது. ஓர் ஓரமாகப் போய் நின்று கொண்டால் எப்படியும் இரண்டு மணி நேரம் போகும் கனவுந்து பயணத்தில் கால்களில் வலி இருக்காது. ஒரே தாவில் கனவுந்திற்குள் ஏறினேன். அப்பாவுடைய கனவுந்தில் எல்லாமே எனக்கு பழக்கம். இடையில் ஒரு பலகை அதன் மீது கால் வைத்தால் இலேசாக முனகும். அதைத் தவிர்த்து லாரியில் சுதந்திரமாக நடமாடவும் எகிறிக் குதிக்கவும் எனக்கு நன்றாகத் தெரியும். “கடன்காரனுங்க…” என […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • கவிதையும் குறியீடும் ஓர் உரையாடல் – பாகம் 1

  Posted on July 6, 2016 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  கவிதை ஏன் சத்தமாக மாறியது? புதுக்கவிதையின் எழுச்சியே கவிதையைச் சத்தமிக்கதாக மாற்றியது. ஓங்கி ஒலிக்கக்கூடிய கருவியாக, அடித்தால் எட்டுத் திசைக்கும் எதிரொலிக்கக்கூடிய தம்பட்டமாகக் கவிதை, புதுக்கவிதையின் எழுச்சிமிக்க காலக்கட்டத்தில் தோற்றம் கண்டது. கவிதை மொழியின் மிகவும் மௌனமான குரல் என்பதையும், மொழியின் நுட்பமான நாட்டியம் என்பதைப் பற்றியும் மக்கள் மறந்து கவிதையை மேடையேற்றினார்கள். கொள்கைவாதிகளின் எழுச்சிமிக்க உரைகளில் கவிதை சத்தமாக ஒலிக்கத் துவங்கியது. பின்னர், வானம்பாடி கவிஞர்கள் காலக்கட்டத்தில் அந்த வரிசையைச் சேர்ந்த கவிஞர்கள் புதுக்கவிதைக்கு ஒரு […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுகதை: Torch Light – டார்ச் லைட்

  Posted on July 4, 2016 by பாலமுருகன் in சிறுகதைகள்.

  “சார் கரண்டு இல்ல சார்… இந்த நேரத்துல வந்துருக்கீங்க? என்ன ஆச்சி?” முனியாண்டி அண்ணன் கையில் வைத்திருந்த டார்ச் லைட்டை என் கண்களுக்கு நேராகக் காட்டினார். கண்கள் கூசியதில் தலையை வேறு திசையில் திருப்பியவாறு பதிலளித்தேன். “முக்கியமான பைலு விட்டுட்டேன். நாளைக்கு மீட்டிங்க்கு அது இல்லாமல் போனனா அப்புறம் தலைமை ஆசிரியர் ஏசுவாரு…அதான் எடுத்துப் போலாம்னு வந்தென்” என் பதிலை அவர் கேட்டாரா எனக்கூட தெரியவில்லை. வெளிச்சத்தைக் கக்கத் தடுமாறிய டார்ச் லைட்டை உள்ளங்கையில் வைத்துத் தட்டிக் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுகதை: விசாரிப்பு

  Posted on July 3, 2016 by பாலமுருகன் in சிறுகதைகள்.

  அன்று பெரியசாமி தாத்தாவைப் பார்க்க முடியவில்லை. காலையில் தன் கேள்விகளுடன் தயார்நிலையில் இருக்கும் அடுத்த வீட்டுத் தாத்தாவின் நாற்காலி காலியாக இருந்தது. ஆச்சர்யமாகவும் நிரம்ப மகிழ்ச்சியாகவும் இருந்தது. அமைதியான ஒரு காலையை அன்று தரிசிக்கிறேன். குறிப்பாக விசாரிப்புகள் இல்லாத காலை. எங்கள் வீட்டு மரத்திலிருந்து ஓர் இலை விழுந்தாலும் பெரியசாமி தாத்தாவிடம் சொல்லியாக வேண்டும். அதற்கும் ஒரு நான்கு கேள்விகள் வைத்திருப்பார். அவருடைய வீட்டுக்கு வெளியே மரத்தால் ஆன பெரிய நாற்காலியும் ஒரு மேசையும் போடப்பட்டிருக்கும். இரண்டு […]

  Share Button
  Continue Reading...
  No Comments.