Author Archives: பாலமுருகன்

14 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுத்தால் மட்டுமே நிற்பேன்.
 • அக்கரைப் பச்சை – 1 (சிங்கப்பூர் சிறுகதை விமர்சனம்) அழகுநிலாவின் விரல்

  Posted on December 18, 2017 by பாலமுருகன் in சிறுகதை விமர்சனம்.

  அகநாழிகை இதழின் ஆசிரியரும் அகநாழிகை பதிப்பகத்தின் பதிப்பாளருமான எழுத்தாளர் பொன். வாசுதேவன் அவர்கள் ஜூலை 2017ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தமிழ்ச் சிறுகதைகள் சிலவற்றை ‘அக்கரைப் பச்சை’ என்கிற தலைப்பில் தொகுத்து வெளியீட்டுள்ளார். தற்சமயம் சிங்கையில் தீவிரமாக எழுதி வரும் நண்பர்களின் பலரின் சிறுகதைகளைத் தொகுப்பில் கண்டதும் ஆர்வம் மேலிட்டது. சமீபத்தில் சிங்கையில் வெளிவந்த இத்தொகுப்பின் வழியாக சிங்கப்பூர் நவீனத் தமிழ்ச் சிறுகதைகள் குறித்த ஒரு விரிவான விமர்சனக் கருத்தாக்கத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என நம்புகிறேன். ஒரு […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுகதை: இரண்டு கிலோ மீட்டர்

  Posted on December 13, 2017 by பாலமுருகன் in சிறுகதைகள்.

  சீன மதுபான கடையில் இருக்கும் பூனை அந்த வெற்றிடத்தில் வந்து நின்று மண்ணில் எதையோ தேடிக் கொண்டிருந்தது. புதிதாகப் பார்க்கும் யாவருக்கும் அல்லது அப்பொழுதுதான் அவ்விடத்திற்கு வரும் யாவருக்கும் பூனை இரையைத் தேடிக் கொண்டிருப்பதாகத் தோன்றலாம். மோட்டாரில் வந்து நின்ற எனக்கும் அவ்வெற்றிடம் சட்டென கவனத்தை ஈர்த்தது. தைப்பூசம் நடக்கும் முருகன் கோவிலுக்கு முன்னே இருக்கும் நாற்சந்தி சாலையிலிருந்து 200 மீட்டர் தள்ளிப் போய் நின்றாலோ, தெற்கில் அமைந்திருக்கும் முருகவேல் சாப்பாட்டு கடையிலிருந்து வெளியாகும் யாராக இருந்தாலும் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சினிமாவிற்கும் எனக்குமான இடைவெளி

  Posted on November 30, 2017 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தைத் திரையில் பார்த்துவிட்டு வந்ததும் அதன் நிறைகுறைகளை எழுதி முகநூலில் அல்லது வலைத்தலத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன். ஆனால், இப்பொழுது அவசரம் ஏதுமின்றி மௌனமாகவே இருக்கிறேன். சில சமயங்களில் சினிமா விமர்சனம் எழுதுவது குறித்தே சோம்பல் தட்டிவிட்டது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் உள்ளன. ‘யூடியுப்’ திரைவிமர்சகர்கள் ஏராளமாகப் பெருகி வழிந்து கொண்டிருக்கிறார்கள். தினம் ஒரு பட்த்தை விமர்சனம் செய்து நிறைய வீடியோக்கள் மக்கள் மத்தியில் கவனமும் வரவேற்பும் பெற்று வருகிறது. சினிமாவைப் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • களம் இணைய இதழ் அறிமுகம்

  Posted on October 11, 2017 by பாலமுருகன் in பத்தி.

  இலக்கியத்திற்கான வெளியாக உருவாகியிருக்கும் ‘களம்’ இலக்கிய இணைய இதழ்: http://www.kazhams.com பல திசைகளிலிருந்து புறப்படும் இலக்கிய நகர்ச்சிகள் ஒரு நாட்டில் இலக்கியத்திற்கான வெளியை அதிகமாக்கும் என்கிற புரிதலுடன்தான் இவ்விணைய இதழை ஆரம்பிக்கத் தோன்றியது. எப்பொழுதுமே ஒரு குழுவாகச் செயல்படும்போது சில சமயங்களில் யாரோ ஒருவர் அக்குழுவை வழிநடத்த வேண்டிய தேவை உருவாகிறது. அதனாலேயே களம் இலக்கியக் குழுவாக மாற வேண்டியதன் அவசியத்தைப் பல மாதங்கள் சிந்தித்துக் கொண்டே இருந்தேன். இணைய இதழ் என்றும் வரும்போது அதற்கான குழு […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • நேர்காணல்: சிறுகதை நூல் வெளியீட்டை முன்னிட்டு – ‘படைப்பு என்பது கணிக்கவியலாத ஓர் ஊற்று’ – கே.பாலமுருகன்

  Posted on September 22, 2017 by பாலமுருகன் in நேர்காணல்கள்.

  கேள்வி: எழுத்தாளன் என்பவன் எழுதியே ஆக வேண்டுமா? கே.பாலமுருகன்: வாசிப்பு; இலக்கிய செயல்பாடு; எழுத்து என மூன்றையுமே உள்ளடக்கியவன் தான் எழுத்தாளன். ஆகவே, எழுத்தாளன் என்பவன் சில சமயங்களில் வாசிக்க மட்டுமே செய்வான். அதன் வழி அவன் தன்னைத் தானே கூர்மையாக்கிக் கொள்வான். அல்லது இலக்கியம் தொடர்பான கலந்துரையாடல்கள், நூல் வெளியீடு, விமர்சனக் கூட்டங்கள் என இயங்குவான். தன்னைச் சுற்றியுள்ள சூழலை இலக்கியமாக உருவாக்கிக் கொள்ள செயல்படுவான். இதனைத் தவிர்த்து எழுத்தாளன் தன்னை நிரூபித்துக் கொள்ள எழுதுவான். […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • உயிர்தெழல் : இறந்தகாலத்தின் ஓசைகள் சிறுகதை தொகுப்பிற்கு, எழுத்தாளர் சீ.முத்துசாமியின் முன்னுரை

  Posted on September 9, 2017 by பாலமுருகன் in சிறுகதை விமர்சனம்.

  மரணம் மனிதன் எதிர்க்கொள்ளும் இருண்மை வெளியின் உச்சபட்ச புதிரின் ஆழ்வெளி. பிரக்ஞை அழிந்த வெளி. சன்னஞ் சன்னமாக முழு பிரக்ஞை வெளிக்குள் நிகழும் மரணம் அதற்கு முன்பானது. முதுமையும் வறுமையும் நொய்மையும் சுமந்தபடி, மனிதனுள் நிகழும் அந்த மரணம் துயரமிக்கது. அது வரையிலான அவனது உலகத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடும். ஆழ்கடலின் இருளுக்குள் கைவிடப்பட்ட குழந்தையின் மரண ஓலம் எதிரொலிக்கும் மயானக் காடு. காலம் அவனது உடலுக்குள் புகுத்திவிடும் நோய்மைக்கு நிகராக மனம், மூளை என அவனது […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுகதை: அழைப்பு

  Posted on September 5, 2017 by பாலமுருகன் in சிறுகதைகள்.

    யாரோ, தூரமாகச் சென்றுவிட்ட யாரையோ அழைக்கும் சத்தம். சட்டென மதிய வெய்யிலின் பிடியிலிருந்து எழுந்து நிதானித்தேன். வெகுநாட்களுக்குப் பின் மனத்தில் ஒரு துள்ளல். கடைசியாக எப்பொழுது இப்படியொரு அழைப்பைக் கேட்டிருப்பேன்? ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அரை இருட்டில் இருந்த அறையிலுள்ள மேசை விளக்கைத் தட்டினேன். சுற்றிலும் அடர்த்தியான சன்னல் துணி. வெளிச்சம் உள்ளே வரவேகூடாது என ஆசிரியர் கோபால் எல்லாவற்றையும் அடைத்து வைத்திருந்தார். பள்ளிக்கூடம் முடிந்து அறைக்கு வந்ததும் இருவரும் அதிகம் பேசிக் கொள்ள மாட்டோம். […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுகதை நூல் வெளியீட்டை முன்னிட்டு நேர்காணல்: ‘தனிமைத்தான் எனது ஆத்மப்பூர்வமான ஊக்கியாகும்- கே.பாலமுருகன்’

  Posted on August 8, 2017 by பாலமுருகன் in நேர்காணல்கள்.

  கேள்வி: உங்களின் பின்புலனைப் பற்றி சில வார்த்தைகள் ? கே.பாலமுருகன்: கெடா மாநிலத்தில் பிறந்து இங்கேயே ஆசிரியரராகப் பணியாற்றி வருகிறேன். இதுவரை இலக்கியம், கல்வி என 17 நூல்கள் எழுதியுள்ளேன். தற்சமயம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நாடெங்கும் சிறுகதை எழுதும் பயிலரங்கை வழிநடத்தி வருகிறேன். இலக்கியத்தில் இதுவரை ஆறு விருதுகள் கிடைத்துள்ளன.   கேள்வி: எழுதியே ஆக வேண்டுமென்ற எண்ணம் எப்போது தோன்றியது ? கே.பாலமுருகன்: ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது வாசிப்பின் மீது தீராத ஆர்வமும் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • ‘இறந்தகாலத்தின் ஓசைகள்’ சிறுகதை தொகுப்பில் இருக்கும் என் சிறுகதைகள் பற்றி ஒரு பார்வை

  Posted on August 5, 2017 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  வருகின்ற 19 ஆகஸ்டு 2017 மாலை 6.00 மணிக்குச் சுங்கை பட்டாணியில் தோழி பதிப்பகத்தால் வெளியிடப்படும் என்னுடைய ‘இறந்தகாலத்தின் ஓசைகள்’ சிறுகதை தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதைக்கும் ஒரு பின்னணியும் வரலாறும் உள்ளன. அவற்றை இக்கட்டுரையில் மீட்டுணர்கிறேன். இத்தொகுப்பிற்கான சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்கும் போது நானும் சு.யுவராஜன் அவர்களும் எந்தச் சமரசமும் இல்லாமல்தான் செயல்பட்டோம். தேவையற்றதாக அவர் கருதிய இரண்டு சிறுகதைகளை இத்தொகுப்பிலிருந்து நீக்குவதற்கு நான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. நம்மை விட நம் சிறுகதைகளின் மீது கூர்மையான பார்வையுடையவர்கள் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • திரை ஒப்பீட்டு விமர்சனம்: நிபுணன் vs துருவங்கள் பதினாறு

  Posted on August 1, 2017 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  கொலை, கொலை தொடர்பான விசாரணை என்கிற போக்கில் தமிழ்ப்படங்கள் நிறைய வந்துள்ளன. குறிப்பாக, யுத்தம் செய் சமீபத்திய திரைவரிசையில் முதன்மை வகிக்கிறது. கொரிய மொழியில் வெளியான ‘Memories of murder’ படத்திற்குப் பிறகு வந்த தமிழ்ப்படங்களில் ‘யுத்தம் செய்’ படத்தில் மட்டுமே பெரியளவு தாக்கத்தையும் புதிய கதைச்சொல் முறையையும் கவனிக்க முடிந்தது.   கொலையைக் கண்டறிதல் கொலை தொடர்பான படங்களை மூன்று வகைகளில் புரிந்து கொள்ளலாம். ஒன்று ஒரு கொலையை அல்லது கொலை செய்தவனை நோக்கி விசாரணை […]

  Share Button
  Continue Reading...
  No Comments.