Monthly Archives: November 2016

 • இலக்கியம், விமர்சனம் மற்றும் இலக்கியத்திற்கும் விமர்சனத்திற்கும் இடையிலான தொடர்பும் முரணும் – 2

  Posted on November 28, 2016 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  ‘ஒரு படைப்பின்  உண்மையை நோக்கி விவாதிப்பதுதான் விமர்சனம்’ – கா.நா.சு   இலக்கியத்திற்கும் விமர்சனத்திற்குமான ஓர் அத்தியாவசிய புரிதல் உருவாகியே ஆக வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் இருக்கிறோம். புதிதாகத் தமிழ் இலக்கியத்தை வாசிக்கத் துவங்கும் வாசகனை நோக்கியே கறாராக விவாதிக்க வேண்டிய சூழலில் விமர்சனம் குறித்த என்னுடைய இரண்டாவது கட்டுரையை எழுதுகிறேன். எழுத்தாளர் ஜெயமோகன் சிங்கை இலக்கியம் குறித்து எழுப்பிய கடுமையான விமர்சனங்களின் (என்பதைவிட சமரசமற்ற விமர்சனம் என்றே சொல்லலாம்) தொடர்ச்சியாக விமர்சனத்தின் நிலைப்பாடுகள் குறித்த விவாதம், […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • கவிதை: கொலையுணர்வு

  Posted on November 24, 2016 by பாலமுருகன் in கவிதைகள்.

  கைக்கு எட்டாத கரும்பலகை சொற்களை எகிறி குதித்து அழிக்க முயல்கிறாள் சிறுமி.   ஒவ்வொருமுறையும் கால்கள் தரையைத் தொடும்போது சொற்காளின் பாதி உடல் அழிக்கப்படுகிறது.   எட்டாத சொற்களின் மீத உடலைச் சிதைக்க மீண்டும் குதிக்கிறாள்.   உடலின் மொத்தப்பலத்தை கால்களில் திரட்டி பாய்கிறாள் ஆவேசம்கொண்டு.   கடைசி சொல்லின் உடலை அடையும்வரை சோர்வில்லை விலகலுமில்லை.   கரும்பலகையின் கோடியில் மிச்சமாக இருந்த ஒரு எழுத்தை அழித்துவிட்டப் பிறகு சிறுமியின் முகத்தில் போர் முடிந்த களைப்பு.   […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • நூலாய்வு: உலகின் ஒரே அலைவரிசை/ நாட்டுப்புறப்பாடல்கள் – முத்தம்மாள் பழனிசாமி

  Posted on November 16, 2016 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  நாட்டுப்புற இலக்கியமும் பாடல்களும் உலகம் முழுக்கவும் நாட்டுப்புற இலக்கியங்கள் வெவ்வேறான வடிவங்களில் வாய்மொழியாக அடுத்த தலைமுறைக்குச் சொல்லப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வருகின்றன. லத்தின் அமெரிக்கா நாட்டுப்புற கதைகள், பிரன்ச் நாட்டுப்புறக்கதைகள், வியாட்நாம், என ஒவ்வொரு சமூகமும் நாட்டுப்புற வாழ்வோடு பிணைந்திருக்கின்றன. பாடலும் கதையும்தான் நாட்டுப்புற இலக்கியத்தின் உச்சமான கலை வடிவமாகக் கருதப்படுகின்றன. முதுகுடி மக்களின் வாழ்வும் நிலப்பரப்பும் கதைகளாலும் பாடல்களாலும் ஆனவை. நாட்டுப்புறப்பாடல் என்றால் என்ன? நாட்டுப்புறம் எனச் சொல்லக்கூடிய கிராமமும் கிராமியம் சார்ந்த இடங்களிலும் பாடப்படும்/பாடப்பட்ட பாடல்களை […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • நெருக்கடிகளை எதிர்கொண்டு சமாளிக்கும் மனப்பக்குவத்தை வழங்குவதே வேதாந்தம்

  Posted on November 9, 2016 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  சுவாமி பிரம்மாநந்த சரஸ்வதி அவர்களின் வேதாந்த உரைகள் அடங்கிய தனியன் நூலை முன்வைத்து வாழும் காலத்தில் மனித மனம் வாழ்வியல் தொடர்பான பற்பல கேள்விகளால் அல்லல்படுகிறது. ஒவ்வொரு கேள்வியும் நம்மை வாழ்நாள் முழுவதும் எங்கேங்கோ இழுத்துச் செல்கின்றது. பதில்களின் ஊடாக ஞானக்கீற்று பெறத் தேடித் தேடி களைத்துப்போய் கிடைத்ததைப் பதிலாக்கிக் கொண்டு திரும்புவதுதான் இன்றைய பெரும்பாலோரின் அனுபவம். பதில் யாரிடமிருந்து பெற்றோம் என்கிற ஒன்றே நம்மைத் திருபதிப்படுத்திவிடுகிறது; அல்லது காலம் முழுவதும் மெச்சிக் கொள்ள ஒரு சமாதானத்தை […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • இலக்கியத்தைக் கொல்பவனின் சாட்சியம்: றியாஸ் குரானாவின் கவிதைகள்

  Posted on November 4, 2016 by பாலமுருகன் in கட்டுரைகள்.

    றியாஸ் குரானா – அறிமுகம் தொடக்ககாலக்கட்டத்தில் இலங்கையில் உருவான முதலாளி – பாட்டாளி எனும் இலக்கிய செயற்பாடுகளுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றத்தின் வழி தமிழ் தேசியம் எனும் கட்டமைப்பு போர் காரணமாக அங்கு உருவானது. இந்த மாற்றத்தின்போது பெரும்பான்மையான முஸ்லிம் இலக்கியவாதிகளின் பங்களிப்புகளும் தமிழ் இலக்கியத்துக்கான செயல்பாடுகளும் கவனிக்கப்படாமல் போனது. அவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார்கள். ஆகையால் தமிழ் தேசிய உருவாக்கத்தில் ஒரு கவிஞனாக தனது நிலைப்பாட்டையும் படைப்பையும் நிருபீக்க தொடர்ந்து பலர் போராட வேண்டிய சூழல் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.