Monthly Archives: January 2017

 • விமர்சன யுகத்தில் வாழ்கிறோம்- தொடர் 5 : படைப்பும் விமர்சனமும் வளர்வது வாசிப்பிலேயே)

  Posted on January 21, 2017 by பாலமுருகன் in கட்டுரைகள்.

    பெரும்பான்மையானவர்களுக்கு எதற்கு வாசிக்க வேண்டும் என்கிற கேள்வி காலம் முழுவதும் நாவின் நுனியிலும் மனத்தின் ஆழத்திலும் தொக்கிக் கிடக்கிறது. விமர்சனம் என்பதன் அவசியத்தைப் பேசிக் கொண்டிருக்கும் நாம் வாசிப்பின் தேவையை முன்வைப்பதன் மூலம் விமர்சனத்தை மேலும் கூர்மையாக்க முடியும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியதாகிறது. விமர்சிப்பவர்களுக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. ஒன்று, படைப்பைச் செம்மைப்படுத்த வேண்டும் என்பதும் மற்றொன்று வாசகர்களின் புரிதலுக்குள் புதிய சாத்தியபாடுகளைத் திறந்துவிடுவதற்கும் ஆகும். இவையிரண்டு நோக்கமும் இணையும் புள்ளியிலிருந்து ஓர் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • Dangal – பெண்களின் மீதான அடக்குமுறைகளை வெல்லுதல்

  Posted on January 18, 2017 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  அமீர் கான் அவர்கள் தயாரிக்கும் அனைத்து படங்களும் சமூக அக்கறையும் கலை எழுச்சியுமிக்க படைப்பாக இருக்கும் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படத்தைப் பற்றி வேறு என்ன சொல்வது? இந்திய சினிமாவையே பெருமைப்பட வைத்துள்ளது. இயக்கம், இசை, ஒளிப்பதிவு, கலை, நடிப்பு, திரைக்கதை என அனைத்திலும் ஆய்வுப்பூர்வமாகவும் தெளிவாகவும் படத்தைத் தயாரித்துள்ளார்கள். இந்தியக் கிராமங்களில், மூலை முடுக்குகளில், சமூகத்தின் அடியாழத்தில், திறமையான பெண்கள் நம்பிக்கையுடன் திரைக்குப் பின்னால் காத்திருக்கிறார்கள். அவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்கிற அகத்தூண்டலைப் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • பைரவா: ஒரு திரைப்பார்வை

  Posted on January 14, 2017 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  பரதன் இயக்கத்தில் பொங்கலை முன்னிட்டு வெளியான ‘பைரவா’ திரைப்படத்தின் விமர்சனம் என்பதைவிட ஓர் எளிய திரைப்பார்வை என்றே சொல்லலாம். பெரும்பாலும் தமிழில் வெளிவரும் ‘மாஸ்’ கதாநாயகர்களின் படங்களில் இருக்கும் வழக்கமான ‘பார்மூலாக்கள்’ இப்படத்திலும் இருக்கின்றன. ஆனால், அவற்றுள் நம்மை இரசிக்க வைக்கும் பகுதிகளையும் மனத்தைக் கவலைக்குள்ளாக்கும் பகுதிகளையும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.   விஜய் சண்டைக்காட்சிகளுக்கு மட்டுமே அவருக்கு வாய்ப்பிருந்தது. நடிப்பதற்கான, நடிப்பை வெளிப்படுத்துவதற்கான பகுதிகள் திரைக்கதையில் அத்தனை முக்கியம் பெறவில்லை. ஆனால், சண்டைக்காட்சிகளில் சலிக்காமல் இயந்து போயிருக்கிறார் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுகதை: ரொட்டிப் பாய்

  Posted on January 13, 2017 by பாலமுருகன் in சிறுகதைகள்.

  “அப்பு, இனிமேல நீ ரொட்டிப் பாயைத் துரத்தலாம்டா,” அம்மா சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தியவுடன் அப்படி உரக்கக் கூறியதும் அப்புவின் உலகம் விழித்துக் கொண்டது. அப்பொழுது அப்புவிற்கு ஏழு வயதாகி ஐந்து மாதங்கள் கடந்திருந்தன. இதற்காகத்தான் இந்த ஒரு வார்த்தைக்காகத்தான் அப்பு இரண்டு வருடங்கள் காத்திருந்தான். சிரித்த முகத்துடன் வீட்டின் முன் வந்து நின்று கொண்டான். ரொட்டிப் பாய் வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுதெல்லாம் வாரம் இருமுறை ‘ரொட்டிப் பாய்’ கம்பத்திற்கு வருவதுண்டு. அவர் வரும்போதெல்லாம் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • மொழிச் சிக்கலும் பன்முகச் சூழலும்

  Posted on January 7, 2017 by பாலமுருகன் in கட்டுரைகள்.

    ‘மொழி என்பது ஒரு தொடர்புக் கருவி மட்டுமல்ல; மனிதர்களுக்கிடையே ஓர் உளவியல் சமாதானத்தை வழங்கக்கூடியதும் ஆகும்’ ஆரம்பக் கல்வியை முடித்துவிட்டு இடைநிலைப்பள்ளிக்குச் செல்லும் நம் இந்திய மாணவர்கள் எதிர்க்கொள்ளும் மிகப்பெரிய சிக்கல் பன்முகச் சூழலுக்குள் பொருந்திப் போக முடியாமையே ஆகும். சீன, மலாய் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் உறவாடி, நட்பை ஏற்படுத்திக் கொள்ள நம் இந்திய மாணவர்களுக்குப் பெரும் தடையாக இருப்பது மொழிக் குறித்த சிக்கலே. மிகச் சிறிய வயதிலே அவர்கள் பன்முக சூழலுக்குள் மொழி […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • புதிய திட்டங்களும் பழைய நினைவுகளும் – 2016-லிருந்து 2017-க்கு

  Posted on January 3, 2017 by பாலமுருகன் in பத்தி.

  எப்பொழுதும் கடந்துபோன வருடத்தின் நினைவுகளையும் எதிர்க்கொள்ளப் போகும் வருடத்தின் திட்டங்களையும் எழுதுவது வழக்கமாகும். இன்றோடு (03.01.2017) நான் ஆசிரியர் பணிக்குள் நுழைந்து பத்தாண்டுகள் நிறைவடைகின்றன. 2016ஆம் ஆண்டு எனக்கொரு கத்திமேல் பயணம் மட்டுமே. விருதும் பதவியும் குவிந்தாலும் அதையும் மீறி புகழுக்குள் ஆழ்ந்துபோகாமல் தீமைகளால் மீட்டெடுக்கப்பட்டு நிதானமாக்கப்பட்டேன். எல்லோரும் வயதிற்குரிய வளர்ச்சி கிடையாது; எதுவுமே மெதுவாக நடக்க வேண்டும் ஆனால் உன் வாழ்க்கையில் நீ அடைந்திருப்பது வெகுசீக்கிரமான அடைவுகள் எனச் சொன்னார்கள்; அறிவுரைத்தார்கள். திரும்பிப் பார்க்கிறேன், அப்படியேதும் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுகதை: பூட்டு

  Posted on January 2, 2017 by பாலமுருகன் in சிறுகதைகள்.

  சிறியதாக இன்னும் ஒரு பூட்டு போதும் என முடிவாகிவிட்டதும் உடனே ‘ஆ மேங்’ கடைக்கு இறங்கினேன். மூன்றாவது மாடியிலிருந்து கீழே இறங்கி எதிர்ப்புறம் இருக்கும் பெரிய சாலையைக் கடந்துபோனால் இருக்கும் ஓரே ஒட்டுக் கடை அதுதான். அப்பாவிற்குப் பூட்டென்றால் மிகவும் பிடிக்கும். சதா காலமும் அவருடைய மோட்டார் வண்டியிலும் சிறிய வைப்புப் பெட்டியிலும் பூட்டுகள் இருக்கும். எதையாவது பூட்டியப்படியேதான் இருப்பார். அம்மாவின் அலமாரி, அவருடைய அலமாரி, ஒரு கதவு உடைந்து பாதி சாய்ந்து கிடக்கும் தாத்தாவின் அலமாரி […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • 2016 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்ப்படங்கள் – ஒரு பார்வை

  Posted on January 1, 2017 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  ஒரு வருடத்தில் வெளிவந்த 100க்கும் மேற்பட்ட படங்களைலிருந்து நல்ல சினிமாக்களைத் தொகுத்துப் பார்க்கும் ஒரு முயற்சிக்காகத்தான் சினிமாவைத் தரவரிசைப்படுத்தியுள்ளேன். பற்பல திரைவிமர்சகர்களின் விமர்சனங்களை உட்படுத்தி, என் இரசனைக்குள்ளிருந்து இப்படங்களை முன்மொழிந்துள்ளேன். சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதோடு மட்டும் நின்றுவிட முடியாது. கலைக்கு ஒரு பொறுப்புண்டு என்பதையும் நான் நம்புகிறேன். கலைக்கு ஒரு வெளிப்பாட்டுத்தன்மையும் உண்டு. 2016ஆம் ஆண்டில் வெளிவந்த 191 தமிழ்ப்படங்களில் மிகச் சிறந்த 20 படங்களை இங்கே வரிசைப்படுத்தியுள்ளேன். வணிக ரீதியில் அதிகம் சம்பாரித்த […]

  Share Button
  Continue Reading...
  No Comments.