Monthly Archives: September 2016

 • சிறுகதை: சுருட்டு

  Posted on September 29, 2016 by பாலமுருகன் in சிறுகதைகள்.

    1 பெரியம்மா தலைமுடியை வாரிக் கட்டிக் கொண்டு பெரியப்பாவைக் கெட்ட வார்த்தையிலேயே திட்டிக் கொண்டு மேலே வந்தார். அன்றுத்தான் பெரியம்மா அப்படிப் பேசுவார் எனத் தெரிந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது. பெரியப்பா அண்ணனைத் தூக்கி வரந்தாவில் வீசும்போது அம்மாவும் அங்கு வந்துவிட்டார். அண்ணன் அலறிக் கொண்டு எழ முயன்று மீண்டும் விழுந்தான். “என் சுருட்டெ தொட்டனா…நீ செத்தடா,” எனக் கத்திவிட்டு பெரியம்மா அலறுவதைக்கூட பொருட்படுத்தாமல் பெரியப்பா தன் கையில் வைத்திருந்த சுருட்டை எடுத்து நிதானமாகப் பற்ற வைத்தார். […]

  Share Button
  Continue Reading...
  1 Comment.
 • அனுபவ பத்தி: நல்லவனாக இருப்பது எப்படி?

  Posted on September 27, 2016 by பாலமுருகன் in பத்தி.

  5ஆம் ஆண்டு படிக்கும்போதெல்லாம் வருடத் தொடக்கத்திலேயே எப்படி நல்லவனாக இருப்பது எனத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினேன். காலையில் எழுந்ததும் இன்று பள்ளியிலேயே நான் தான் மிகச்சிறந்த நல்லவனாக இருக்க வேண்டும் என சாமியை வேண்டிக்கொள்வேன். இன்று முதல் நான் நல்லவன் என்பதால் இரண்டுமுறை பல் துலக்கினேன். நல்லவர்களுக்குப் பல் பளிச்சென்று இருந்தால்தான் கவர்ச்சியாக இருக்கும்.   நான்குமுறைக்கும் மேல் கண்ணாடியைப் பார்த்து சிரித்து வைத்தேன். மூன்றுமுறை முட்டிகாலிட்டு சுவரைப் பார்த்து கடவுளை நினைத்து வணங்கினால் எல்லாம் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுகதை: பேபி குட்டி

  Posted on September 25, 2016 by பாலமுருகன் in சிறுகதைகள்.

  கடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடைந்தது. அப்பா கதறி அழும்போது உடன் யாராலும் அழாமல் இருக்க முடியவில்லை. இதுவரை எதற்குமே சட்டென அழாத ஒருவர். அப்படி அழுது கதறும்போது உடல் சிறுத்துக் குழந்தையாகி எல்லோரின் மடியிலும் விழுகிறார். மாணிக்கம் பக்கத்து வீட்டு ஆள். அப்பாவின் நெருங்கிய உலகமே அவர்தான். அவருக்குச் சொல்லும்படியாக நண்பர்கள் இல்லை. ஒரு வீடு தள்ளிக்கூட யார் இருக்கிறார்கள் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுகதை: மஞ்சள் நிறத் தேவதையின் மரணக்குறிப்புகள்

  Posted on September 20, 2016 by பாலமுருகன் in சிறுகதைகள்.

    1 சரவணன் கண்களைத் திறந்ததும் முனியாண்டியின் படுக்கைக் காலியாகியிருந்ததைப் பார்த்தான்.  நான்கு நாட்களுக்கு முந்தைய ஓர் இரவில் 9.00 மணிவரை முனியாண்டி தனது தேவதைகளுடன் இங்குதானே இருந்தார் என்ற வியப்புடன் சரவணன் சோம்பலேறிய கண்களுடன் அறையின் சின்ன இருட்டில் இலேசாகத் திறந்திருக்கும் ஜன்னல் பக்கமாகப் பார்த்தான். முனியாண்டியின் அந்த நீல நிறச் சட்டை தொங்கிக் கொண்டிருக்கும் கறுத்த ஆணி இன்னமும் காலியாகச் சுவரில் ஒட்டிக் கொண்டிருந்தது. “அப்பா. .  காராக் ஹைவேலெ(Karak Highway) வந்துகிட்டு இருக்கும் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • மலேசியத் தினத்தை முன்னிட்டு ஒரு நேர்காணல்- ‘ஒருவனுக்கு ஆபத்து என்றால் அவன் எந்த இனம் எனப் பார்த்துவிட்டு உதவும் பழக்கம் மலேசியர்களுக்கு இல்லை’ – கே.பாலமுருகன்

  Posted on September 16, 2016 by பாலமுருகன் in நேர்காணல்கள்.

  நேர்காணல்: செ.காஞ்சனா, 16.09.2016   காஞ்சனா: வணக்கம் ஐயா. இன்று மலேசிய தினம். எப்படி உணர்கிறீர்கள்? கே.பாலமுருகன்: மிகவும் மகிழ்ச்சியான நாள். சுதந்திரத் தினம் முடிந்து சில நாட்களிலேயே அடுத்து மீண்டும் உற்சாகமான நாளாக இது அமைந்திருக்கிறது. இன்றைய காற்றில் என் முன்னோர்களின் குரலும் வியர்வையும் கலந்து வீசுகிறது. காஞ்சனா: யார் உங்கள் முன்னோர்கள் எனச் சொல்கிறீர்கள்? உங்கள் தாத்தா பாட்டியா? கே.பாலமுருகன்: என் தாத்தா பாட்டி என்றில்லை. இங்கு மலேசியா வந்து இப்படியொரு தலைமுறை இங்கேயே […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • Train to Busan – கொரிய சினிமா / அறம் என்பது சமூகத்தின் கட்டமைக்கப்பட்ட பொதுவிதிகளுக்கு உடந்தையாவதாகும்

  Posted on September 14, 2016 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

    “Selfish people are weak and are haunted by the fear of loss of control” Selfishness is putting your goals, priorities and needs first before everyone else even those who are really in need. By M.Farouk Radwan, MSc. மேற்சொல்லப்பட்டிருப்பதைப் போல சுயநலம் என்பது ஒரு வகையான மனநோய் தொடர்புடையது எனத் தெரிந்து கொள்ளலாம். இதைத்தான் இன்றைய உளவியல் பகுப்பாய்களும் நிறுவுகின்றன. ஆனால், சுயநலம் என்பது […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுகதை: சற்று முன்பு சமூகம் கடத்தப்பட்டது

  Posted on September 12, 2016 by பாலமுருகன் in சிறுகதைகள்.

  அன்று அப்படி நடக்கும் என யாருமே எதிர்ப்பார்க்கவில்லை. இரவோடு இரவாக அந்தக் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. இரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது அச்சமூகத்தை அப்படியே யாரோ தூக்கிக் கொண்டு வந்து நடு வீதியில் வைத்துவிட்டார்கள். புதிய நாகரிகம், புதிய இடம், புதிய மக்கள். சமூகத்தில் இருந்த அத்தனை பேரும் காலையில் எழுந்ததும் திடுக்கிட்டுப் போனார்கள். ஒருவருக்கும் என்ன செய்வதென்றும் தெரியவில்லை. யார் தம்மை இப்படித் தூக்கி வந்து போட்டிருப்பார்கள் என்றும் அவர்களுக்கு விளங்கவில்லை. சமூகம் வெளியே வந்து பார்த்தது. […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சொற்களின் பொறியியளாளர்களே கவிஞர்கள் – கவிதை குறித்த உரையாடல் பாகம் 2

  Posted on September 8, 2016 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  கவிதை ஒரு போர் என கடந்த நூற்றாண்டில் ஒரு மனப்பழக்கம் யாருக்கோ தோன்றியிருக்கலாம். அது ஒரு தொற்று நோயாக எல்லோருக்கும் பரவி உலகம் முழுவதும் இந்த நூற்றாண்டுவரை கவிதையை கூக்குரலின் / கூச்சலின் ஆயுதமாகப் பாவித்துக் கொண்டிருக்கிறார்களோ என நினைக்கத் தோன்றுகிறது. சே குவாரின் கோபம் புரட்சியானது; பாரதியாரின் கோபம் கவிதையானது என எங்கேயோ வாசித்ததாக நினைவு. ஆக, கவிதை உருக்கொண்டு வெளிவர ஓர் உணர்வு தேவையானதாக இருந்திருக்கிறது. அது கோபமாக இருக்கலாம்; கவலையாக இருக்கலாம்; ஆனால், […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • கைவிடப்பட்ட ஒரு பேனாவின் கதை

  Posted on September 5, 2016 by பாலமுருகன் in சிறுகதைகள்.

  அரைமயக்கத்தில் இருக்கும் சிறு பட்டணத்தில் கைவிடப்பட்ட ஒரு பேனாவின் கதை இது. சரியாக மாலை 4.00 மணியைப் போல ஒரு சீன சாப்பாட்டுக் கடையில் அப்பேனா கைவிடப்பட்டது. ‘பார்க்கர்’ பேனா. மூடியில் ஒரு சிறிய கோடு. உடலில் பாதி மை மிச்சமாக இருந்திருக்கக்கூடும். யார் அதனுடைய முதலாளி என்றெல்லாம் தெரியவில்லை. சப்பாட்டுக் கடையின் மிச்ச உணவை எடுக்க வரும் ஒரு கிழவர் அங்கே வந்தார். வெகுநேரம் அந்தப் பேனா இருந்த மேசையையே கவனித்துக் கொண்டிருந்தார். அவர் அப்படியொரு […]

  Share Button
  Continue Reading...
  No Comments.