Category Archives: கட்டுரைகள்

 • சீ.முத்துசாமி – மலேசிய நவீன இலக்கியத்தின் நேர்மையான குரல்

  Posted on January 5, 2018 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  2017ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதைப் பெற்ற மலேசிய நவீன இலக்கியத்தின் படைப்பிலக்கியக் குரலான சீ.முத்துசாமி அவர்களுக்கு என் வாழ்த்துகள். தமிழ் இலக்கியம் என்றால் அது தமிழகம்தான் என்கிற மாயையைக் களைத்தெறிந்து தமிழர்கள் வாழும் நிலத்தில் பரவியிருக்கும் தமிழிலக்கிய படைப்புகளை, இலக்கிய செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து அதன்பால் தன் ஆழ்ந்த வாசிப்பை முன்னெடுத்து விஷ்ணுபுரம் எனும் அங்கீகாரத்தைத் தந்தமைக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கும் என் நன்றி. விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு சுவாமி பிரம்மாநந்தாவுடன் வருவதற்கான அனைத்துத் திட்டங்களும் இருந்தன. […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • ‘இறந்தகாலத்தின் ஓசைகள்’ சிறுகதை தொகுப்பில் இருக்கும் என் சிறுகதைகள் பற்றி ஒரு பார்வை

  Posted on August 5, 2017 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  வருகின்ற 19 ஆகஸ்டு 2017 மாலை 6.00 மணிக்குச் சுங்கை பட்டாணியில் தோழி பதிப்பகத்தால் வெளியிடப்படும் என்னுடைய ‘இறந்தகாலத்தின் ஓசைகள்’ சிறுகதை தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதைக்கும் ஒரு பின்னணியும் வரலாறும் உள்ளன. அவற்றை இக்கட்டுரையில் மீட்டுணர்கிறேன். இத்தொகுப்பிற்கான சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்கும் போது நானும் சு.யுவராஜன் அவர்களும் எந்தச் சமரசமும் இல்லாமல்தான் செயல்பட்டோம். தேவையற்றதாக அவர் கருதிய இரண்டு சிறுகதைகளை இத்தொகுப்பிலிருந்து நீக்குவதற்கு நான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. நம்மை விட நம் சிறுகதைகளின் மீது கூர்மையான பார்வையுடையவர்கள் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • ஒளி என்பது வெளுப்பான இருட்டு- கே.பாலமுருகனின் சிறுகதைகள் விமர்சனம்

  Posted on June 29, 2017 by பாலமுருகன் in கட்டுரைகள், சிறுகதை விமர்சனம்.

           இருள் என்பது குறைந்த ஒளி என்கிற பாரதியின் கூற்றை முற்றமுழுக்க மறுதலிப்பவராய் தெரிகிறார் பாலமுருகன். அவரைப் பொறுத்தவரை ஒளி என்பதேகூட வெளுப்பான இருட்டுதான் போலும். ஆமாம், அவருக்கு பூமியே ஒரு இருளுருண்டையாகத்தான் தெரிகிறது. எனவே அவரது கதையுலகமும் இருளுக்குள் தான் இயங்குகிறது. இருட்டு இருட்டு என்று இருட்டைப் பற்றியே இத்தனைக் கதைகள் எழுத முடியுமா என்கிற மலைப்பு ஒருபுறமிருக்க அதைப் பற்றி இன்னும் சொல்லிமுடிக்கவில்லை என்கிற ஒரு துயரத்தோடுதான் அவரது ஒவ்வொரு கதையும் முடிந்திருக்கிறது என்பதைத்தான் […]

  Share Button
  Continue Reading...
  1 Comment.
 • யார் கொலையாளி? – பாகம் 2 ( ஒரு விசாரணைத் தொடர்)

  Posted on June 25, 2017 by பாலமுருகன் in யார் கொலையாளி?.

  கொல்லப்பட்டவளைப் பற்றிய விவரங்கள்: இறந்தவரின் பெயர்: தினேஸ்வரி இடம்: சேலாயாங் அம்பாட் அடுக்குமாடி கொல்லப்பட்டவைக்கான காரணம்: தெரியவில்லை கொல்லப்பட்ட விதம்: மணிக்கட்டில் சிறிய வெட்டுக்காயம், தலையில் மண்டை ஓட்டில் சிறிய பிளவு (கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்), ஆங்காங்கே இரத்தக் கசிவு. கொலை கண்டறியப்பட்ட நேரம்: 21 ஜூன் 2017, இரவு 8.45க்கு கொலை செய்யப்பட்ட நாள்: கண்டறியப்பட்ட நாளில்  கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொல்லப்பட்டவரின் சில விவரங்கள்: ஒரு தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவி. சொந்த வீடு டாமான்சாரா. […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சீ.முத்துசாமி சிறுகதைகளில் குறியீட்டு மொழி ஓர் ஆய்வு

  Posted on June 21, 2017 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  இலக்கியம் என்பது மொழியின் ஊடாக நிகழ்த்தப்படும் கலையாகும். மொழியே பிரதானமாக இருந்து இலக்கியப் படைப்புகளுக்கு வெளிப்பாட்டு தளத்தை உருவாக்குகிறது. மொழி என்பது காட்சிகளின், பொருள்களின், செயல் வடிவங்களின் பிரதிநிதியாக குறியீட்டு ஒழுங்குகளால் கட்டமைக்கப்பட்டுள்ளன. சொல் என்பதே ஒரு பொருளைக் குறிக்கும் பொருட்டு உருவானதே. பின்னர், அப்பொருள் சார்ந்து செயல் வடிவங்களுக்குரிய சொற்கள் பிறந்தன என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். அதே மொழியைக் கொண்டுத்தான் மனிதன் தன் உணர்வுகளை நூதனமான முறையில் படைப்பிலக்கியத் திறன்களோடு இலக்கியமாகப் படைக்கத் துவங்கினான். அத்தகைய […]

  Share Button
  Continue Reading...
  1 Comment.
 • சபரிநாதன் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை

  Posted on June 13, 2017 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு முதன்முறையாக வந்திருந்தபோது எழுத்தாளர் கோணங்கியின் வீட்டில்தான் இரண்டுநாள் தங்கியிருந்தேன். கோவில்பட்டியில் ஊர் முழுவதும் சுற்றி அலைந்துவிட்டு கழுகுமலை சிற்பங்கள், கொஞ்சம் உரையாடல் என பகல் நீர்த்துப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் மழையுடன் சபரிநாதன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். என்னைவிட இளையவரான சபரிநாதனை அவர் வீட்டில் வைத்து நான், செல்மா, யவனிகா, கோணங்கி என நால்வரும் சந்தித்தோம். அப்பொழுது கோணங்கி மிகவும் உற்சாகத்துடன் சபரிநாதனின் ‘களம் – காலம் – ஆட்டம்’ எனும் கவிதை […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • ஜெயமோகன் வழிநடத்திய மூன்று நாள் நவீன இலக்கிய முகாம்- 2017

  Posted on June 4, 2017 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  கூலிம் நவீன இலக்கியக் களத்தின் ஏற்பாட்டில் கடந்த 2 ஜூன் தொடங்கி 4 ஜூன் வரை கூலிம் சுங்கை கோப் பிரம்மவித்யாரண்யம் மலைச்சாரல் ஆசிரமத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களும் வழிநடத்திய மூன்று நாள் நவீன இலக்கிய முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  நவீன இலக்கியக் களம் நண்பர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக இலக்கியம், ஆன்மீகம், தத்துவம்,உளவியல், வாசிப்பு என்கிற வகையில் தொடர்ந்து கலந்துரையாடல், சந்திப்புகள், இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். அவ்வரிசையில் […]

  Share Button
  Continue Reading...
  3 Comments.
 • சிறுகதை முடிவு – ஒரு பார்வை- முடிவென்பது முடிந்து தொடங்கும் வித்தை.

  Posted on May 3, 2017 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  (சிங்கப்பூர் சிறுகதை பயிலரங்கில் ‘ஸ்கைப்’ உரையாடலின் வழி படைக்கப்பட்ட கட்டுரை- இடம்: சிங்கை நூலகம்) ‘ஒரு சிறுகதை முடிந்த பிறகுத்தான் தொடங்குகிறது‘ என்பார்கள். ஒரு சிறுகதையின் மொத்த அழுத்தமும் அதன் முடிவில்தான் இருக்கிறது. கதைக்குள் நுழையும் வாசகன் எதிர்க்கொள்ளும் மாபெரும் திறப்பு அக்கதையின் முடிவில் வைப்பதன் மூலமே அக்கதையைக் காலம் முழுவதும் அவன் மனத்தில் சுமந்து திரிய வாய்ப்புண்டு. சிறுகதையின் முடிவென்றால் சிறுகதையை முடிப்பதல்ல. இன்றைய பலரும் சிறுகதையின் முடிவு என்பதை ஆகக் கடைசியான முற்றுப் புள்ளி […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • யார் கொலையாளி – பாகம் 1

  Posted on February 3, 2017 by பாலமுருகன் in கட்டுரைகள், யார் கொலையாளி?.

  கொல்லப்பட்டவனைப் பற்றிய விவரங்கள்: இறந்தவன் பெயர்: வினோத் இடம்: தாமான் கெனாரி கொல்லப்பட்டவைக்கான காரணம்: தெரியவில்லை கொல்லப்பட்ட விதம்: கத்தியால் முகம் கீறப்பட்டுள்ளது. முகத்தில் மட்டும் 13 வெட்டுக் காயங்கள். கழுத்தில் ஆழமான வெட்டில் உயிர் போயிருக்கிறது. அவனுடைய சமையலறையில் கிடந்தான். கொலை கண்டறியப்பட்ட நேரம்: 21 மார்ச் 2016, காலை மணி 9.15க்கு கொலை செய்யப்பட்ட நாள்: கண்டறியப்பட்ட நாளிலிருந்து இரண்டு நாளுக்கு முன்பு, இரவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம். கொல்லப்பட்டவனின் சில விவரங்கள்: ஒரு தொழிற்சாலையில் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • விமர்சன யுகத்தில் வாழ்கிறோம்- தொடர் 5 : படைப்பும் விமர்சனமும் வளர்வது வாசிப்பிலேயே)

  Posted on January 21, 2017 by பாலமுருகன் in கட்டுரைகள்.

    பெரும்பான்மையானவர்களுக்கு எதற்கு வாசிக்க வேண்டும் என்கிற கேள்வி காலம் முழுவதும் நாவின் நுனியிலும் மனத்தின் ஆழத்திலும் தொக்கிக் கிடக்கிறது. விமர்சனம் என்பதன் அவசியத்தைப் பேசிக் கொண்டிருக்கும் நாம் வாசிப்பின் தேவையை முன்வைப்பதன் மூலம் விமர்சனத்தை மேலும் கூர்மையாக்க முடியும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியதாகிறது. விமர்சிப்பவர்களுக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. ஒன்று, படைப்பைச் செம்மைப்படுத்த வேண்டும் என்பதும் மற்றொன்று வாசகர்களின் புரிதலுக்குள் புதிய சாத்தியபாடுகளைத் திறந்துவிடுவதற்கும் ஆகும். இவையிரண்டு நோக்கமும் இணையும் புள்ளியிலிருந்து ஓர் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.