Category Archives: கட்டுரைகள்

 • விமர்சனத்திற்கும் பின் நவீனத்துவத்திற்குமிடையே உள்ள தொடர்பின் அவசியங்கள் – (தொடர் 4)

  Posted on December 28, 2016 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  அடுத்தத் தொடரில் இலக்கியத்தின் மொழிப்பயன்பாடு குறித்து உரையாடுவதற்கு முன்பாக… பின்நவீனம் என்றால் என்ன என்கிற தேடலைவிட பின்நவீனம் என்றால் இதுதான், இவ்வளவுத்தான் என்கிற அவசரமான முன்முடிவுகள் மலேசியச் சிந்தனைப்பரப்பில் நிலைத்துவிட்டது. நவீனத்துவத்தின் விளைவுகளால் உருவான ‘அதிகார மையங்கள்’, மெல்ல கண்டடையப்பட்ட பின் உருவான சிந்தனைமுறை என்கிற அளவில் பின்நவீனம் பற்றிய ஒரு தீவிரமான கலந்துரையாடல்கூட இங்குப் பரவலாக நிகழவில்லை என்பதுதான் நிதர்சனம். அவ்வகையில் விமர்சனம் பற்றி நாம் அக்கறையுடன் உரையாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் விமர்சனமுறையில் பின்நவீன சிந்தனை […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • விமர்சன யுகத்தில் வாழ்கிறோம் (தொடர்- 3) ‘வாசிப்பில்லாத படைப்பாளிகளின் படைப்புகளில் எப்பொழுதும் ஒரு சாயம் வெளுத்துப் போகக் காத்திருக்கும்’

  Posted on December 21, 2016 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  ஏன் விமர்சிக்க வேண்டும்? விமர்சனம் என்றால் என்ன? அதனுடைய பாதிப்புகள் என்ன? விமர்சனத்திற்குரிய மொழி எப்படி இருக்க வேண்டும்? எனக் கடந்த கட்டுரைகளில் கவனித்துவிட்டாயிற்று. சங்க இலக்கியம் தொடங்கி இன்றையநாள் எழுதப்படும் நவீனத்துவ இலக்கியம்வரை அனைத்துமே விமர்சனங்களின் ஊடே முன்னகர்ந்து வந்திருக்கிறன. மேலைநாட்டு இலக்கியம், செவ்விலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், பின்நவீன இலக்கியம், உலக இலக்கியம், மரபிலக்கியம், சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தின் கிளைகள் வளர்ந்தோங்கி நிற்கும் ஒரு காலக்கட்டத்தைத் தாண்டி இன்று அவையாவற்றையும் மீள்வாசிப்பு செய்து விமர்சிக்கும் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • இலக்கியம், விமர்சனம் மற்றும் இலக்கியத்திற்கும் விமர்சனத்திற்கும் இடையிலான தொடர்பும் முரணும் – 2

  Posted on November 28, 2016 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  ‘ஒரு படைப்பின்  உண்மையை நோக்கி விவாதிப்பதுதான் விமர்சனம்’ – கா.நா.சு   இலக்கியத்திற்கும் விமர்சனத்திற்குமான ஓர் அத்தியாவசிய புரிதல் உருவாகியே ஆக வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் இருக்கிறோம். புதிதாகத் தமிழ் இலக்கியத்தை வாசிக்கத் துவங்கும் வாசகனை நோக்கியே கறாராக விவாதிக்க வேண்டிய சூழலில் விமர்சனம் குறித்த என்னுடைய இரண்டாவது கட்டுரையை எழுதுகிறேன். எழுத்தாளர் ஜெயமோகன் சிங்கை இலக்கியம் குறித்து எழுப்பிய கடுமையான விமர்சனங்களின் (என்பதைவிட சமரசமற்ற விமர்சனம் என்றே சொல்லலாம்) தொடர்ச்சியாக விமர்சனத்தின் நிலைப்பாடுகள் குறித்த விவாதம், […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • நூலாய்வு: உலகின் ஒரே அலைவரிசை/ நாட்டுப்புறப்பாடல்கள் – முத்தம்மாள் பழனிசாமி

  Posted on November 16, 2016 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  நாட்டுப்புற இலக்கியமும் பாடல்களும் உலகம் முழுக்கவும் நாட்டுப்புற இலக்கியங்கள் வெவ்வேறான வடிவங்களில் வாய்மொழியாக அடுத்த தலைமுறைக்குச் சொல்லப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வருகின்றன. லத்தின் அமெரிக்கா நாட்டுப்புற கதைகள், பிரன்ச் நாட்டுப்புறக்கதைகள், வியாட்நாம், என ஒவ்வொரு சமூகமும் நாட்டுப்புற வாழ்வோடு பிணைந்திருக்கின்றன. பாடலும் கதையும்தான் நாட்டுப்புற இலக்கியத்தின் உச்சமான கலை வடிவமாகக் கருதப்படுகின்றன. முதுகுடி மக்களின் வாழ்வும் நிலப்பரப்பும் கதைகளாலும் பாடல்களாலும் ஆனவை. நாட்டுப்புறப்பாடல் என்றால் என்ன? நாட்டுப்புறம் எனச் சொல்லக்கூடிய கிராமமும் கிராமியம் சார்ந்த இடங்களிலும் பாடப்படும்/பாடப்பட்ட பாடல்களை […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • நெருக்கடிகளை எதிர்கொண்டு சமாளிக்கும் மனப்பக்குவத்தை வழங்குவதே வேதாந்தம்

  Posted on November 9, 2016 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  சுவாமி பிரம்மாநந்த சரஸ்வதி அவர்களின் வேதாந்த உரைகள் அடங்கிய தனியன் நூலை முன்வைத்து வாழும் காலத்தில் மனித மனம் வாழ்வியல் தொடர்பான பற்பல கேள்விகளால் அல்லல்படுகிறது. ஒவ்வொரு கேள்வியும் நம்மை வாழ்நாள் முழுவதும் எங்கேங்கோ இழுத்துச் செல்கின்றது. பதில்களின் ஊடாக ஞானக்கீற்று பெறத் தேடித் தேடி களைத்துப்போய் கிடைத்ததைப் பதிலாக்கிக் கொண்டு திரும்புவதுதான் இன்றைய பெரும்பாலோரின் அனுபவம். பதில் யாரிடமிருந்து பெற்றோம் என்கிற ஒன்றே நம்மைத் திருபதிப்படுத்திவிடுகிறது; அல்லது காலம் முழுவதும் மெச்சிக் கொள்ள ஒரு சமாதானத்தை […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • இலக்கியத்தைக் கொல்பவனின் சாட்சியம்: றியாஸ் குரானாவின் கவிதைகள்

  Posted on November 4, 2016 by பாலமுருகன் in கட்டுரைகள்.

    றியாஸ் குரானா – அறிமுகம் தொடக்ககாலக்கட்டத்தில் இலங்கையில் உருவான முதலாளி – பாட்டாளி எனும் இலக்கிய செயற்பாடுகளுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றத்தின் வழி தமிழ் தேசியம் எனும் கட்டமைப்பு போர் காரணமாக அங்கு உருவானது. இந்த மாற்றத்தின்போது பெரும்பான்மையான முஸ்லிம் இலக்கியவாதிகளின் பங்களிப்புகளும் தமிழ் இலக்கியத்துக்கான செயல்பாடுகளும் கவனிக்கப்படாமல் போனது. அவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார்கள். ஆகையால் தமிழ் தேசிய உருவாக்கத்தில் ஒரு கவிஞனாக தனது நிலைப்பாட்டையும் படைப்பையும் நிருபீக்க தொடர்ந்து பலர் போராட வேண்டிய சூழல் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு 2016 ஒரு பார்வை : 21ஆம் நூற்றாண்டு சவால்களை எதிர்கொள்ளும் மலேசியத் தமிழ்க்கல்வியின் 200 ஆண்டுகளின் பயணம்.

  Posted on October 24, 2016 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  20 – 23 அக்டோபர் 2016ஆம் நாட்களில் ஏய்ம்ஸ்ட் கெடா அறிவியல் பல்கலைக்கழகத்தில் கல்வி அமைச்சு ஏற்பாட்டில் மலேசிய வடமாநிலத் தமிழாசிரியர்களுக்கான பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு சிறப்பாக நடந்தேறியது. இது என்னுடைய ஐந்தாவது மாநாட்டு அனுபவம் ஆகும். ஏற்கனவே இரண்டுமுறை கட்டுரை வாசித்துள்ளேன். இது மூன்றாவது முறையாகக் கட்டுரையைப் படைத்துள்ளேன். கெடா மாநில மொழித்துறை துணை இயக்குனர் திரு.பெ.தமிழ்செல்வன் அவர்களால் தகவல் வழங்கப்பட்டு ஏழு பேரின் கட்டுரைகள் மாநாட்டுக் குழுவால் ஏற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டு […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • படைப்புகளை மறுகண்டுபிடிப்பு செய்வதே விமர்சனம் – பாகம் 1

  Posted on October 10, 2016 by பாலமுருகன் in கட்டுரைகள்.

    08.11.2001 – ஆம் நாளில் தினமணியில் அசோகமித்திரன் எழுதிய ‘பொருந்தாத அளவுக்கோல்கள்’ எனும் கட்டுரையைப் படித்த சுந்தர ராமசாமி அதே தினமணி பத்திரிகையில் மிகவும் வெளிப்படையாக அசோகமித்ரனின் அக்கட்டுரையை மறுக்கிறார். ஆனால், அவர் அத்தகைய சூழலை அணுகும் விதத்தை நாம் கவனிக்க வேண்டும். “தினமணியில் அசோகமித்ரன் எழுதிய ‘பொருந்தாத அளவுக்கோல்கள்’ எனும் கட்டுரையைப் படித்தேன். அவர் முன்வைத்துள்ள எந்தக் கருத்தையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மாறுப்பட்ட என் கருத்துகளை இங்கே முன் வைக்கிறேன்” என […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சொற்களின் பொறியியளாளர்களே கவிஞர்கள் – கவிதை குறித்த உரையாடல் பாகம் 2

  Posted on September 8, 2016 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  கவிதை ஒரு போர் என கடந்த நூற்றாண்டில் ஒரு மனப்பழக்கம் யாருக்கோ தோன்றியிருக்கலாம். அது ஒரு தொற்று நோயாக எல்லோருக்கும் பரவி உலகம் முழுவதும் இந்த நூற்றாண்டுவரை கவிதையை கூக்குரலின் / கூச்சலின் ஆயுதமாகப் பாவித்துக் கொண்டிருக்கிறார்களோ என நினைக்கத் தோன்றுகிறது. சே குவாரின் கோபம் புரட்சியானது; பாரதியாரின் கோபம் கவிதையானது என எங்கேயோ வாசித்ததாக நினைவு. ஆக, கவிதை உருக்கொண்டு வெளிவர ஓர் உணர்வு தேவையானதாக இருந்திருக்கிறது. அது கோபமாக இருக்கலாம்; கவலையாக இருக்கலாம்; ஆனால், […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • கவிதையும் குறியீடும் ஓர் உரையாடல் – பாகம் 1

  Posted on July 6, 2016 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  கவிதை ஏன் சத்தமாக மாறியது? புதுக்கவிதையின் எழுச்சியே கவிதையைச் சத்தமிக்கதாக மாற்றியது. ஓங்கி ஒலிக்கக்கூடிய கருவியாக, அடித்தால் எட்டுத் திசைக்கும் எதிரொலிக்கக்கூடிய தம்பட்டமாகக் கவிதை, புதுக்கவிதையின் எழுச்சிமிக்க காலக்கட்டத்தில் தோற்றம் கண்டது. கவிதை மொழியின் மிகவும் மௌனமான குரல் என்பதையும், மொழியின் நுட்பமான நாட்டியம் என்பதைப் பற்றியும் மக்கள் மறந்து கவிதையை மேடையேற்றினார்கள். கொள்கைவாதிகளின் எழுச்சிமிக்க உரைகளில் கவிதை சத்தமாக ஒலிக்கத் துவங்கியது. பின்னர், வானம்பாடி கவிஞர்கள் காலக்கட்டத்தில் அந்த வரிசையைச் சேர்ந்த கவிஞர்கள் புதுக்கவிதைக்கு ஒரு […]

  Share Button
  Continue Reading...
  No Comments.