Yearly Archives: 2016

 • விமர்சனத்திற்கும் பின் நவீனத்துவத்திற்குமிடையே உள்ள தொடர்பின் அவசியங்கள் – (தொடர் 4)

  Posted on December 28, 2016 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  அடுத்தத் தொடரில் இலக்கியத்தின் மொழிப்பயன்பாடு குறித்து உரையாடுவதற்கு முன்பாக… பின்நவீனம் என்றால் என்ன என்கிற தேடலைவிட பின்நவீனம் என்றால் இதுதான், இவ்வளவுத்தான் என்கிற அவசரமான முன்முடிவுகள் மலேசியச் சிந்தனைப்பரப்பில் நிலைத்துவிட்டது. நவீனத்துவத்தின் விளைவுகளால் உருவான ‘அதிகார மையங்கள்’, மெல்ல கண்டடையப்பட்ட பின் உருவான சிந்தனைமுறை என்கிற அளவில் பின்நவீனம் பற்றிய ஒரு தீவிரமான கலந்துரையாடல்கூட இங்குப் பரவலாக நிகழவில்லை என்பதுதான் நிதர்சனம். அவ்வகையில் விமர்சனம் பற்றி நாம் அக்கறையுடன் உரையாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் விமர்சனமுறையில் பின்நவீன சிந்தனை […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுகதை: நெடி

  Posted on December 21, 2016 by பாலமுருகன் in சிறுகதைகள்.

  இரயில் கிளம்பும்போது மணி 4.50 இருக்கும். இரயில் பயணம் என நினைக்கும்போது ஒரு வகையான பூரிப்பு சட்டென மனத்திலிருந்து தாவி உடலில் நெளிகிறது. பயணங்களில் கிடைக்கும் ஓர் அர்த்தமற்ற தனிமை விசாரணைகளற்றது. எவ்வித யோசனையுமின்றி வெறுமனே வெளியைப் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு தவம். காலையில் வேலைக்குப் போனால் மீண்டும் திரும்ப இரவாகும் நாட்களில் அது நமக்கு கிடைக்காது. ‘The next station is Butterworth’ என்னை நான் கவனிக்கும் ஒரு தருணம் எப்பொழுதும் கிடைத்ததில்லை. அவசரமாகத் தலை […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • விமர்சன யுகத்தில் வாழ்கிறோம் (தொடர்- 3) ‘வாசிப்பில்லாத படைப்பாளிகளின் படைப்புகளில் எப்பொழுதும் ஒரு சாயம் வெளுத்துப் போகக் காத்திருக்கும்’

  Posted on December 21, 2016 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  ஏன் விமர்சிக்க வேண்டும்? விமர்சனம் என்றால் என்ன? அதனுடைய பாதிப்புகள் என்ன? விமர்சனத்திற்குரிய மொழி எப்படி இருக்க வேண்டும்? எனக் கடந்த கட்டுரைகளில் கவனித்துவிட்டாயிற்று. சங்க இலக்கியம் தொடங்கி இன்றையநாள் எழுதப்படும் நவீனத்துவ இலக்கியம்வரை அனைத்துமே விமர்சனங்களின் ஊடே முன்னகர்ந்து வந்திருக்கிறன. மேலைநாட்டு இலக்கியம், செவ்விலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், பின்நவீன இலக்கியம், உலக இலக்கியம், மரபிலக்கியம், சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தின் கிளைகள் வளர்ந்தோங்கி நிற்கும் ஒரு காலக்கட்டத்தைத் தாண்டி இன்று அவையாவற்றையும் மீள்வாசிப்பு செய்து விமர்சிக்கும் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • Cerpen: Katil Bernombor 27

  Posted on December 18, 2016 by பாலமுருகன் in Cerpen Bahasa Malaysia.

  Suasana hospital kekal sama seperti hari hari yang lalu. Kedua-dua mataku rasa berat mendukung malam yang sudah pun lenyap. cahaya yang tidak begitu cerah menyusur melalui tingkap yang sudah lama tidak dicuci itu. “dik, pukul berapa sekarang?” Dia merenung  balik kearah aku. Rasa pelik cara dia melihat aku. “dik! Aku  tanya kamu pukul berapa?” Jururawat yang […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுகதை: டீவி பெட்டி

  Posted on December 14, 2016 by பாலமுருகன் in சிறுகதைகள்.

  அப்பா கொண்டு வந்து வீட்டின் வரவேற்பறையில் வைக்கும்வரை என்னால் அதை யூகிக்க முடியவில்லை. முன்கதவை இடித்துத் தள்ளிக் கொண்டு உள்ளே வரும்போதே ஏதோ கனமான பொருள் என்று மட்டும் தெரிந்தது. “ம்மா! இந்தா டீவி பெட்டி,” என அப்பா உரக்க சொன்னதும் வீடே விழித்துக் கொண்டது. பாட்டியின் கண்கள் அகல விரிந்து மூடின. பாட்டி பெரியப்பா வீட்டில்தான் இருந்தார். மூன்று வாரத்திற்கு முன் மயங்கி கீழே விழுந்து கால் உடைந்து போனதும் இங்கே வந்து விட்டார். பெரியப்பா […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • இலக்கியம், விமர்சனம் மற்றும் இலக்கியத்திற்கும் விமர்சனத்திற்கும் இடையிலான தொடர்பும் முரணும் – 2

  Posted on November 28, 2016 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  ‘ஒரு படைப்பின்  உண்மையை நோக்கி விவாதிப்பதுதான் விமர்சனம்’ – கா.நா.சு   இலக்கியத்திற்கும் விமர்சனத்திற்குமான ஓர் அத்தியாவசிய புரிதல் உருவாகியே ஆக வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் இருக்கிறோம். புதிதாகத் தமிழ் இலக்கியத்தை வாசிக்கத் துவங்கும் வாசகனை நோக்கியே கறாராக விவாதிக்க வேண்டிய சூழலில் விமர்சனம் குறித்த என்னுடைய இரண்டாவது கட்டுரையை எழுதுகிறேன். எழுத்தாளர் ஜெயமோகன் சிங்கை இலக்கியம் குறித்து எழுப்பிய கடுமையான விமர்சனங்களின் (என்பதைவிட சமரசமற்ற விமர்சனம் என்றே சொல்லலாம்) தொடர்ச்சியாக விமர்சனத்தின் நிலைப்பாடுகள் குறித்த விவாதம், […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • கவிதை: கொலையுணர்வு

  Posted on November 24, 2016 by பாலமுருகன் in கவிதைகள்.

  கைக்கு எட்டாத கரும்பலகை சொற்களை எகிறி குதித்து அழிக்க முயல்கிறாள் சிறுமி.   ஒவ்வொருமுறையும் கால்கள் தரையைத் தொடும்போது சொற்காளின் பாதி உடல் அழிக்கப்படுகிறது.   எட்டாத சொற்களின் மீத உடலைச் சிதைக்க மீண்டும் குதிக்கிறாள்.   உடலின் மொத்தப்பலத்தை கால்களில் திரட்டி பாய்கிறாள் ஆவேசம்கொண்டு.   கடைசி சொல்லின் உடலை அடையும்வரை சோர்வில்லை விலகலுமில்லை.   கரும்பலகையின் கோடியில் மிச்சமாக இருந்த ஒரு எழுத்தை அழித்துவிட்டப் பிறகு சிறுமியின் முகத்தில் போர் முடிந்த களைப்பு.   […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • நூலாய்வு: உலகின் ஒரே அலைவரிசை/ நாட்டுப்புறப்பாடல்கள் – முத்தம்மாள் பழனிசாமி

  Posted on November 16, 2016 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  நாட்டுப்புற இலக்கியமும் பாடல்களும் உலகம் முழுக்கவும் நாட்டுப்புற இலக்கியங்கள் வெவ்வேறான வடிவங்களில் வாய்மொழியாக அடுத்த தலைமுறைக்குச் சொல்லப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வருகின்றன. லத்தின் அமெரிக்கா நாட்டுப்புற கதைகள், பிரன்ச் நாட்டுப்புறக்கதைகள், வியாட்நாம், என ஒவ்வொரு சமூகமும் நாட்டுப்புற வாழ்வோடு பிணைந்திருக்கின்றன. பாடலும் கதையும்தான் நாட்டுப்புற இலக்கியத்தின் உச்சமான கலை வடிவமாகக் கருதப்படுகின்றன. முதுகுடி மக்களின் வாழ்வும் நிலப்பரப்பும் கதைகளாலும் பாடல்களாலும் ஆனவை. நாட்டுப்புறப்பாடல் என்றால் என்ன? நாட்டுப்புறம் எனச் சொல்லக்கூடிய கிராமமும் கிராமியம் சார்ந்த இடங்களிலும் பாடப்படும்/பாடப்பட்ட பாடல்களை […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • நெருக்கடிகளை எதிர்கொண்டு சமாளிக்கும் மனப்பக்குவத்தை வழங்குவதே வேதாந்தம்

  Posted on November 9, 2016 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  சுவாமி பிரம்மாநந்த சரஸ்வதி அவர்களின் வேதாந்த உரைகள் அடங்கிய தனியன் நூலை முன்வைத்து வாழும் காலத்தில் மனித மனம் வாழ்வியல் தொடர்பான பற்பல கேள்விகளால் அல்லல்படுகிறது. ஒவ்வொரு கேள்வியும் நம்மை வாழ்நாள் முழுவதும் எங்கேங்கோ இழுத்துச் செல்கின்றது. பதில்களின் ஊடாக ஞானக்கீற்று பெறத் தேடித் தேடி களைத்துப்போய் கிடைத்ததைப் பதிலாக்கிக் கொண்டு திரும்புவதுதான் இன்றைய பெரும்பாலோரின் அனுபவம். பதில் யாரிடமிருந்து பெற்றோம் என்கிற ஒன்றே நம்மைத் திருபதிப்படுத்திவிடுகிறது; அல்லது காலம் முழுவதும் மெச்சிக் கொள்ள ஒரு சமாதானத்தை […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • இலக்கியத்தைக் கொல்பவனின் சாட்சியம்: றியாஸ் குரானாவின் கவிதைகள்

  Posted on November 4, 2016 by பாலமுருகன் in கட்டுரைகள்.

    றியாஸ் குரானா – அறிமுகம் தொடக்ககாலக்கட்டத்தில் இலங்கையில் உருவான முதலாளி – பாட்டாளி எனும் இலக்கிய செயற்பாடுகளுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றத்தின் வழி தமிழ் தேசியம் எனும் கட்டமைப்பு போர் காரணமாக அங்கு உருவானது. இந்த மாற்றத்தின்போது பெரும்பான்மையான முஸ்லிம் இலக்கியவாதிகளின் பங்களிப்புகளும் தமிழ் இலக்கியத்துக்கான செயல்பாடுகளும் கவனிக்கப்படாமல் போனது. அவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார்கள். ஆகையால் தமிழ் தேசிய உருவாக்கத்தில் ஒரு கவிஞனாக தனது நிலைப்பாட்டையும் படைப்பையும் நிருபீக்க தொடர்ந்து பலர் போராட வேண்டிய சூழல் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.