Category Archives: நேர்காணல்கள்

 • நேர்காணல்: சிறுகதை நூல் வெளியீட்டை முன்னிட்டு – ‘படைப்பு என்பது கணிக்கவியலாத ஓர் ஊற்று’ – கே.பாலமுருகன்

  Posted on September 22, 2017 by பாலமுருகன் in நேர்காணல்கள்.

  கேள்வி: எழுத்தாளன் என்பவன் எழுதியே ஆக வேண்டுமா? கே.பாலமுருகன்: வாசிப்பு; இலக்கிய செயல்பாடு; எழுத்து என மூன்றையுமே உள்ளடக்கியவன் தான் எழுத்தாளன். ஆகவே, எழுத்தாளன் என்பவன் சில சமயங்களில் வாசிக்க மட்டுமே செய்வான். அதன் வழி அவன் தன்னைத் தானே கூர்மையாக்கிக் கொள்வான். அல்லது இலக்கியம் தொடர்பான கலந்துரையாடல்கள், நூல் வெளியீடு, விமர்சனக் கூட்டங்கள் என இயங்குவான். தன்னைச் சுற்றியுள்ள சூழலை இலக்கியமாக உருவாக்கிக் கொள்ள செயல்படுவான். இதனைத் தவிர்த்து எழுத்தாளன் தன்னை நிரூபித்துக் கொள்ள எழுதுவான். […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுகதை நூல் வெளியீட்டை முன்னிட்டு நேர்காணல்: ‘தனிமைத்தான் எனது ஆத்மப்பூர்வமான ஊக்கியாகும்- கே.பாலமுருகன்’

  Posted on August 8, 2017 by பாலமுருகன் in நேர்காணல்கள்.

  கேள்வி: உங்களின் பின்புலனைப் பற்றி சில வார்த்தைகள் ? கே.பாலமுருகன்: கெடா மாநிலத்தில் பிறந்து இங்கேயே ஆசிரியரராகப் பணியாற்றி வருகிறேன். இதுவரை இலக்கியம், கல்வி என 17 நூல்கள் எழுதியுள்ளேன். தற்சமயம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நாடெங்கும் சிறுகதை எழுதும் பயிலரங்கை வழிநடத்தி வருகிறேன். இலக்கியத்தில் இதுவரை ஆறு விருதுகள் கிடைத்துள்ளன.   கேள்வி: எழுதியே ஆக வேண்டுமென்ற எண்ணம் எப்போது தோன்றியது ? கே.பாலமுருகன்: ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது வாசிப்பின் மீது தீராத ஆர்வமும் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • ‘மரங்கொத்தியின் இசை’ சினிமா விமர்சன நூலை முன்வைத்து எழுத்தாளர் கே.பாலமுருகனுடன் நேர்காணல்

  Posted on July 24, 2017 by பாலமுருகன் in நேர்காணல்கள்.

  நேர்காணல்: பாண்டித்துரை, சிங்கப்பூர் மோக்லி பதிப்பகத்தின் வாயிலாக லஷ்மி சரவணக்குமார் அவர்களின் முயற்சியில் இம்மாதம் வெளிவரவிருக்கும் மலேசிய எழுத்தாளர், சினிமா விமர்சகர் கே.பாலமுருகனின் ‘மரங்கொத்தியின் இசை’ எனும் சினிமா விமர்சன நூலை முன்வைத்து இந்நேர்காணல் எடுக்கப்பட்டது. சிறுகதை, கவிதையிலிருந்து விலகி சினிமா சார்ந்த இந்தப் பத்திகள் எழுவதற்கான நோக்கம் என்ன? கே.பாலமுருகன்: இலக்கியம் படைக்கத் துவங்கும் முன்பே 2004ஆம் ஆண்டுகளில் உலக சினிமாக்களால் ஈர்க்கப்பட்டிருந்தேன். கலை சார்ந்த சினிமாக்களை முதலில் பார்க்கத் துவங்கி அங்கிருந்து வாழ்க்கையின் மீதான என்னுடைய […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • ‘தனியன்’ எனும் வேதாந்த உரைகள் தொகுப்பு நூல் வெளியீட்டை முன்னிட்டு சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களுடன் ஒரு நேர்காணல்.

  Posted on October 12, 2016 by பாலமுருகன் in நேர்காணல்கள்.

  தவத்திரு சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்கள் கூலிமில் தியான ஆசிரமத்தைத் தொடங்கி கடந்த 40 ஆண்டுகளாகப் பல்வேறு சமய, சமுதாய, கலை, இலக்கிய, ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். தான் சார்ந்த சமூகத்தை ஆன்மீகத்தின் வழி உய்வுறச் செய்ய அவர் ஆற்றிவரும் பணிகள் இவ்வட்டாரம் மட்டுமன்றி மலேசிய முழுவதும் அறிந்த ஒன்று. எதிர்வரும் 15.10.2016ஆம் நாளில் தோழி பதிப்பகம் சார்பில் அவருடைய ‘தனியன்’ வேதாந்த தொகுப்புரை நூல் சு.யுவராஜன் அவர்களால் தொகுக்கப்பட்டு வெளியீடு காணவுள்ளது. ‘வாழ்க்கை என்பது […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • மலேசியத் தினத்தை முன்னிட்டு ஒரு நேர்காணல்- ‘ஒருவனுக்கு ஆபத்து என்றால் அவன் எந்த இனம் எனப் பார்த்துவிட்டு உதவும் பழக்கம் மலேசியர்களுக்கு இல்லை’ – கே.பாலமுருகன்

  Posted on September 16, 2016 by பாலமுருகன் in நேர்காணல்கள்.

  நேர்காணல்: செ.காஞ்சனா, 16.09.2016   காஞ்சனா: வணக்கம் ஐயா. இன்று மலேசிய தினம். எப்படி உணர்கிறீர்கள்? கே.பாலமுருகன்: மிகவும் மகிழ்ச்சியான நாள். சுதந்திரத் தினம் முடிந்து சில நாட்களிலேயே அடுத்து மீண்டும் உற்சாகமான நாளாக இது அமைந்திருக்கிறது. இன்றைய காற்றில் என் முன்னோர்களின் குரலும் வியர்வையும் கலந்து வீசுகிறது. காஞ்சனா: யார் உங்கள் முன்னோர்கள் எனச் சொல்கிறீர்கள்? உங்கள் தாத்தா பாட்டியா? கே.பாலமுருகன்: என் தாத்தா பாட்டி என்றில்லை. இங்கு மலேசியா வந்து இப்படியொரு தலைமுறை இங்கேயே […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • நேர்காணல்: எனது அல்ட்ராமேன் மனதில் உள்ள தீமையை எதிர்க்கும் ஆற்றலின் குறியீடு

  Posted on March 24, 2016 by பாலமுருகன் in நேர்காணல்கள்.

  கே.பாலமுருகன்: உங்கள் பின்புலனைப் பற்றி சொல்லுங்கள்? சு.யுவராஜன்: அப்பா திரு.சுப்ரமணியம் அம்மா திருமதி. கண்ணகி. 4 தம்பிகள். சிறுவயதில் பாட்டி வீட்டில் வளரும் சூழல் ஏற்பட்டது. பாட்டி தாத்தா ஸ்கார்புரோ தோட்டத்தில் இருந்தனர். தாத்தா தொழிற்சங்கவாதி. நேர்மையானவர். அவரது நேர்மையால் பாட்டி இறுதிவரை தோட்டத்தில் முற்றிய மரத்தையே வெட்ட வேண்டியிருந்தது. தாத்தா நல்ல வாசகர். நாளிதழ், நூல்கள் எனப் படித்துக் கொண்டே இருப்பார். வீட்டில் ஒரு சிறு நூலகம் இருந்தது. என் மாமாமார்களும் நல்ல வாசகர்கள். நான் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சுடர் மாணவர்களுக்கான பயிற்சி நூல் வெளியீடை முன்னிட்டு ஆசிரியர், எழுத்தாளர் கே.பாலமுருகனுடன் ஒரு சந்திப்பு

  Posted on February 11, 2016 by பாலமுருகன் in நேர்காணல்கள்.

  தினகரன்: வணக்கம். சுடர் என்கிற பெயர் எப்பொழுது எப்படி அடையாளம் கண்டீர்கள்? கே.பாலமுருகன்: திட்டமிட்டுத் தேர்ந்தெடுத்த பெயர் அல்ல சுடர். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக ஓர் எளிமையான பயிற்சி நூல் தயாரித்து வழங்க வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தேன். ஆண்டு முழுவதும் பல தமிழ்ப்பள்ளிகளுக்குப் பயணித்த அனுபவத்தினூடாக ஒவ்வொரு மாணவர்களுக்குள்ளும் ஒரு தேடல் எப்பொழுதும் சுடர் விட்டுக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. அவர்களின் கேள்விகளும் ஆர்வமுமே அதனைப் பிரதிபலித்தது. ஆகையால், சுடர் என்ற ஒரு சொல் எனக்குள் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • மலைகள் இதழுக்கான நேர்காணல்: என் படைப்புகளில் நான் அலைந்து திரிகிறேன்

  Posted on January 15, 2016 by பாலமுருகன் in நேர்காணல்கள்.

  படிக்க வேண்டியதற்கும் படைக்க வேண்டியதற்கும் மத்தியில் இருக்கும் இடைவேளியைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.   கேள்வி: உங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ள முடியுமா? கே.பாலமுருகன்: நான் ஓர் எழுத்தாளன். ஆசிரியரும்கூட. எனது கே.பாலமுருகன் வலைத்தளத்தில் என்னைப் பற்றி தேவையான அறிமுகம் உண்டு. இப்படி எல்லாம் நேர்காணல்களிலும் என்னைப் பற்றி நான் கிளி பிள்ளை போல ஒப்புவிப்புவதில் சோம்பேறித்தனமாக இருப்பதால் வலைத்தளத்தின் முகவரியை இணைக்கிறேன். (http://balamurugan.org). உங்களையும் சேர்த்து இந்தத் தமிழ்ச்சமூகத்தின் தேடல்கள் மீது எனக்கு எப்பொழுதுமே நம்பிக்கை […]

  Share Button
  Continue Reading...
  No Comments.