UPSR Star #4: Navinesh Pannirselvam (SJKT LDG PELEPAH KOTA TINGGI JOHOR) அவர்களும் கதாநாயகர்களே #4

‘முயற்சி மெய்வருத்தக் கூலித் தரும் நண்பர்களே’

 

மாணவர் பெயர்: நவினேஷ் பன்னீர்செல்வம்

SJKT LDG PELEPAH KOTA TINGGI,JOHOR

யூ.பி.எஸ்.ஆர் அடைவுநிலை: 7B 1C

நேர்காணல்:

கேள்வி: வணக்கம் நவினேஷ்.  யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் கிடைத்ததும் உங்கள் மன உணர்வுகள் எப்படி இருந்தன?

நவினேஷ்: வணக்கம் ஐயா. முதலில் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நான் எட்டு ‘ஏ’க்கள் பெற வேண்டும் என்றுத்தான் கனவு கண்டிருந்தேன். ஆனால், தேர்வு முடிவு அதற்குப் பாதகமாக அமைந்துவிட்டது.

கேள்வி: அதை நினைத்து இன்னும் வருத்தம் உண்டா?

நவினேஷ்: இல்லை ஐயா. பிறகு நான் கொடுத்த முயற்சிக்கு ஏற்ற பலன் இது என்று ஏற்றுக் கொண்டேன். 21ஆம் நூற்றாண்டு கல்விமுறையில் ‘பி’ கூட ஒரு வகையில் சாதனை என்று புரிந்து கொண்டேன்.

கேள்வி: இந்நிலையை அடைய நீங்கள் என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள்?

நவினேஷ்: நான் பல முயற்சிகளை அயராமல் மேற்கொண்டேன் ஐயா. என் பெற்றோர்கள் எனக்கு நிறைய நூல்கள் வாங்கிக் கொடுத்தார்கள். நானும் நிறைய வாசித்தேன். மேலும், நிறைய பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்றிருந்தேன். அதோடுமட்டுமல்லாமல் ஆசிரியர் கொடுக்கும் வீட்டுப்பாடங்களைத் தவறாமல் மீள்பார்வை செய்தேன். இதுவே என்னைச் செதுக்கியது எனலாம்.

 

 

கேள்வி: முதலில் உங்களுக்கு ஏற்பட்ட கவலையை எப்படிக் கடந்து சென்றீர்கள்?

நவினேஷ்: வீடு வரும்வரை கவலை என்னை விடவில்லை. ஆனால், என் தாய்தந்தையினர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், தங்கை இப்படி எல்லோரும் எனக்கு ஆறுதல் கூறினார்கள். அவர்கள் கொடுத்த நம்பிக்கையில் நான் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பினேன்.

கேள்வி: அடுத்த என்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள்?

நவினேஷ்: மேலும், படிக்க வேண்டும். நிறைய நூல்கள், கதைப்புத்தகங்களை விடாமல் வாசித்தால் என் இப்போதைய நிலை மாறும் என்று நம்புகிறேன். வாசிப்பால் முடியாதது ஒன்றும் இல்லை.

 

கேள்வி: இவ்வருடம் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் பெற்ற நிறைய மாணவர்கள் 8 ‘ஏ’க்கள் பெற முடியவில்லை என்று வருத்தப்படுகிறார்கள் என்று நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்கள் சார்பாக அவர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

நவினேஷ்: யூ.பி.எஸ்.ஆர் மட்டும் நம் வாழ்க்கையல்ல; இன்னும் பயணம் நீளும். எஸ்.பி.எம் போன்ற சோதனைக்கெல்லாம் நீங்கள் இன்னும் நிறைய உழைப்பைச் செலுத்த வேண்டி வரும். ஆகவே, இதனை ஓர் அனுபவமாகக் கொண்டு முயற்சியை விட்டுவிடாமல் கல்வியைத் தொடரவும். முய்ற்சி மெய்வருத்தக் கூலித் தரும் நண்பர்களே’. நன்றி.

 

(முயற்சி என்கிற துடுப்பில் நீங்கள் மேற்கொள்ளும் பயணம் ஒருபோதும் தோற்காது. அலைகள் தோன்றும்; தடைகள் உண்டாகும். நாம் கொண்ட நோக்கத்திலிருந்து விலகாமல் துடுப்பை இயக்கினால் மட்டுமே கரை சேர முடியும். )

இன்னொருவரின் முதுகிற்குப் பின்னால் நாம் செய்ய வேண்டியது தட்டிக் கொடுத்தல் மட்டுமே. யூ.பி.எஸ்.ஆர் சோதனையில் தான் அங்கீகரிப்படவில்லை; தான் ஏக்கள் பெறவில்லை என்று கவலையோடு இருக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களையும் கதாநாயகர்கள்தான் என்று வெளிச்சமிட முனையும் களம் இது. 

 

நேர்காணல்: கே.பாலமுருகன்

 

நேர்காணல் 1 ‘கதாநாயகர் #1 : http://balamurugan.org/2018/12/02/upsr-star-1-devaggan-kanapathy-sjkt-tun-aminah-johor-அவர்களும்-கதாநாய

நேர்காணல் 2 ‘கதாநாயகர் #2: http://balamurugan.org/2018/12/03/upsr-star-2-prishitha-anandan-sjkt-pasir-gudang-johor-அவர்களும்-கதாநாய

நேர்காணல் 3 ‘கதாநாயகர் #3: http://balamurugan.org/2018/12/04/upsr-star-3-neevindrran-narendran-sjkt-mak-mandin-penang-அவர்களும்-கதாநாய

Share Button

About The Author

Comments are closed.