UPSR Star #3: Neevindrran Narendran (SJKT MAK MANDIN, PENANG) அவர்களும் கதாநாயகர்களே #3

‘தேர்வில் மட்டுமல்ல; கலைத்துறையிலும் நாம் யார் என்று நிரூபிக்க முடியும்’ – நிவிந்திரன் 

 

மாணவர் பெயர்: நிவிந்திரன் த/பெ நரேந்திரன்

மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி, பட்டர்வெர்த், பினாங்கு.

யூ.பி.எஸ்.ஆர் அடைவுநிலை: 5B 3 C

 

நேர்காணல்:

கேள்வி: வணக்கம் நிவிந்திரன். யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவைப் பெற்றவுடன் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

நிவிந்திரன்: வணக்கம் ஐயா. முதலில் எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. இதற்கு முன்பெல்லாம் ‘பி’ எடுப்பதே எனக்குச் சிக்கலாக இருக்கும். ஆனால், இந்தத் தேர்வில் ஆசிரியர்கள் துணையுடன் என்னால் முன்பைவிட சிறந்த தேர்ச்சிப் பெற முடிந்ததால் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளேன்.

 

கேள்வி: இவ்வாண்டு நீங்கள் எதிர்கொண்ட யூ.பி.எஸ்.ஆர் தேர்விலிருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள்?

நிவிந்திரன்: தேர்வென்றால் சிரமமாகத்தான் இருக்கும்; வெற்றியும் தோல்வியும் இருக்கும் என்று கற்றுக் கொண்டேன். தோல்வி என்றால் நாம் எதிர்பார்த்ததைப் பெற முடியாமல் போவது. இருப்பினும் இக்கடினங்களைச் சமாளித்து தேர்ச்சிப் பெற்றது ஓர் அனுபவமாக எடுத்துக் கொண்டேன்.

 

கேள்வி: இச்சாதனைக்காக யாருக்கெல்லாம் நன்றி சொல்ல நினைக்கிறீர்கள்?

நிவிந்திரன்: நான் முதலில் என் பெற்றோர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். எனக்காக அவர்கள் நேரத்தைத் தியாகம் செய்து நிறைய உதவி செய்துள்ளார்கள். அதே போல எழுத்தறிவித்தவர்களை மறக்க முடியாது. ஆசிரியர்கள் இல்லையென்றால் இந்தத் தேர்ச்சி எனக்குக் கிட்டியிருக்காது.

 

கேள்வி: உங்களின் அடுத்த திட்டமாக என்ன செய்யவிருக்கிறீர்கள்?

நிவிந்திரன்: நான் யார் என்றும் என் திறமை என்னவென்றும் அடுத்து படிவம் மூன்றில் எதிர்கொள்ளவிருக்கும் தேர்வில் நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்குரிய முயற்சியில் விரைவில் இறங்குவேன்.

 

கேள்வி: யூ.பி.எஸ்.ஆர் முடிந்து பி.தி 3 தேர்வில் உங்களை நிரூபிப்பதாகச் சொல்கிறீர்கள். ஆனால், தேர்வு மட்டும்தான் நம்மை யார் என்று அடையாளம் காட்டும் களம் என்று நினைக்கிறீர்களா?

நிவிந்திரன்: இல்லை, ஐயா. நான்  ஓட்டப்பந்தயத்திலும் நிறைய சாதித்துள்ளேன். மாவட்டம் மாநில அளவிலும் பங்கேற்று என் திறமையைப் பதித்துள்ளேன். இவ்வாண்டு பள்ளியின் ஓட்டப்பந்தய வீரர் பதக்கமும் கிடைத்தது. அதோடுமட்டுமல்லாமல்,  காற்பந்து துறையிலும் சிறப்பாக ஈடுபட்ட நிறைய பரிசுகள் பெற்றுள்ளேன். ஆகவே, என்னைப் பொறுத்தவரையில் தேர்வு மட்டுமல்ல இதுபோன்ற விளையாட்டுகளிலும் பிற கலைத்துறைகளிலும் நாம் சாதிக்க முடியும் என்பதே என் கருத்து.

 

கேள்வி: உங்களுக்குப் பிடித்த பாடம் எது? ஏன் அப்பாடம் உங்களுக்குப் பிடித்திருந்தது?

நிவிந்திரன்: எனக்கு அறிவியல் பாடம் மிகவும் பிடிக்கும் ஐயா. சிறுவயதிலிருந்தே எனது அறியும் ஆர்வத்தினால் அறிவியல் பாடத்தில் தனி ஈடுபாடு இருந்தது. அடுத்தாண்டில் அறிவியல் பாடத்தில் என்னை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

 

கேள்வி: யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் ‘பி’, ‘சி’, ‘டீ’ எடுத்த மாணவர்கள் பலர் தங்களால் சாதிக்க முடியவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

நிவிந்திரன்: ‘ஏ’ எடுக்க முடியாத மாணவர்கள் அனைவருக்கும் கவலையை விட்டு, முயற்சி என்கிற ஆயுதத்தைக் கையில் எடுங்கள். நிச்சயம் உங்களுக்கு வேறொரு சந்தர்ப்பத்தில் நீங்கள் நினைக்கும் தேர்ச்சிக் கிடைக்கும். முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும். 

(கொண்டாடக் களம் இல்லை என ஏங்கித் தவித்த பல குழந்தைகளின் முதுகைத் தட்டிக் கொடுக்க களம் அமைத்தேன். ‘அவர்களும் கதாநாயகர்களே)

நேர்காணல்: ஆசிரியர் கே.பாலமுருகன் 

 

யூ.பி.எஸ்.ஆர் கதாநாயகன் #1- ஐ வாசிக்க:

http://balamurugan.org/2018/12/02/upsr-star-1-devaggan-kanapathy-sjkt-tun-aminah-johor-அவர்களும்-கதாநாய

 

யூ.பி.எஸ்.ஆர் கதாநாயகன் #2-ஐ வாசிக்க :

 

UPSR Star #2: Prishitha Anandan (SJKT PASIR GUDANG ,JOHOR) அவர்களும் கதாநாயகர்களே #2

Share Button

About The Author

Comments are closed.