UPSR STAR #7: Nagatharaneswary Marimuthu (SJKT LDG HARVARD 3, KEDAH) அவர்களும் கதாநாயகர்களே 2018

‘நம்மால் முடியாதது என்று ஒன்றும் இல்லை’ – நாகதரனேஸ்வரி 

கல்வி முயற்சி செய்த அனைவரிடத்திலும் மாற்றங்களை உருவாக்கும்.  கடைநிலையிலிருந்து யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் தேர்ச்சி நிலைக்கு நகர்ந்து சென்றுள்ள மாணவர்களின் மீதே நான் தொடர்ந்து கவனம்  செலுத்துகிறேன்.

மாணவர் பெயர்: நாகதரனேஸ்வரி மாரிமுத்து

ஆர்வார்ட் பிரிவு 3 தமிழ்ப்பள்ளி, கெடா 

யூ.பி.எஸ்.ஆர் அடைவுநிலை: 3B,3C,2D

நேர்காணல்:

கேள்வி: வணக்கம் நாகதரனேஸ்வரி. இம்முறை யூ.பி.எஸ்.தேர்வு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நாகதரனேஸ்: நான் ஆறாம் ஆண்டில் வந்துதான் என்னை வளர்த்துக் கொண்டேன். அதுவும் ஆசிரியர்கள் எனக்கு நிறைய வழிகாட்டியதால் என்னை இந்தத் தேர்வு ஆண்டில் முன்னேற்றிக்கொள்ள முடிந்தது. ஆகவே, யூ.பி.எஸ்.ஆர் என்னைப் பொறுத்தவரை என்னை உயர்த்திய தேர்வு.

கேள்வி: இந்தத் தேர்வு முடிவுத்தான் கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?

நாகதரனேஸ்: வருட ஆரம்பத்தில் எனக்கொரு பயம் இருந்தது. ஆனால், அரையாண்டு சோதனையிலெல்லாம் ஒரு நம்பிக்கை கிடைத்தது. இருப்பினும் நான் ‘ஏ’ பெறுவேன் என்று நினைத்திருந்தேன். தேர்வு முடிவைப் பார்த்ததும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

கேள்வி: பிறகு எப்படி அக்கவலையைக் கடந்து சென்றீர்கள்?

நாகதரனேஸ்: நான் முன்பே சொன்னதைப் போல இந்த ஆறாம் ஆண்டு என் கல்வித் தரத்தை உயர்த்தியுள்ளது. இதுவே எனக்கு இன்னும் தூரம் சென்று சாதிக்கத் துணையாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆகவே, என்னால் என் கவலையிலிருந்து என்னை மீட்டுக்கொள்ள முடிந்தது.

கேள்வி: ஆமாம், நீங்கள் தேர்ச்சிப் பெற்றிருப்பதே பாராட்ட வேண்டிய சாதனையாகும். அடுத்து என்ன திட்டம் கொண்டுள்ளீர்கள்?

நாகதரனேஸ்: நான் பி,சி,டி பெற்ற பாடங்களில் படிவம் ஒன்றிற்கான பயிற்சிகளை விடுமுறையில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன் ஐயா.

கேள்வி: இவ்வேளையில் நீங்கள் யாருகெல்லாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளீர்கள்?

நாகதரனேஸ்: முதலில் எனக்கு எப்பொழுதும் உற்சாகமூட்டி தட்டிக் கொடுத்த தலைமை ஆசிரியருக்கும் ஆசிரியர்களுக்கும், என் பெற்றோர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். அடுத்து என் நண்பர்கள் குறிப்பாக பிரிஷா, சுஜித்தா போன்றவர்கள் எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இவ்வேளையில் நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.

கேள்வி: தேர்வில் ‘ஏ’க்கள் பெற முடியாமல் துவண்டு போயிருக்கும் மாணவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

நாகதரனேஸ்: மனத்தைத் தளர விடாதீர்கள். முதலில் எனக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனால், இது அனைத்தும் நமக்குப் படிப்பினை என்றும் இதிலிருந்து நம்மை முன்னேற்றிக்கொள்ள வாய்ப்பும் என்பதை உணரவும். நம்மால் முடியாதது என்று ஒன்றும் இல்லை. நன்றி.

 

அவர்களும் கதாநாயகர்களே. வெற்றிக்கும் தோல்விக்கும் நடுவில் முன்னேறிவிட்டுப் பாராட்டுக் கிடைக்காமல் நிற்கும் நிறைய மாணவர்களை நாம் பார்த்திருப்போம். உண்மையில் தோல்வி என்ற ஒன்றில்லை. வெற்றியை நோக்கிய படிகளில் சிலர் மேலேயும் சிலர் கீழேயும் இருக்கிறார்கள். கீழே உள்ளவர்கள் மேலே வர நினைக்க ஒரு வாய்ப்புத்தான் இவையனைத்தும் என்று புரிந்து கொள்வோம். 

நேர்காணல்: ஆசிரியர் கே.பாலமுருகன் 

 

கடந்த நேர்காணல்களை வாசிக்க: 

நேர்காணல் 1 ‘கதாநாயகர் #1 : http://balamurugan.org/2018/12/02/upsr-star-1-devaggan-kanapathy-sjkt-tun-aminah-johor-அவர்களும்-கதாநாய

நேர்காணல் 2 ‘கதாநாயகர் #2: http://balamurugan.org/2018/12/03/upsr-star-2-prishitha-anandan-sjkt-pasir-gudang-johor-அவர்களும்-கதாநாய

நேர்காணல் 3 ‘கதாநாயகர் #3: http://balamurugan.org/2018/12/04/upsr-star-3-neevindrran-narendran-sjkt-mak-mandin-penang-அவர்களும்-கதாநாய

நேர்காணல் 4 ‘கதாநாயகர் #4: http://balamurugan.org/2018/12/04/upsr-star-4-navinesh-pannirselvam-sjkt-ldg-pelepah-kota-tinggi-johor-அவர்களும்-கதாநா

நேர்காணல் 5 ‘கதாநாயகர் #5: http://balamurugan.org/2018/12/05/upsr-star-5-yashini-sundaram-sjkt-ldg-changkat-salak-perak-அவர்களும்-கதாநாய

Share Button

About The Author

Comments are closed.