UPSR STAR #10 Kallieswaran Sargunan (SJKT SG TOK PAWANG, KEDAH) அவர்களும் கதாநாயகர்களே 2018

‘கவலைகள் நம்மைவிட்டுத் தூரம் போய்விடும்’ – காளிஸ்வரன் 

 

மாணவர் பெயர்: காளிஸ்வரம் சற்குணன்

சுங்கை தோ பாவாங் தமிழ்ப்பள்ளி

யூ.பி.எஸ்.ஆர் அடைவுநிலை: 3A,1B,4C

 

 

நேர்காணல்:

 

கேள்வி: உங்கள் பார்வையில் யூ.பி.எஸ்.ஆர் பயணம் எப்படி இருந்தது?

காளிஸ்வரன்: யூ.பி.எஸ்.ஆர் தேர்வு சற்றுக் கடினமாக இருந்தாலும் என்னால் இயன்ற உழைப்பை நான் முழுமூச்சுடன் செலுத்தினேன். ஆகவே, இப்பயணம் கடினமாக இருந்தாலும் என் ஆற்றலை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.

 

கேள்வி: இத்தேர்ச்சி உங்களுக்குத் திருப்தி அளித்ததா? ஏன்?

காளிஸ்வரன்: எட்டு ‘ஏ’ பெற வேண்டுமென்றுத்தான் எல்லோரையும் போல நானும் கனவு கண்டேன். இருப்பினும் எனக்கு அக்கனவு நிறைவேறவில்லை என்கிற கவலை இல்லை. நான் என் முயற்சியை விட்டுக் கொடுக்காமல் உழைத்தற்காகப் பெருமைப்படுகிறேன் ஐயா.

 

கேள்வி: இந்நிலையை அடைய என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள்?

காளிஸ்வரன்:  நான் முதலில் ஆசிரியர் கற்றுக் கொடுக்கும் பாடத்தின் மீது முழுமையான கவனம் செலுத்தினேன். இதைச் செய்யவில்லை என்றால் எந்த மாணவரும் வெற்றிப்பெற இயலாது. அடுத்து, ஆசிரியர்கள் கொடுக்கும் பாடங்களை மீள்பார்வை செய்தேன். நிறைய பயிற்சிகளை மேற்கொண்டேன்.

கேள்வி: இத்தேர்வுக் காலக்கட்டத்தில் உங்களுக்குத் துணையாக இருந்தவர்கள் யாவர்?

காளிஸ்வரன்: என் பெற்றோர்கள் எனக்களித்த ஊக்கமே எனக்கு பெரிய ஆதரவாக இருந்தது. மேலும், என் பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் என் முன்னேற்றத்திற்கு வேராக இருந்தவர்கள் என்றே சொல்ல வேண்டும்.

 

கேள்வி: காளிஸ்வரன், அடுத்து என்ன திட்டங்கள் கொண்டிருக்கிறீர்கள்?

காளிஸ்வரன்: ஆறாண்டுகளில் நான் கற்றுக் கொண்டது முயற்சித்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதாகும். ஆகவே, திட்டங்களை வகுக்கும் முன் முயற்சியை விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். படிவம் ஒன்றிலிருந்து என் மனநிலையை அதற்குத் தகுந்தாற்போல வடிவமைத்துக் கொள்ளவிருக்கிறேன்.

கேள்வி: யூ.பி.எஸ்.ஆர் சோதனையில் எட்டு ‘ஏ’க்கள் பெற முடியவில்லை என்று கவலைப்படும் மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

காளிஸ்வரன்: 21ஆம் நூற்றாண்டு கல்வி நமக்குச் சவாலைக் கொடுத்திருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஆகவே, இச்சாவல்களைப் புரிந்து கொண்டு நாம் நம்மை மேலும் உயர்த்திக் கொள்ள இதுவே ஒரு சரியான வாய்ப்பு என்று நம்புங்கள். கவலைகள் நம்மைவிட்டுத் தூரம் போய்விடும்.

 

முயற்சியை உழைப்பாகச் செலுத்திய நீங்கள் அனைவரும் வெற்றியாளர்களே. வெற்றிக்கு இச்சமூகம் எட்டு ‘ஏ’ என்று நிர்ணயித்திருக்கலாம்; ஆனால், அதுவொரு சிறந்த அடைவுநிலை எனலாம். மற்ற அனைத்துத் தேர்ச்சியும் பாராட்டுதலுக்குரியதே என்பதையும் நாம் கொண்டாடியே ஆக வேண்டும். இன்றைய ‘சி’ நாளை ‘பி’ ஆகலாம். நாளைய ‘பி’ நாளை மறுநாள் ‘ஏ’ ஆகலாம். 

 

நேர்காணல்: ஆசிரியர் கே.பாலமுருகன்