UPSR STAR #8: Thanesha Sri SakthiVelan (SJKT LDG NOVA SCOTIA 2) அவர்களும் கதாநாயகர்களே 2018
‘ஏ பெற்ற மாணவர்களையும் ‘டி’ பெற்ற மாணவர்களையும் ஒப்பிட்டு மனத்தைப் புண்படுத்தாதீர்கள்’ – தனிஷாஸ்ரீ
மாணவர் பெயர்: தனிஷாஸ்ரீ சக்திவேலன்
தேசிய வகை தமிழ்ப்பள்ளி நோவா ஸ்கோஷியா தோட்டம் 2, தெலுக் இந்தான்
யூ.பி.எஸ்.ஆர் அடைவுநிலை: 2A,2B,2C,2D
நேர்காணல்:
கேள்வி: வணக்கம் தனிஷா. யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் பெற்றவுடன் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
தனிஷா: வணக்கம் ஐயா. முதலில் கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது. நான் 5 ‘ஏ’க்கள் பெறுவேன் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால், 2’ஏ’ மட்டுமே கிடைத்தது. இருப்பினும் என் பள்ளியில் என் தேர்வு முடிவுக்காக ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் பாராட்டினார்கள்.
கேள்வி: நீங்கள் இவ்வடைவுநிலையைப் பெறுவதற்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருப்பீர்கள் அல்லவா? அவர்களைக் குறிப்பிடவும்.
தனிஷா: நான் என் ஆசிரியர்களுக்கு முக்கியமாக நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக ஆசிரியர் திருமதி சத்யப்பிரியா, திருமதி வி.லெட்சுமி, திருமதி தேவி, குமாரி ஸ்ரீ சுகந்தி, இறுதியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.தமிழ்ச்செல்வன் ஆகியோரை என்னால் மறக்க இயலாது. இவர்களால்தான் என் திறமையை வெளிக்கொணர முடிந்தது. என் பெற்றோர்களையும் நான் இவ்வேளையில் நினைத்துப் பார்க்கிறேன். அவர்களும் எனக்காக நிறைய தியாகம் செய்துள்ளார்கள்.
கேள்வி: யூ.பி.எஸ்.ஆர் தேர்வு உங்களுக்குக் கற்றுக் கொடுத்த படிப்பினை என்ன?
தனிஷா: யூ.பி.எஸ்.ஆர் தேர்வு எனக்குக் கற்றுக் கொடுத்த படிப்பினை ‘முயற்சியின்றி எதனையும் சாதிக்க இயலாது’ என்பதே ஆகும்.
கேள்வி: ‘ஏ’க்கள் பெறுவது மட்டும்தான் வெற்றி என்று நினைக்கிறீர்கள்?
தனிஷா: இல்லை ஐயா. தேர்ச்சிப் பெற்றால்கூட இக்காலக்கட்டத்தில் ஒரு சாதனைத்தான் என்பதைப் புரிந்து கொண்டேன். மற்ற மாணவர்கள் ‘டி’ எடுத்திருந்தால்கூட ‘நல்ல முயற்சித்தான்’ என்று தோளில் தட்டிக் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்வதைக் கைவிடமாட்டார்கள். ‘ஏ’ எடுத்த பிள்ளையையும் ‘டி’ எடுத்த பிள்ளையையும் ஒப்பிட்டு மனத்தைப் புண்படுத்த வேண்டாம் என்று தயவுக்கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி: மிக அருமையாகச் சொன்னீர்கள் தனிஷா. அடுத்து என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?
தனிஷா: நான் அடுத்து ஹூத்தான் மெலிந்தாங் இடைநிலைப்பள்ளியில் பயிலவுள்ளேன் ஐயா. அங்கு நடந்தேறும் முக்கியத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று என் முயற்சிக்குப் பலனைக் கொடுக்கப் பாடுபடுவேன். இத்தகைய சிந்தனைக்கு யூ.பி.எஸ்.ஆர் தேர்வுத்தான் எனக்கு வாய்ப்பு அமைத்துக் கொடுத்தது. மிக்க நன்றி ஐயா.
இங்குப் பாராட்டுவதற்கு வெற்றிப் பெற்றவர்களும் தூற்றுவதற்குத் தோல்வி அடைந்தவர்களும் தேவைப்படுகிறார்கள். இரு தரப்பையும் ஒன்றாக ஒப்பிட்டுப் பேசி ஒரு தரப்பினரைக் கீழிறக்கிப் பார்க்கும் மனநிலையைத் துறப்போம். எல்லோரும் களத்தில் செயலாற்றியவர்கள்தான். ஆனால், அடைவில் வேறுபாடுகள் இருக்கலாம்; அவர்களுக்கு வாய்ப்பு இன்னும் துலங்காமல் இருக்கலாம். பொறுத்திருந்து அனைவருக்கும் வாய்ப்பு அமைந்தால் வெற்றியாளர்கள் தான் என்று கருத்துரைத்துத் தோளில் தட்டிக் கொடுப்போம்.
நேர்காணல்: ஆசிரியர் கே.பாலமுருகன்
பிற நேர்காணல்களை வாசிக்க:
நேர்காணல் 1 ‘கதாநாயகர் #1 : https://balamurugan.org/2018/12/02/upsr-star-1-devaggan-kanapathy-sjkt-tun-aminah-johor-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 2 ‘கதாநாயகர் #2: https://balamurugan.org/2018/12/03/upsr-star-2-prishitha-anandan-sjkt-pasir-gudang-johor-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 3 ‘கதாநாயகர் #3: https://balamurugan.org/2018/12/04/upsr-star-3-neevindrran-narendran-sjkt-mak-mandin-penang-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 4 ‘கதாநாயகர் #4: https://balamurugan.org/2018/12/04/upsr-star-4-navinesh-pannirselvam-sjkt-ldg-pelepah-kota-tinggi-johor-அவர்களும்-கதாநா
நேர்காணல் 5 ‘கதாநாயகர் #5: https://balamurugan.org/2018/12/05/upsr-star-5-yashini-sundaram-sjkt-ldg-changkat-salak-perak-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 7 ‘கதாநாயகர் #7 https://balamurugan.org/2018/12/07/upsr-star-7-nagatharaneswary-marimuthu-sjkt-ldg-harvard-3-kedah-அவர்களும்-கதாநா