UPSR STAR #9: Arivalagan RaviChanran (SJKT MAHAJOTHI, KEDAH) அவர்களும் கதாநாயகர்களே 2018
‘நண்பர்களே நாம் நிற்பது முதல் படியே’ – அறிவழகன்
மாணவர் பெயர்: அறிவழகன் ரவிசந்திரன்
மகாஜோதி தமிழ்ப்பள்ளி, கெடா
யூ.பி.எஸ்.ஆர் அடைவுநிலை: 1B,5C,2D
நேர்காணல்:
கேள்வி: வணக்கம் அறிவழகன். யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் எப்படி இருந்தன?
அறிவழகன்: வணக்கம் ஐயா. எனக்கு முதலில் மிகவும் பதற்றமாக இருந்தது. யார் என்ன சொல்வார் என்று தயங்கினேன். பின்னர், என் முயற்சிக்கான முடிவு இதுதான் இதைவிட நல்ல முடிவு ஒரு நாள் நான் பெறுவேன் என்று மனவுறுதியை உருவாக்கிக் கொண்டேன்.
கேள்வி: இதுவே நல்ல தேர்ச்சி என்றுத்தானே கருதுகிறீர்கள்?
அறிவழகன்: ஆம் ஐயா. நான் இதற்கு முன்பு மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து முன்னேறியவன். ஆகவே, இந்தத் தேர்ச்சி எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
கேள்வி: இந்நிலையை அடைய என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள்?
அறிவழகன்: நான் என் கவனம் முழுவதையும் ஆசிரியர் கற்றுத்தரும் உத்திகள், வழிமுறைகள் மீது செலுத்தினேன். அதுவே என் வெற்றிக்கும் காரணம். ஒரு பயிற்சி நூலைச் செய்யும்போது நாம் காட்டும் கவனத்தை ஆசிரியர் பாடம் போதிக்கும் காட்டுவதில்லை. அதனால்தான் கற்றலில் நிறைய சிக்கல் ஏற்படுகின்றன.
கேள்வி: நீங்கள் யாருகெல்லாம் நன்றி சொல்ல நினைக்கிறீர்கள்?
அறிவழகன்: நான் என் பெற்றோர்களுக்கும் எனக்குக் கற்றுக் கொடுத்த மகாஜோதி தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் என் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன். அவர்கள் என் வாழ்வில் ஒளியேற்றியவர்கள்.
கேள்வி: உங்களுக்கு என்ன பாடம் மிகவும் பிடிக்கும்? ஏன்?
அறிவழகன்: எனக்குத் தமிழ்மொழிப் பாடமே அதிகம் பிடித்த பாடம் ஆகும். ஒன்றாம் ஆண்டு முதல் எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களே எனக்குள் அந்த ஆர்வத்தை உருவாக்கிவிட்டார்கள் எனலாம்.
கேள்வி: அறிவழகன், அடுத்து என்ன திட்டங்களைச் சிந்தித்து வைத்துள்ளீர்கள்?
அறிவழகன்: முயற்சி போதவில்லை என்பதால் என் அடுத்த திட்டமே கல்வியில் மேலும் மேலோங்கி வர முயற்சிகளை இன்னும் அதிகரிப்பேன். கல்வியிலும் விளையாட்டிலும் ஆர்வத்துடன் செயல்பட எண்ணியுள்ளேன்.
கேள்வி: தேர்வு முடிவுகள் திருப்தியளிக்கவில்லை என்று நிறைய மாணவர்கள் கவலை அடைந்திருப்பார்கள். அவர்களுக்கு உங்கள் சார்பாக என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
அறிவழகன்: கவலைப்படாதீர்கள் நண்பர்களே நாம் நிற்பது முதல் படியே. இன்னும் பல படிகளை ஏற வேண்டும். ஆகவே, சோர்ந்துவிடாமல் உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள்.
(நன்றி ஆசிரியை திருமதி கண்மணி)
படிகளில் ஏறிச் செல்வதே ஒருவகையில் வெற்றியின் ருசியை அடையத் துவங்கிவிட்டீர்கள் என்று அர்த்தப்படுத்தலாம். ஏறினால் வழுக்கும், கீழே விழலாம் என்று பயந்து ஏறாமல் இருப்பதே தோல்வி. இடறினால் கைத்தட்டிச் சிரிக்க ஒரு கூட்டம் இருக்கும்; ஆனால், சிரித்துவிட்டு அவர்கள் போய்விடுவார்கள்; மீதி வாழ்க்கையை வாழ வேண்டியது நாம்தான். ஆகவே, நமக்காக வாழ்வோம். நமக்காக மட்டுமே முயற்சிப்போம். அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுப்போம்.
நேர்காணல்: ஆசிரியர் கே.பாலமுருகன்
பிற நேர்காணல்களை வாசிக்க:
நேர்காணல் 1 ‘கதாநாயகர் #1 : https://balamurugan.org/2018/12/02/upsr-star-1-devaggan-kanapathy-sjkt-tun-aminah-johor-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 2 ‘கதாநாயகர் #2: https://balamurugan.org/2018/12/03/upsr-star-2-prishitha-anandan-sjkt-pasir-gudang-johor-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 3 ‘கதாநாயகர் #3: https://balamurugan.org/2018/12/04/upsr-star-3-neevindrran-narendran-sjkt-mak-mandin-penang-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 4 ‘கதாநாயகர் #4: https://balamurugan.org/2018/12/04/upsr-star-4-navinesh-pannirselvam-sjkt-ldg-pelepah-kota-tinggi-johor-அவர்களும்-கதாநா
நேர்காணல் 5 ‘கதாநாயகர் #5: https://balamurugan.org/2018/12/05/upsr-star-5-yashini-sundaram-sjkt-ldg-changkat-salak-perak-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 7 ‘கதாநாயகர் #7 https://balamurugan.org/2018/12/07/upsr-star-7-nagatharaneswary-marimuthu-sjkt-ldg-harvard-3-kedah-அவர்களும்-கதாநா
நேர்காணல் 8 ‘கதாநாயகர் #8 https://balamurugan.org/2018/12/08/upsr-star-8-அவர்களும்-கதாநாயகர்கள