சீதக்காதி திரைப்பார்வை Seethakathi Cinema Review கலையில் உருவாகும் வெற்றிடங்களைக் கலையே நிரப்பிக் கொள்ளும்.
For the review click on the youtube below:
சினிமாவை மீண்டும் கலையை நோக்கி நகர்த்தும் ஒரு துவக்கம் சீதக்காதி.
For the review click on the youtube below:
சினிமாவை மீண்டும் கலையை நோக்கி நகர்த்தும் ஒரு துவக்கம் சீதக்காதி.
கொல்லப்பட்டவரைப் பற்றிய விபரங்கள்:
பெயர்: மணிமாறன் த/பெ கந்தசாமி
வயது: 34
கொல்லப்பட்ட இடம்: செனாய், ஜொகூர் (அவருடைய வீடு)
கொல்லப்பட்டதற்கான காரணம்: ‘கேங்’ சண்டை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட விதம்: உடலில் பல இடங்களில் வெட்டுக் காயம், தலையின் இடது பக்கத்தில் ஓர் ஆழமான வெட்டில் மரணம் ஏற்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட நாள்: 14.12.2018
நேரம்: மாலை 5.00லிருந்து இரவு 8.30க்குள் இருக்கலாம்.
கொல்லப்பட்டவரின் விவரங்கள்:
போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக புக்கிட் காயூ ஹீத்தாம் (தாய்லாந்து மலேசியா எல்லை)-யில் பிடிப்பட்டு நான்காண்டுகள் சிறையில் இருந்து வெளிவந்தவர். பின்னர், ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்ததாகவும் அதே சமயம் அங்கும் போதைப்பொருள் கைமாற்றம் செய்து வேலையை விட்டு நீக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. கொலைக்கு முன்பு நான்கு மாதங்கள் வேலை ஏதும் இல்லாமல் செனாயில் சுற்றிக் கொண்டு அடித்தடியில் ஈடுபட்டு வந்ததாகவும் தகவல் பெறப்பட்டன. எப்பொழுதும் அவன் வீட்டைத் தேடி பலர் சந்தேகப்படும்படி வந்ததால் அக்கம் பக்கத்தில் காவல்துறையில் புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அவனுடைய வீடு இருந்த அதே வரிசையில் குடியிருந்த திரு.கணேசன் முதலில் காவல்துறையில் புகார் கொடுத்த போதே இக்கொலை கண்டறியப்பட்டது.
வாக்குமூலம் 1:
திரு.கணேசன் (அண்டை வீட்டார்)
மணிமாறன் என்பவனை எனக்கு ஒரு வருடம் மட்டுமே பழக்கம். ஆரம்பத்தில் இங்குள்ளவர்களுக்கு கொஞ்சம் உதவியாக இருந்தபோது எனக்கும் வீட்டில் சாயம் பூச ஒருமுறை உதவியிருக்கிறான். அப்பொழுதிலிருந்துதான் பழக்கம். ஆனால், முதலில் அவனுடைய பின்புலம் எனக்குத் தெரியாமல்தான் பழகினேன். பின்னர், அங்கு அவனுக்குக் குண்டல் கும்பல் ஆட்களுடன் தொடர்பு இருப்பதாகக் கேள்விப்பட்டுத்தான் அவனிடமிருந்து விலகினேன். அதன் பிறகு அவனுடன் பேச்சு வார்த்தை இல்லை. ஒருமுறை குடித்துவிட்டு என் வீட்டின் முன் நின்று கத்திக் கொண்டிருந்தான். அப்பொழுதும் அவன் மீது ஒரு புகார் கொடுத்த தகவல் இருக்கும்.
அன்றைய இரவு மணிமாறனின் வீட்டிலிருந்து எனக்குத் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் அதிர்ந்துபோனேன். அவன் வீட்டிலிருந்து ஒரு நான்கு வீடு தள்ளியே என் வீடாக இருந்தாலும் அச்சத்தம் என் உடலையே ஒருமுறை நடுங்கச் செய்துவிட்டது. உடனே, நான் தான் முதலில் காவல்நிலையம் சென்று அவன் மீது புகார் கொடுத்தேன்.
காவல்துறை திரு.கணேசனிடம் எழுப்பியக் கேள்விகள்:
1.உங்களுக்கும் மணிமாறனுக்கும் இருந்த நட்பு அங்குள்ள அனைவருக்கும் தெரியுமா?
கணேசன்: அந்த வீட்டு வரிசையில் இருந்த சிலருக்கும் மட்டும் தெரியும். அவன் அங்கும் சிலரிடம் என்னைப் போலவே பழகி வந்தான். ஆனால், என்னைப் போல அவனிடம் நெருங்கி யாரும் பழகியது பற்றி எனக்குத் தெரியவில்லை.
2.அவன் வீட்டுக்கு வந்தவர்களில் யார் மிகவும் சந்தேகப்படக்கூடிய அளவில் இருந்தது?
கணேசன்: எனக்கு அது சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், அந்தத் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் அவன் வீட்டை விட்டு ஒரு வயதான பெண்மணி மட்டும் வெளியில் போனதை நான் பார்த்தேன். ஆனால், யார் என்று தெரியவில்லை.
3. அவரை இதற்கு முன் வேறு எங்காவது பார்த்த ஞாபகம்?
கணேசன்: இல்லை. அந்த முகம் அவ்விடத்திற்கு முற்றிலும் புதிது என்று நினைக்கிறேன்.
4.இதற்கு முன் அப்படி யாரும் பெண்கள் அவர் வீட்டிற்கு வந்ததாக ஏதும் தகவல் உண்டா? நீங்கள் பார்த்த அப்பெண்மணியின் முகத்தை அடையாளம் காட்ட இயலுமா?
கணேசன்: அவன் ஒரு பெண்ணைக் காதலித்து வந்தான். அவளைச் சில நேரங்களில் வீட்டிற்கு அழைத்து வருவதாக ஆட்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நான் வீட்டில் பார்த்தது இல்லை. ஆனால், நான் பார்த்த அவ்வயதான பெண்மணியின் முகம் இருட்டில் தெளிவாகத் தெரியவில்லை.
5.அவருடைய காதலியை உங்களுக்குத் தெரியுமா?
கணேசன்: சிலமுறை அவனோடு மோட்டாரில் செல்வதைப் பார்த்துள்ளேன்.
6.துப்பாக்கி சுடும் சத்தம் என்று சொல்கிறீர்கள் ஆனால் இறந்தவர் வெட்டுக் காயங்கள் பட்டுத்தான் மரணம் அடைந்துள்ளார். இதில் உள்ள முரண் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கணேசன்: எனக்கும் அது புரியவில்லை. அவன் நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் இந்த நியாமெல்லாம் சிந்திக்கத் தூண்டியிருக்கும். இப்போதைக்கு இதுதான் என் எண்ணம்.
வாக்குமூலம் 2:
மணிமாறனின் காதலி சங்கீத்தா
எனக்கும் அவனுக்கும் இருந்த உறவு இவ்வருடம் ஜூன் மாதத்திலேயே இல்லாமல் போய்விட்டது. நான் தான் அவனை வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். அவனுடைய நடத்தையில் எனக்குச் சந்தேகம் இருந்தது. அவனுக்கு இருந்த போதைப்பொருள் பழக்கம்தான் என்னை அவனிடமிருந்து தூரமாக விலக்கியது. மேலும், ஒருமுறை அவன் நண்பன் முரளியை அழைத்து வந்து என்னிடம் தகாத வார்த்தைகளில் பேசினான். அப்பொழுதுதான் என்னால் தொடர்ந்து அவனுடன் காதலில் இருக்க முடியவில்லை. அவன் மரணம்கூட பத்திரிகையில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.
காவல்துறை சங்கீத்தாவிடம் எழுப்பியக் கேள்விகள்:
1.ஜூன் மாதத்திற்குப் பின்னர் மணிமாறனை நீங்கள் வேறு எங்கும் சந்திக்கவில்லையா?
சங்கீத்தா: இல்லை. நான் மலாக்காவிலுள்ள என் அக்கா வீட்டிற்கு வந்துவிட்டேன். ஆதலால், அவன் தொல்லை கைப்பேசியின் வழியாகக் கொஞ்ச நாள் இருந்தது. கைப்பேசி எண்ணையும் மாற்றிவிட்டதால் அதன் பின்னர் அவனை நான் முற்றிலும் மறந்துவிட்டேன்.
2.நீங்கள் எதுவரை படித்துள்ளீர்கள்? இப்பொழுது என்ன வேலை?
சங்கீத்தா: எனக்குப் படிப்பு அவ்வளவாக இல்லை. பி.எம்.ஆர் வரைத்தான் படித்தேன். இப்பொழுது அக்காவின் சிபாரிசில் ஒரு பேரங்காடியில் வேலை செய்கிறேன்.
3.மணிமாறனின் நண்பன் முரளி எப்படிப்பட்டவர்? இருவரின் நட்பு எந்த அளவில் இருந்தது?
சங்கீத்தா: அவரைப் போல முரளியும் போதைப்பொருள் கடத்தலில் இருந்தவன் தான். ஆனால், அவன் பெண்கள் விசயத்தில் கொஞ்சம் தீயப்பழக்கங்கள் உள்ளவன். மணி அவனுடன் சில நேரங்களில் மட்டும்தான் இருந்திருக்கிறார். மணிக்கு இன்னொரு நெருங்கிய நண்பர் இருப்பதாகவும் அவர்தான் சிறையில் மணிக்கு உதவியதாகவும் சொல்வார். ஆனால், பெயர் விபரமெல்லாம் எனக்குத் தெரியாது.
4.கொலை நடப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் மணிமாறனின் வீட்டிலிருந்து ஒரு வயதான பெண்மணி வெளியானதை திரு.கணேசன் பார்த்ததாகச் சொல்லியிருந்தார். அப்பெண்மணி யாராக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
சங்கீத்தா: மணிமாறனுடைய உறவினர்கள் பற்றியோ குடும்பத்தைப் பற்றியோ என்னிடம் அவர் சொன்னதே இல்லை. அவர் சிறைக்குப் போனதும் அவர் குடும்பத்தினரை விட்டுத் தூரம் வந்துவிட்டதாக சொன்னார். அவருடைய பூர்வீகம் எல்லாம் பெர்லிஸ் என்றுத்தான் கேள்விப்பட்டேன். ஆனால், எது உண்மை என்று இப்பொழுது கணிக்க முடியவில்லை.
5.திரு.கணேசன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சங்கீத்தா: அவர் கொஞ்சம் கோபக்காரர். மணிமாறன் மீது பலமுறை புகார் கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். கடைசியாக அவர் வீட்டின் முன் நின்று கத்தியதற்காகக் கடந்த செப்டம்பர் மாதம் என்று நினைக்கிறேன், அவர் புகார் கொடுத்துக் காவல்துறையில் மணிமாறனைப் பிடித்து இரண்டு நாட்கள் உள்ளே வைத்திருந்தார்கள். கணேசனின் வீட்டில் அவருடைய கடைசி மகளை மணிமாறன் சீண்டியிருக்கிறான். என்னுடன் மோட்டாரில் சுற்றும்போதே அவளைப் பார்த்தால் கிண்டல் செய்வான். ஒருவேளை கணேசனுக்கு இதனால்கூட மணியைப் பிடிக்காமல் போயிருக்கலாம்.
வாக்குமூலம் 3:
முரளியின் அம்மா திருமதி செல்லம்மாள்
என் பையன் முரளி காணாமல் போய் எப்படியும் இரண்டு மாதங்கள் இருக்கலாம். கடந்த அக்டோபர் 21ஆம் திகதி அவன் கடைசியாக வீட்டிற்கு வந்தான். அதன் பின்னர் வெளியில் போனவன் வரவே இல்லை. இப்பொழுது வரை அவனைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. மணிமாறனின் கொலை செய்தி கேள்விப்பட்டதும் எனக்கும் பயம் ஏற்பட்டுக் கொண்டது. ஒருவேளை முரளியையும் யாராவது கொன்று எங்காவது வீசியிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன்.
திருமதி செல்லம்மாளிடம் காவல்துறை எழுப்பியக் கேள்விகள்:
1.உங்கள் பையனுக்கும் மணிமாறனுக்கும் இடையே இருந்த உறவு எப்படிப்பட்டது?
செல்லம்மாள்: இந்த மணிமாறனால்தான் என் பையன் இப்படி ஆனான். அவனைச் சந்திக்கும் முன் முரளி அவன் உண்டு அவன் வேலை உண்டென இருந்தான். இருவரும் ஒரே தொழிற்சாலையில் வேலை செய்தார்கள். அப்பொழுதுதான் பழக்கம் ஏற்பட்டு இந்தப் போதைப்பொருளுக்கும் முரளி அடிமையானான். இரண்டு பேரும் அயோக்கியர்கள்தான். இதில் என் பையன் என்ன அவன் என்ன?
2.உங்கள் பையன் காணாமல் போகும் முன் ஏதாவது சந்தேகப்படும்படி நடந்ததா?
செல்லம்மாள்: ஓர் அழைப்பேசி அடிக்கடி வந்து கொண்டிருந்தது அவனும் கொஞ்சம் பரப்பரப்பாக இருந்தான். பின்னர் அன்றைய இரவில் வெளியாகிப் போனவன் மறுநாள் இரவுத்தான் வீட்டிற்கு வந்தான். எங்குப் போனான் என்றெல்லாம் என்னிடம் சொல்ல மாட்டான். வீட்டிற்கு அவனைத் தேடி யாரும் வந்ததில்லை.
3.முரளி காணாமல் போன பின் நீங்கள் அவரைப் பற்றி மணிமாறனிடம் கேட்டீர்களா?
செல்லம்மாள்; இரண்டு முறை அவனிடம் கெஞ்சிக் கேட்டேன். முகத்தில் அடித்ததைப் போல அவன் காட்டிய அலட்சியங்கள்தான் என்னைப் பெருத்த ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. என் பையனின் வாழ்க்கையைச் சீரழித்துவிட்டு என்னை எட்டி உதைக்காத குறையாக துரத்தினான்.
4.முரளியைப் பற்றி எந்தத் தகவலையும் மணிமாறன் சொல்லவில்லையா?
செல்லம்மாள்: இல்லை. எனக்குத் தெரியாது என்று மட்டுமே சொன்னான்.
5.நீங்கள் மணிமாறனை எங்கு எப்பொழுது சந்தித்தீர்கள்?
செல்லம்மாள்: முரளி காணாமல்போன அதே மாதத்தில்தான். திகதியெல்லாம் ஞாகபத்தில் இல்லை. அவனைத் தேடி ஒருமுறை வீட்டிற்குப் போனேன். ஆனால், அவன் அங்கு இல்லை. பின்னர், மதியத்தில் அவனை அங்கிருக்கும் ஒரு சீனக்கடையில் கண்டுவிட்டேன். அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து அவனை தெஸ்கோ பேரங்காடியில் தற்செயலாகப் பார்த்துக் கேட்டேன். அவ்வளவுத்தான் ஐயா.
**************
சந்தேகத்திற்குரிய தடயம் 1: துப்பாக்கி சத்தம் கேட்டதாக திரு.கணேசன் மட்டுமே புகார் கொடுத்துள்ளார். ஆனால், அந்த வரிசையில் இருக்கும் சிலர் அப்படிக் கேட்கவில்லை என்றும் அது பட்டாசு சத்தம் என்றும் தெரிவித்திருந்தார்கள். மேலும், திரு.கணேசன் அவருடைய கடைசி மகள் விவகாரம் குறித்து இதுவரை எந்தப் புகாரிலும் குறிப்பிட்டத்தில்லை.
சந்தேகத்திற்குரிய தடயம் 2: ஜூன் மாதத்திற்குப் பின்னர் தனக்கும் மணிமாறனுக்கும் பேச்சு வார்த்தை இல்லை என்று வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருக்கும் சங்கீத்தா அதே வாக்குமூலத்தில் செப்டம்பர் மாதத்தில் நடந்த கணேசன் மகள் விவகாரம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய தடயம் 3: கொலை நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன் திருமதி செல்லம்மாள் செனாயில் இருக்கும் (மணிமாறனை அவள் சந்தித்த) சீனக்கடையில் வெகுநேரம் அமர்ந்திருந்ததைச் சிலர் தனிப்பட்டப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்கள்.
சந்தேகத்திற்குரிய தடயம் 4: திரு.கணேசன் அவர்களுக்கு இரண்டு முறை கண் சிகிச்சை செய்திருப்பதால் அவருடைய அருகாமை மற்றும் தூரப்பார்வையில் சிக்கல் இருப்பதாக மருத்துவச் சான்றிதழ் குறிப்பிடுகிறது.
சந்தேகத்திற்குரிய தடயம் 5: மணிமாறனின் வீட்டின் பின்பகுதியில் இருக்கும் சீனர் ஒருவர் ஒரு வாரத்திற்கு முன் மணிமாறனின் நண்பன் முரளி பின்பக்கமாக மணிமாறனின் வீட்டில் நுழைந்ததாக உறுதியாக விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய தடயம் 6: மணிமாறன் சிறையில் இருக்கும்போது ஒரு பெண்மணி பெயர் குறிப்பிட விரும்பாமல் அவனைப் பார்க்க 17 முறை வந்துள்ளார்.
சந்தேகத்திற்குரிய தடயம் 7: பெர்லிஸில் மணிமாறனின் குடும்பத்தைப் பற்றி எந்தவொரு தகவலும் காவல்துறைக்குக் கிடைக்கவில்லை. இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
யார் கொலையாளி?
சந்தேகத்திற்குரிய நபர் 1: திரு.கணேசன்
சந்தேகத்திற்குரிய நபர் 2: திருமதி செல்லம்மாள்
சந்தேகத்திற்குரிய நபர் 3: சங்கீத்தா
சந்தேகத்திற்குரிய நபர் 4: நண்பன் முரளி
சந்தேகத்திற்குரிய நபர் 5: இன்னமும் விசாரணையில் உள்ளது.
குறிப்பு: மணிமாறன் இறப்பதற்கு முந்தைய இரவு அவனுக்குச் சில கனவுகள் வருகின்றன.
கனவு 1: அவன் போதையில் ஒரு நிலத்தைத் தோண்டிக் கொண்டிருக்கிறான். மண்ணிலிருந்து திடீரென பாலும் தண்ணீரும் இரத்தமும் கொந்தளித்து வெளிவருகின்றன.
கனவு 2: அவனை விடாமல் யாரோ துரத்துகிறார். அவனால் யாரென்று கணிக்க இயலவில்லை.
கனவு 3: ஒரு பளபளப்பான கத்தி அவன் முன்னே தொங்கிக் கொண்டிருக்கிறது.
ஆக்கம்: கே.பாலமுருகன்
மாணவர் பெயர்: அபிராமி தர்ஷினி லோகதாசன்
தேசிய வகை கிண்றாரா பூச்சோங் தமிழ்ப்பள்ளி
யூ.பி.எஸ்.ஆர் அடைவுநிலை: 2A, 3B, 3C
நேர்காணல்:
கேள்வி: வணக்கம் அபிராமி. இந்த யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் உங்களுக்கு எவ்வாறு மன உணர்வுகளை உண்டாக்கியது?
அபிராமி: வணக்கம் ஐயா. என் முயற்சி வீண் போகவில்லை என்பதை இத்தேர்வு முடிவு எனக்கு உணர்த்தியுள்ளதால் நான் மகிழ்ச்சியாகவே உணர்கிறேன்.
கேள்வி: நீங்கள் எதிர்பார்த்த தேர்ச்சியா இது?
அபிராமி: நான் இன்னும் அதிகமான ‘ஏ’க்களை எதிர்பார்த்தேன் ஐயா. குறிப்பாக ஆங்கிலம் கட்டுரையில் நான் எப்பொழுதும் சிறப்பான தேர்ச்சித்தான் பெறுவேன். ஆனால், அப்பாடத்தில் எனக்கு ‘பி’ கிடைத்தது கொஞ்சம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் என்னால் அக்கவலையிலிருந்து மீள முடிந்தது. இன்னும் முயற்சிக்க வேண்டும் என்று உணர்ந்துள்ளேன்.
கேள்வி: இத்தேர்ச்சியைப் பெற நீங்கள் என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள்?
அபிராமி: நான் ஆரம்பத்தில் மிகவும் பலவீனமாக இருந்த பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தினேன். அதனால்தான் என்னால் அப்பாடங்களில் சிறந்த தேர்ச்சிப் பெற முடிந்தது. மேலும், பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்றேன். கண்ணும் கருத்துமாய் படித்தேன் என்றே சொல்லலாம்.
கேள்வி: உங்களுக்குப் பிடித்த பாடம் எதுவாக இருந்தது? ஏன்?
அபிராமி: எனக்கு அறிவியல் பாடம் என்றால் மிகவும் பிடிக்கும் ஐயா. இந்த உலகை அறிந்து கொள்ள எனக்கு உதவிய பாடம் அதுதான்.
கேள்வி: அறிவியல் தவிர்த்து வேறு துறையில் உங்களுக்கு ஆர்வம் உள்ளதா?
அபிராமி: ஆமாம், ஐயா. எனக்கு ஓவியம், வண்ணம் தீட்டுதல் என்றால் மிகவும் பிடிக்கும். சிறுவயதிலிருந்தே ஓவியத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறேன். எதிர்காலத்தில் ஓவியத் துறையில் சாதிக்க வேண்டும் என்றும் எண்ணம் கொண்டுள்ளேன். இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை ஓவியத்தின் வழியாகவே உணர்ந்தேன்.
கேள்வி: அருமை அபிராமி. கலை குறித்தும் உங்கள் ஆர்வம் மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. இவ்வேளையில் நீங்கள் யாருக்கெல்லாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளீர்கள்?
அபிராமி: நான் எனக்குக் கற்றுக் கொடுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். மேலும், என் பெற்றோருக்கும் என் முழுமையான அன்பு உரித்தாக வேண்டும். இவர்கள் யாவரும் இல்லையெனில் நான் இத்தேர்ச்சியை அடைந்திருக்க இயலாது. என்னை நேர்காணல் செய்து வெளியீடும் உங்களுக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது ஐயா. மிக்க நன்றி.
வெற்றியோ தோல்வியோ அல்லது முன்னேற்றமோ உங்களுக்குத் தட்டிக் கொடுத்தவர்களை மறவாதீர்கள். உங்களின் சிறு முன்னேற்றத்தில் அவர்களின் பங்கை என்றுமே நினைவுக்கூர்ந்துவிடுங்கள். செய்நன்றி மறவாமல் வாழும் வாழ்க்கை அற்புதமானது. மேலும், உங்களுக்குக் கைக்கொடுக்கப் பல கைகள் தோன்றும்.
நேர்காணல்: ஆசிரியர் கே.பாலமுருகன்
பிற நேர்காணல்களை வாசிக்க:
நேர்காணல் 1 ‘கதாநாயகர் #1 : https://balamurugan.org/2018/12/02/upsr-star-1-devaggan-kanapathy-sjkt-tun-aminah-johor-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 2 ‘கதாநாயகர் #2: https://balamurugan.org/2018/12/03/upsr-star-2-prishitha-anandan-sjkt-pasir-gudang-johor-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 3 ‘கதாநாயகர் #3: https://balamurugan.org/2018/12/04/upsr-star-3-neevindrran-narendran-sjkt-mak-mandin-penang-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 4 ‘கதாநாயகர் #4: https://balamurugan.org/2018/12/04/upsr-star-4-navinesh-pannirselvam-sjkt-ldg-pelepah-kota-tinggi-johor-அவர்களும்-கதாநா
நேர்காணல் 5 ‘கதாநாயகர் #5: https://balamurugan.org/2018/12/05/upsr-star-5-yashini-sundaram-sjkt-ldg-changkat-salak-perak-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 7 ‘கதாநாயகர் #7 https://balamurugan.org/2018/12/07/upsr-star-7-nagatharaneswary-marimuthu-sjkt-ldg-harvard-3-kedah-அவர்களும்-கதாநா
நேர்காணல் 8 ‘கதாநாயகர் #8 https://balamurugan.org/2018/12/08/upsr-star-8-அவர்களும்-கதாநாயகர்கள
நேர்காணல் 9 ‘கதாநாயகர் #9 https://balamurugan.org/2018/12/09/upsr-star-9-arivalagan-ravichanran-sjkt-mahajothi-அவர்களும்-கதாநாயக
நேர்காணல் 10 ‘கதாநாயகர் #10 https://balamurugan.org/2018/12/11/upsr-star-10-kallieswaran-sargunan-sjkt-sg-tok-pawang-kedah-அவர்களும்-கதாநாய
மாணவர் பெயர்: காளிஸ்வரம் சற்குணன்
சுங்கை தோ பாவாங் தமிழ்ப்பள்ளி
யூ.பி.எஸ்.ஆர் அடைவுநிலை: 3A,1B,4C
நேர்காணல்:
கேள்வி: உங்கள் பார்வையில் யூ.பி.எஸ்.ஆர் பயணம் எப்படி இருந்தது?
காளிஸ்வரன்: யூ.பி.எஸ்.ஆர் தேர்வு சற்றுக் கடினமாக இருந்தாலும் என்னால் இயன்ற உழைப்பை நான் முழுமூச்சுடன் செலுத்தினேன். ஆகவே, இப்பயணம் கடினமாக இருந்தாலும் என் ஆற்றலை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.
கேள்வி: இத்தேர்ச்சி உங்களுக்குத் திருப்தி அளித்ததா? ஏன்?
காளிஸ்வரன்: எட்டு ‘ஏ’ பெற வேண்டுமென்றுத்தான் எல்லோரையும் போல நானும் கனவு கண்டேன். இருப்பினும் எனக்கு அக்கனவு நிறைவேறவில்லை என்கிற கவலை இல்லை. நான் என் முயற்சியை விட்டுக் கொடுக்காமல் உழைத்தற்காகப் பெருமைப்படுகிறேன் ஐயா.
கேள்வி: இந்நிலையை அடைய என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள்?
காளிஸ்வரன்: நான் முதலில் ஆசிரியர் கற்றுக் கொடுக்கும் பாடத்தின் மீது முழுமையான கவனம் செலுத்தினேன். இதைச் செய்யவில்லை என்றால் எந்த மாணவரும் வெற்றிப்பெற இயலாது. அடுத்து, ஆசிரியர்கள் கொடுக்கும் பாடங்களை மீள்பார்வை செய்தேன். நிறைய பயிற்சிகளை மேற்கொண்டேன்.
கேள்வி: இத்தேர்வுக் காலக்கட்டத்தில் உங்களுக்குத் துணையாக இருந்தவர்கள் யாவர்?
காளிஸ்வரன்: என் பெற்றோர்கள் எனக்களித்த ஊக்கமே எனக்கு பெரிய ஆதரவாக இருந்தது. மேலும், என் பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் என் முன்னேற்றத்திற்கு வேராக இருந்தவர்கள் என்றே சொல்ல வேண்டும்.
கேள்வி: காளிஸ்வரன், அடுத்து என்ன திட்டங்கள் கொண்டிருக்கிறீர்கள்?
காளிஸ்வரன்: ஆறாண்டுகளில் நான் கற்றுக் கொண்டது முயற்சித்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதாகும். ஆகவே, திட்டங்களை வகுக்கும் முன் முயற்சியை விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். படிவம் ஒன்றிலிருந்து என் மனநிலையை அதற்குத் தகுந்தாற்போல வடிவமைத்துக் கொள்ளவிருக்கிறேன்.
கேள்வி: யூ.பி.எஸ்.ஆர் சோதனையில் எட்டு ‘ஏ’க்கள் பெற முடியவில்லை என்று கவலைப்படும் மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
காளிஸ்வரன்: 21ஆம் நூற்றாண்டு கல்வி நமக்குச் சவாலைக் கொடுத்திருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஆகவே, இச்சாவல்களைப் புரிந்து கொண்டு நாம் நம்மை மேலும் உயர்த்திக் கொள்ள இதுவே ஒரு சரியான வாய்ப்பு என்று நம்புங்கள். கவலைகள் நம்மைவிட்டுத் தூரம் போய்விடும்.
முயற்சியை உழைப்பாகச் செலுத்திய நீங்கள் அனைவரும் வெற்றியாளர்களே. வெற்றிக்கு இச்சமூகம் எட்டு ‘ஏ’ என்று நிர்ணயித்திருக்கலாம்; ஆனால், அதுவொரு சிறந்த அடைவுநிலை எனலாம். மற்ற அனைத்துத் தேர்ச்சியும் பாராட்டுதலுக்குரியதே என்பதையும் நாம் கொண்டாடியே ஆக வேண்டும். இன்றைய ‘சி’ நாளை ‘பி’ ஆகலாம். நாளைய ‘பி’ நாளை மறுநாள் ‘ஏ’ ஆகலாம்.
நேர்காணல்: ஆசிரியர் கே.பாலமுருகன்
‘நண்பர்களே நாம் நிற்பது முதல் படியே’ – அறிவழகன்
மாணவர் பெயர்: அறிவழகன் ரவிசந்திரன்
மகாஜோதி தமிழ்ப்பள்ளி, கெடா
யூ.பி.எஸ்.ஆர் அடைவுநிலை: 1B,5C,2D
நேர்காணல்:
கேள்வி: வணக்கம் அறிவழகன். யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் எப்படி இருந்தன?
அறிவழகன்: வணக்கம் ஐயா. எனக்கு முதலில் மிகவும் பதற்றமாக இருந்தது. யார் என்ன சொல்வார் என்று தயங்கினேன். பின்னர், என் முயற்சிக்கான முடிவு இதுதான் இதைவிட நல்ல முடிவு ஒரு நாள் நான் பெறுவேன் என்று மனவுறுதியை உருவாக்கிக் கொண்டேன்.
கேள்வி: இதுவே நல்ல தேர்ச்சி என்றுத்தானே கருதுகிறீர்கள்?
அறிவழகன்: ஆம் ஐயா. நான் இதற்கு முன்பு மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து முன்னேறியவன். ஆகவே, இந்தத் தேர்ச்சி எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
கேள்வி: இந்நிலையை அடைய என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள்?
அறிவழகன்: நான் என் கவனம் முழுவதையும் ஆசிரியர் கற்றுத்தரும் உத்திகள், வழிமுறைகள் மீது செலுத்தினேன். அதுவே என் வெற்றிக்கும் காரணம். ஒரு பயிற்சி நூலைச் செய்யும்போது நாம் காட்டும் கவனத்தை ஆசிரியர் பாடம் போதிக்கும் காட்டுவதில்லை. அதனால்தான் கற்றலில் நிறைய சிக்கல் ஏற்படுகின்றன.
கேள்வி: நீங்கள் யாருகெல்லாம் நன்றி சொல்ல நினைக்கிறீர்கள்?
அறிவழகன்: நான் என் பெற்றோர்களுக்கும் எனக்குக் கற்றுக் கொடுத்த மகாஜோதி தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் என் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன். அவர்கள் என் வாழ்வில் ஒளியேற்றியவர்கள்.
கேள்வி: உங்களுக்கு என்ன பாடம் மிகவும் பிடிக்கும்? ஏன்?
அறிவழகன்: எனக்குத் தமிழ்மொழிப் பாடமே அதிகம் பிடித்த பாடம் ஆகும். ஒன்றாம் ஆண்டு முதல் எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களே எனக்குள் அந்த ஆர்வத்தை உருவாக்கிவிட்டார்கள் எனலாம்.
கேள்வி: அறிவழகன், அடுத்து என்ன திட்டங்களைச் சிந்தித்து வைத்துள்ளீர்கள்?
அறிவழகன்: முயற்சி போதவில்லை என்பதால் என் அடுத்த திட்டமே கல்வியில் மேலும் மேலோங்கி வர முயற்சிகளை இன்னும் அதிகரிப்பேன். கல்வியிலும் விளையாட்டிலும் ஆர்வத்துடன் செயல்பட எண்ணியுள்ளேன்.
கேள்வி: தேர்வு முடிவுகள் திருப்தியளிக்கவில்லை என்று நிறைய மாணவர்கள் கவலை அடைந்திருப்பார்கள். அவர்களுக்கு உங்கள் சார்பாக என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
அறிவழகன்: கவலைப்படாதீர்கள் நண்பர்களே நாம் நிற்பது முதல் படியே. இன்னும் பல படிகளை ஏற வேண்டும். ஆகவே, சோர்ந்துவிடாமல் உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள்.
(நன்றி ஆசிரியை திருமதி கண்மணி)
படிகளில் ஏறிச் செல்வதே ஒருவகையில் வெற்றியின் ருசியை அடையத் துவங்கிவிட்டீர்கள் என்று அர்த்தப்படுத்தலாம். ஏறினால் வழுக்கும், கீழே விழலாம் என்று பயந்து ஏறாமல் இருப்பதே தோல்வி. இடறினால் கைத்தட்டிச் சிரிக்க ஒரு கூட்டம் இருக்கும்; ஆனால், சிரித்துவிட்டு அவர்கள் போய்விடுவார்கள்; மீதி வாழ்க்கையை வாழ வேண்டியது நாம்தான். ஆகவே, நமக்காக வாழ்வோம். நமக்காக மட்டுமே முயற்சிப்போம். அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுப்போம்.
நேர்காணல்: ஆசிரியர் கே.பாலமுருகன்
பிற நேர்காணல்களை வாசிக்க:
நேர்காணல் 1 ‘கதாநாயகர் #1 : https://balamurugan.org/2018/12/02/upsr-star-1-devaggan-kanapathy-sjkt-tun-aminah-johor-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 2 ‘கதாநாயகர் #2: https://balamurugan.org/2018/12/03/upsr-star-2-prishitha-anandan-sjkt-pasir-gudang-johor-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 3 ‘கதாநாயகர் #3: https://balamurugan.org/2018/12/04/upsr-star-3-neevindrran-narendran-sjkt-mak-mandin-penang-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 4 ‘கதாநாயகர் #4: https://balamurugan.org/2018/12/04/upsr-star-4-navinesh-pannirselvam-sjkt-ldg-pelepah-kota-tinggi-johor-அவர்களும்-கதாநா
நேர்காணல் 5 ‘கதாநாயகர் #5: https://balamurugan.org/2018/12/05/upsr-star-5-yashini-sundaram-sjkt-ldg-changkat-salak-perak-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 7 ‘கதாநாயகர் #7 https://balamurugan.org/2018/12/07/upsr-star-7-nagatharaneswary-marimuthu-sjkt-ldg-harvard-3-kedah-அவர்களும்-கதாநா
நேர்காணல் 8 ‘கதாநாயகர் #8 https://balamurugan.org/2018/12/08/upsr-star-8-அவர்களும்-கதாநாயகர்கள
மாணவர் பெயர்: தனிஷாஸ்ரீ சக்திவேலன்
தேசிய வகை தமிழ்ப்பள்ளி நோவா ஸ்கோஷியா தோட்டம் 2, தெலுக் இந்தான்
யூ.பி.எஸ்.ஆர் அடைவுநிலை: 2A,2B,2C,2D
நேர்காணல்:
கேள்வி: வணக்கம் தனிஷா. யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் பெற்றவுடன் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
தனிஷா: வணக்கம் ஐயா. முதலில் கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது. நான் 5 ‘ஏ’க்கள் பெறுவேன் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால், 2’ஏ’ மட்டுமே கிடைத்தது. இருப்பினும் என் பள்ளியில் என் தேர்வு முடிவுக்காக ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் பாராட்டினார்கள்.
கேள்வி: நீங்கள் இவ்வடைவுநிலையைப் பெறுவதற்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருப்பீர்கள் அல்லவா? அவர்களைக் குறிப்பிடவும்.
தனிஷா: நான் என் ஆசிரியர்களுக்கு முக்கியமாக நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக ஆசிரியர் திருமதி சத்யப்பிரியா, திருமதி வி.லெட்சுமி, திருமதி தேவி, குமாரி ஸ்ரீ சுகந்தி, இறுதியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.தமிழ்ச்செல்வன் ஆகியோரை என்னால் மறக்க இயலாது. இவர்களால்தான் என் திறமையை வெளிக்கொணர முடிந்தது. என் பெற்றோர்களையும் நான் இவ்வேளையில் நினைத்துப் பார்க்கிறேன். அவர்களும் எனக்காக நிறைய தியாகம் செய்துள்ளார்கள்.
கேள்வி: யூ.பி.எஸ்.ஆர் தேர்வு உங்களுக்குக் கற்றுக் கொடுத்த படிப்பினை என்ன?
தனிஷா: யூ.பி.எஸ்.ஆர் தேர்வு எனக்குக் கற்றுக் கொடுத்த படிப்பினை ‘முயற்சியின்றி எதனையும் சாதிக்க இயலாது’ என்பதே ஆகும்.
கேள்வி: ‘ஏ’க்கள் பெறுவது மட்டும்தான் வெற்றி என்று நினைக்கிறீர்கள்?
தனிஷா: இல்லை ஐயா. தேர்ச்சிப் பெற்றால்கூட இக்காலக்கட்டத்தில் ஒரு சாதனைத்தான் என்பதைப் புரிந்து கொண்டேன். மற்ற மாணவர்கள் ‘டி’ எடுத்திருந்தால்கூட ‘நல்ல முயற்சித்தான்’ என்று தோளில் தட்டிக் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்வதைக் கைவிடமாட்டார்கள். ‘ஏ’ எடுத்த பிள்ளையையும் ‘டி’ எடுத்த பிள்ளையையும் ஒப்பிட்டு மனத்தைப் புண்படுத்த வேண்டாம் என்று தயவுக்கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி: மிக அருமையாகச் சொன்னீர்கள் தனிஷா. அடுத்து என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?
தனிஷா: நான் அடுத்து ஹூத்தான் மெலிந்தாங் இடைநிலைப்பள்ளியில் பயிலவுள்ளேன் ஐயா. அங்கு நடந்தேறும் முக்கியத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று என் முயற்சிக்குப் பலனைக் கொடுக்கப் பாடுபடுவேன். இத்தகைய சிந்தனைக்கு யூ.பி.எஸ்.ஆர் தேர்வுத்தான் எனக்கு வாய்ப்பு அமைத்துக் கொடுத்தது. மிக்க நன்றி ஐயா.
இங்குப் பாராட்டுவதற்கு வெற்றிப் பெற்றவர்களும் தூற்றுவதற்குத் தோல்வி அடைந்தவர்களும் தேவைப்படுகிறார்கள். இரு தரப்பையும் ஒன்றாக ஒப்பிட்டுப் பேசி ஒரு தரப்பினரைக் கீழிறக்கிப் பார்க்கும் மனநிலையைத் துறப்போம். எல்லோரும் களத்தில் செயலாற்றியவர்கள்தான். ஆனால், அடைவில் வேறுபாடுகள் இருக்கலாம்; அவர்களுக்கு வாய்ப்பு இன்னும் துலங்காமல் இருக்கலாம். பொறுத்திருந்து அனைவருக்கும் வாய்ப்பு அமைந்தால் வெற்றியாளர்கள் தான் என்று கருத்துரைத்துத் தோளில் தட்டிக் கொடுப்போம்.
நேர்காணல்: ஆசிரியர் கே.பாலமுருகன்
பிற நேர்காணல்களை வாசிக்க:
நேர்காணல் 1 ‘கதாநாயகர் #1 : https://balamurugan.org/2018/12/02/upsr-star-1-devaggan-kanapathy-sjkt-tun-aminah-johor-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 2 ‘கதாநாயகர் #2: https://balamurugan.org/2018/12/03/upsr-star-2-prishitha-anandan-sjkt-pasir-gudang-johor-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 3 ‘கதாநாயகர் #3: https://balamurugan.org/2018/12/04/upsr-star-3-neevindrran-narendran-sjkt-mak-mandin-penang-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 4 ‘கதாநாயகர் #4: https://balamurugan.org/2018/12/04/upsr-star-4-navinesh-pannirselvam-sjkt-ldg-pelepah-kota-tinggi-johor-அவர்களும்-கதாநா
நேர்காணல் 5 ‘கதாநாயகர் #5: https://balamurugan.org/2018/12/05/upsr-star-5-yashini-sundaram-sjkt-ldg-changkat-salak-perak-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 7 ‘கதாநாயகர் #7 https://balamurugan.org/2018/12/07/upsr-star-7-nagatharaneswary-marimuthu-sjkt-ldg-harvard-3-kedah-அவர்களும்-கதாநா
கல்வி முயற்சி செய்த அனைவரிடத்திலும் மாற்றங்களை உருவாக்கும். கடைநிலையிலிருந்து யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் தேர்ச்சி நிலைக்கு நகர்ந்து சென்றுள்ள மாணவர்களின் மீதே நான் தொடர்ந்து கவனம் செலுத்துகிறேன்.
மாணவர் பெயர்: நாகதரனேஸ்வரி மாரிமுத்து
ஆர்வார்ட் பிரிவு 3 தமிழ்ப்பள்ளி, கெடா
யூ.பி.எஸ்.ஆர் அடைவுநிலை: 3B,3C,2D
நேர்காணல்:
கேள்வி: வணக்கம் நாகதரனேஸ்வரி. இம்முறை யூ.பி.எஸ்.தேர்வு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நாகதரனேஸ்: நான் ஆறாம் ஆண்டில் வந்துதான் என்னை வளர்த்துக் கொண்டேன். அதுவும் ஆசிரியர்கள் எனக்கு நிறைய வழிகாட்டியதால் என்னை இந்தத் தேர்வு ஆண்டில் முன்னேற்றிக்கொள்ள முடிந்தது. ஆகவே, யூ.பி.எஸ்.ஆர் என்னைப் பொறுத்தவரை என்னை உயர்த்திய தேர்வு.
கேள்வி: இந்தத் தேர்வு முடிவுத்தான் கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?
நாகதரனேஸ்: வருட ஆரம்பத்தில் எனக்கொரு பயம் இருந்தது. ஆனால், அரையாண்டு சோதனையிலெல்லாம் ஒரு நம்பிக்கை கிடைத்தது. இருப்பினும் நான் ‘ஏ’ பெறுவேன் என்று நினைத்திருந்தேன். தேர்வு முடிவைப் பார்த்ததும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
கேள்வி: பிறகு எப்படி அக்கவலையைக் கடந்து சென்றீர்கள்?
நாகதரனேஸ்: நான் முன்பே சொன்னதைப் போல இந்த ஆறாம் ஆண்டு என் கல்வித் தரத்தை உயர்த்தியுள்ளது. இதுவே எனக்கு இன்னும் தூரம் சென்று சாதிக்கத் துணையாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆகவே, என்னால் என் கவலையிலிருந்து என்னை மீட்டுக்கொள்ள முடிந்தது.
கேள்வி: ஆமாம், நீங்கள் தேர்ச்சிப் பெற்றிருப்பதே பாராட்ட வேண்டிய சாதனையாகும். அடுத்து என்ன திட்டம் கொண்டுள்ளீர்கள்?
நாகதரனேஸ்: நான் பி,சி,டி பெற்ற பாடங்களில் படிவம் ஒன்றிற்கான பயிற்சிகளை விடுமுறையில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன் ஐயா.
கேள்வி: இவ்வேளையில் நீங்கள் யாருகெல்லாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளீர்கள்?
நாகதரனேஸ்: முதலில் எனக்கு எப்பொழுதும் உற்சாகமூட்டி தட்டிக் கொடுத்த தலைமை ஆசிரியருக்கும் ஆசிரியர்களுக்கும், என் பெற்றோர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். அடுத்து என் நண்பர்கள் குறிப்பாக பிரிஷா, சுஜித்தா போன்றவர்கள் எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இவ்வேளையில் நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.
கேள்வி: தேர்வில் ‘ஏ’க்கள் பெற முடியாமல் துவண்டு போயிருக்கும் மாணவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நாகதரனேஸ்: மனத்தைத் தளர விடாதீர்கள். முதலில் எனக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனால், இது அனைத்தும் நமக்குப் படிப்பினை என்றும் இதிலிருந்து நம்மை முன்னேற்றிக்கொள்ள வாய்ப்பும் என்பதை உணரவும். நம்மால் முடியாதது என்று ஒன்றும் இல்லை. நன்றி.
அவர்களும் கதாநாயகர்களே. வெற்றிக்கும் தோல்விக்கும் நடுவில் முன்னேறிவிட்டுப் பாராட்டுக் கிடைக்காமல் நிற்கும் நிறைய மாணவர்களை நாம் பார்த்திருப்போம். உண்மையில் தோல்வி என்ற ஒன்றில்லை. வெற்றியை நோக்கிய படிகளில் சிலர் மேலேயும் சிலர் கீழேயும் இருக்கிறார்கள். கீழே உள்ளவர்கள் மேலே வர நினைக்க ஒரு வாய்ப்புத்தான் இவையனைத்தும் என்று புரிந்து கொள்வோம்.
நேர்காணல்: ஆசிரியர் கே.பாலமுருகன்
கடந்த நேர்காணல்களை வாசிக்க:
நேர்காணல் 1 ‘கதாநாயகர் #1 : https://balamurugan.org/2018/12/02/upsr-star-1-devaggan-kanapathy-sjkt-tun-aminah-johor-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 2 ‘கதாநாயகர் #2: https://balamurugan.org/2018/12/03/upsr-star-2-prishitha-anandan-sjkt-pasir-gudang-johor-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 3 ‘கதாநாயகர் #3: https://balamurugan.org/2018/12/04/upsr-star-3-neevindrran-narendran-sjkt-mak-mandin-penang-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 4 ‘கதாநாயகர் #4: https://balamurugan.org/2018/12/04/upsr-star-4-navinesh-pannirselvam-sjkt-ldg-pelepah-kota-tinggi-johor-அவர்களும்-கதாநா
நேர்காணல் 5 ‘கதாநாயகர் #5: https://balamurugan.org/2018/12/05/upsr-star-5-yashini-sundaram-sjkt-ldg-changkat-salak-perak-அவர்களும்-கதாநாய
‘ஆகவே, முயற்சியில்லாமல் இருப்பதுதான் தோல்வி’ – யாஷினி சுந்தரம்
மாணவர் பெயர்: யாஷினி சுந்தரம்
செங்காட் சாலாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி, சுங்கை சிப்புட், பேராக்
யூ.பி.எஸ்.ஆர் அடைவுநிலை: 2B 4C 2D
நேர்காணல்:
கேள்வி: வணக்கம் யாஷினி. இவ்வருடம் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு எப்படி இருந்தது?
யாஷினி: வணக்கம் ஐயா. தேர்வு என்றாலே சிறுவயது முதல் எனக்குச் சவால்தான். இருப்பினும் என்னால் இயன்றவரை தேர்வெழுதினேன்.
கேள்வி: தேர்வு முடிவு உங்களுக்குச் சாதகமாக இருந்ததாக நினைக்கிறீர்களா?
யாஷினி: நான் ‘டி’-யை எதிர்பார்க்கவில்லை ஐயா. ஆகவே, முதலில் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. ஆனால், இப்பொழுதெல்லாம் கல்வி மாற்றம் அடைந்து வருவதால் கேள்விகளும் சிந்திக்க வைத்ததை அறிந்து கொண்டேன். இனி என்னை நான் நிறைய மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இத்தேர்வு எனக்கு உணர்த்தியுள்ளது.
கேள்வி: ஆமாம், யாஷினி. நம் திறமையை உணர இது ஒரு சந்தர்ப்பம். இங்கிருந்து உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள வழிகாட்டுதல் கிடைத்துள்ளது. இருப்பினும், அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி அடைந்துள்ளீர்கள். இந்நிலையை அடைய என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள்?
யாஷினி: நான் என் ஆசிரியர்களின் வழிகாட்டுதலே என்னை இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளது என்றே சொல்வேன். அதோடுமட்டுமல்லாமல் நான் ஆரம்பத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தேன். என்னை உயர்த்தியவர்கள் என் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி பொண்ணுமணி, குமாரி இந்துமதி, திருமதி மாரியம்மாள், திருமதி சர்மிளி, குமாரி மோகனசுந்தரி, திருமதி புனவேஸ்வரி, குமாரி சுமதி, திருமதி பிரியதர்சினி, திருமதி கலைமணி, திருமதி ஷாலினி ஆகிய ஆசிரியர்கள் என்று என்னால் எப்பொழுதும் நினைத்துப் பார்க்க முடியும். இவர்கள் என்னை ஒன்றாம் ஆண்டிலிருந்து செதுக்கியவர்கள்.
கேள்வி: நான் நினைக்கிறேன் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாக 8ஏ பெற முடியாவிட்டாலும் தன் முயற்சியே பலம் எனக் காட்டித் தேர்ச்சியடைந்து உங்களுக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். ‘பி’,’சி’ பெற வைத்ததும் உழைப்பின் அடையாளமே. சுயமாக படிப்பில் எந்த அளவிற்குக் கவனம் செலுத்தினீர்கள்?
யாஷினி: நான் பள்ளியில் நடக்கும் கூடுதல் வகுப்புகளுக்குத் தவறாமல் சென்றுவிடுவேன். மேலும், ஒவ்வொரு நாளும் ஒரு மாதிரி சோதனை தாளை ஒரு பயிற்சியாக மேற்கொண்டேன்.
கேள்வி: இவ்வருட யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் ‘ஏ’க்கள் பெற முடியவில்லை என்று கவலைப்படுவோருக்கு இன்றைய கதாநாயகராக நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
யாஷினி: என் அன்பு நண்பர்களே, தயவு செய்து கவலைப்படாதீர்கள். இது மட்டும் முடிவல்ல. வெற்றிக்கு இதுவே அடித்தளம் என்று நினைத்துக் கொண்டு நீங்கள் பெற்ற அனுபவங்களை மூலதனமாகக் கொண்டு அடுத்து செயல்படவும். செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க இதுவே சரியான கற்றல்.
கேள்வி: அடுத்து என்ன திட்டம் கொண்டுள்ளீர்கள்?
யாஷினி: படிவம் ஒன்றில் ஆங்கிலம், மலாய்மொழி போன்ற பாடங்களில் என் தரத்தை மேலும் உயர்த்திக் கொள்ள பல மூலங்களை நாடவுள்ளேன். இணையம், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், புத்தக வாசிப்பு போன்றவற்றின் மூலம் என்னை நான் வளர்த்துக் கொள்ளவுள்ளேன். நானே சுயமாக இயங்க என்னை நான் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
கேள்வி: இம்முறை தேர்வு உங்களுக்குக் கொடுத்த படிப்பினை என்னவென்று நினைக்கிறீர்கள்?
யாஷினி: உழைத்தால் தான் வெற்றி என்பதைக் கற்றுக் கொடுத்துள்ளது. நான் வெற்றியடையவில்லை என்று நினைக்கவில்லை. முயற்சிக்கு உரிய அடைவுநிலை பெற்றுள்ளேன். ஆகவே, முயற்சியில்லாமல் இருப்பதுதான் தோல்வி என்று விளங்கிக் கொள்ள வாய்ப்பாக அமைந்தது. நன்றி ஐயா.
முயன்றவர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான். முயலாமல் இருப்பது மட்டுமே தோல்வி. ஆகவே, 8பி,8சி,8டி எதாகினும் அது அவர்களின் முயற்சியில் கிடைக்கப்பெற்றது என்றால் தட்டிக் கொடுப்போம்; ஊக்குவிப்போம். அவர்களும் கதாநாயகர்கள்தான். உங்களாலும் பள்ளிப் பெருமை கொள்ளும்.
நேர்காணல்: ஆசிரியர் கே.பாலமுருகன்
நேர்காணல் 1 ‘கதாநாயகர் #1 : https://balamurugan.org/2018/12/02/upsr-star-1-devaggan-kanapathy-sjkt-tun-aminah-johor-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 2 ‘கதாநாயகர் #2: https://balamurugan.org/2018/12/03/upsr-star-2-prishitha-anandan-sjkt-pasir-gudang-johor-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 3 ‘கதாநாயகர் #3: https://balamurugan.org/2018/12/04/upsr-star-3-neevindrran-narendran-sjkt-mak-mandin-penang-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 4 ‘கதாநாயகர் #4: https://balamurugan.org/2018/12/04/upsr-star-4-navinesh-pannirselvam-sjkt-ldg-pelepah-kota-tinggi-johor-அவர்களும்-கதாநா
‘முயற்சி மெய்வருத்தக் கூலித் தரும் நண்பர்களே’
மாணவர் பெயர்: நவினேஷ் பன்னீர்செல்வம்
SJKT LDG PELEPAH KOTA TINGGI,JOHOR
யூ.பி.எஸ்.ஆர் அடைவுநிலை: 7B 1C
நேர்காணல்:
கேள்வி: வணக்கம் நவினேஷ். யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் கிடைத்ததும் உங்கள் மன உணர்வுகள் எப்படி இருந்தன?
நவினேஷ்: வணக்கம் ஐயா. முதலில் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நான் எட்டு ‘ஏ’க்கள் பெற வேண்டும் என்றுத்தான் கனவு கண்டிருந்தேன். ஆனால், தேர்வு முடிவு அதற்குப் பாதகமாக அமைந்துவிட்டது.
கேள்வி: அதை நினைத்து இன்னும் வருத்தம் உண்டா?
நவினேஷ்: இல்லை ஐயா. பிறகு நான் கொடுத்த முயற்சிக்கு ஏற்ற பலன் இது என்று ஏற்றுக் கொண்டேன். 21ஆம் நூற்றாண்டு கல்விமுறையில் ‘பி’ கூட ஒரு வகையில் சாதனை என்று புரிந்து கொண்டேன்.
கேள்வி: இந்நிலையை அடைய நீங்கள் என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள்?
நவினேஷ்: நான் பல முயற்சிகளை அயராமல் மேற்கொண்டேன் ஐயா. என் பெற்றோர்கள் எனக்கு நிறைய நூல்கள் வாங்கிக் கொடுத்தார்கள். நானும் நிறைய வாசித்தேன். மேலும், நிறைய பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்றிருந்தேன். அதோடுமட்டுமல்லாமல் ஆசிரியர் கொடுக்கும் வீட்டுப்பாடங்களைத் தவறாமல் மீள்பார்வை செய்தேன். இதுவே என்னைச் செதுக்கியது எனலாம்.
கேள்வி: முதலில் உங்களுக்கு ஏற்பட்ட கவலையை எப்படிக் கடந்து சென்றீர்கள்?
நவினேஷ்: வீடு வரும்வரை கவலை என்னை விடவில்லை. ஆனால், என் தாய்தந்தையினர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், தங்கை இப்படி எல்லோரும் எனக்கு ஆறுதல் கூறினார்கள். அவர்கள் கொடுத்த நம்பிக்கையில் நான் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பினேன்.
கேள்வி: அடுத்த என்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள்?
நவினேஷ்: மேலும், படிக்க வேண்டும். நிறைய நூல்கள், கதைப்புத்தகங்களை விடாமல் வாசித்தால் என் இப்போதைய நிலை மாறும் என்று நம்புகிறேன். வாசிப்பால் முடியாதது ஒன்றும் இல்லை.
கேள்வி: இவ்வருடம் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் பெற்ற நிறைய மாணவர்கள் 8 ‘ஏ’க்கள் பெற முடியவில்லை என்று வருத்தப்படுகிறார்கள் என்று நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்கள் சார்பாக அவர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
நவினேஷ்: யூ.பி.எஸ்.ஆர் மட்டும் நம் வாழ்க்கையல்ல; இன்னும் பயணம் நீளும். எஸ்.பி.எம் போன்ற சோதனைக்கெல்லாம் நீங்கள் இன்னும் நிறைய உழைப்பைச் செலுத்த வேண்டி வரும். ஆகவே, இதனை ஓர் அனுபவமாகக் கொண்டு முயற்சியை விட்டுவிடாமல் கல்வியைத் தொடரவும். முய்ற்சி மெய்வருத்தக் கூலித் தரும் நண்பர்களே’. நன்றி.
(முயற்சி என்கிற துடுப்பில் நீங்கள் மேற்கொள்ளும் பயணம் ஒருபோதும் தோற்காது. அலைகள் தோன்றும்; தடைகள் உண்டாகும். நாம் கொண்ட நோக்கத்திலிருந்து விலகாமல் துடுப்பை இயக்கினால் மட்டுமே கரை சேர முடியும். )
இன்னொருவரின் முதுகிற்குப் பின்னால் நாம் செய்ய வேண்டியது தட்டிக் கொடுத்தல் மட்டுமே. யூ.பி.எஸ்.ஆர் சோதனையில் தான் அங்கீகரிப்படவில்லை; தான் ஏக்கள் பெறவில்லை என்று கவலையோடு இருக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களையும் கதாநாயகர்கள்தான் என்று வெளிச்சமிட முனையும் களம் இது.
நேர்காணல்: கே.பாலமுருகன்
நேர்காணல் 1 ‘கதாநாயகர் #1 : https://balamurugan.org/2018/12/02/upsr-star-1-devaggan-kanapathy-sjkt-tun-aminah-johor-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 2 ‘கதாநாயகர் #2: https://balamurugan.org/2018/12/03/upsr-star-2-prishitha-anandan-sjkt-pasir-gudang-johor-அவர்களும்-கதாநாய
நேர்காணல் 3 ‘கதாநாயகர் #3: https://balamurugan.org/2018/12/04/upsr-star-3-neevindrran-narendran-sjkt-mak-mandin-penang-அவர்களும்-கதாநாய
‘தேர்வில் மட்டுமல்ல; கலைத்துறையிலும் நாம் யார் என்று நிரூபிக்க முடியும்’ – நிவிந்திரன்
மாணவர் பெயர்: நிவிந்திரன் த/பெ நரேந்திரன்
மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி, பட்டர்வெர்த், பினாங்கு.
யூ.பி.எஸ்.ஆர் அடைவுநிலை: 5B 3 C
நேர்காணல்:
கேள்வி: வணக்கம் நிவிந்திரன். யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவைப் பெற்றவுடன் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
நிவிந்திரன்: வணக்கம் ஐயா. முதலில் எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. இதற்கு முன்பெல்லாம் ‘பி’ எடுப்பதே எனக்குச் சிக்கலாக இருக்கும். ஆனால், இந்தத் தேர்வில் ஆசிரியர்கள் துணையுடன் என்னால் முன்பைவிட சிறந்த தேர்ச்சிப் பெற முடிந்ததால் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளேன்.
கேள்வி: இவ்வாண்டு நீங்கள் எதிர்கொண்ட யூ.பி.எஸ்.ஆர் தேர்விலிருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள்?
நிவிந்திரன்: தேர்வென்றால் சிரமமாகத்தான் இருக்கும்; வெற்றியும் தோல்வியும் இருக்கும் என்று கற்றுக் கொண்டேன். தோல்வி என்றால் நாம் எதிர்பார்த்ததைப் பெற முடியாமல் போவது. இருப்பினும் இக்கடினங்களைச் சமாளித்து தேர்ச்சிப் பெற்றது ஓர் அனுபவமாக எடுத்துக் கொண்டேன்.
கேள்வி: இச்சாதனைக்காக யாருக்கெல்லாம் நன்றி சொல்ல நினைக்கிறீர்கள்?
நிவிந்திரன்: நான் முதலில் என் பெற்றோர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். எனக்காக அவர்கள் நேரத்தைத் தியாகம் செய்து நிறைய உதவி செய்துள்ளார்கள். அதே போல எழுத்தறிவித்தவர்களை மறக்க முடியாது. ஆசிரியர்கள் இல்லையென்றால் இந்தத் தேர்ச்சி எனக்குக் கிட்டியிருக்காது.
கேள்வி: உங்களின் அடுத்த திட்டமாக என்ன செய்யவிருக்கிறீர்கள்?
நிவிந்திரன்: நான் யார் என்றும் என் திறமை என்னவென்றும் அடுத்து படிவம் மூன்றில் எதிர்கொள்ளவிருக்கும் தேர்வில் நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்குரிய முயற்சியில் விரைவில் இறங்குவேன்.
கேள்வி: யூ.பி.எஸ்.ஆர் முடிந்து பி.தி 3 தேர்வில் உங்களை நிரூபிப்பதாகச் சொல்கிறீர்கள். ஆனால், தேர்வு மட்டும்தான் நம்மை யார் என்று அடையாளம் காட்டும் களம் என்று நினைக்கிறீர்களா?
நிவிந்திரன்: இல்லை, ஐயா. நான் ஓட்டப்பந்தயத்திலும் நிறைய சாதித்துள்ளேன். மாவட்டம் மாநில அளவிலும் பங்கேற்று என் திறமையைப் பதித்துள்ளேன். இவ்வாண்டு பள்ளியின் ஓட்டப்பந்தய வீரர் பதக்கமும் கிடைத்தது. அதோடுமட்டுமல்லாமல், காற்பந்து துறையிலும் சிறப்பாக ஈடுபட்ட நிறைய பரிசுகள் பெற்றுள்ளேன். ஆகவே, என்னைப் பொறுத்தவரையில் தேர்வு மட்டுமல்ல இதுபோன்ற விளையாட்டுகளிலும் பிற கலைத்துறைகளிலும் நாம் சாதிக்க முடியும் என்பதே என் கருத்து.
கேள்வி: உங்களுக்குப் பிடித்த பாடம் எது? ஏன் அப்பாடம் உங்களுக்குப் பிடித்திருந்தது?
நிவிந்திரன்: எனக்கு அறிவியல் பாடம் மிகவும் பிடிக்கும் ஐயா. சிறுவயதிலிருந்தே எனது அறியும் ஆர்வத்தினால் அறிவியல் பாடத்தில் தனி ஈடுபாடு இருந்தது. அடுத்தாண்டில் அறிவியல் பாடத்தில் என்னை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
கேள்வி: யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் ‘பி’, ‘சி’, ‘டீ’ எடுத்த மாணவர்கள் பலர் தங்களால் சாதிக்க முடியவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
நிவிந்திரன்: ‘ஏ’ எடுக்க முடியாத மாணவர்கள் அனைவருக்கும் கவலையை விட்டு, முயற்சி என்கிற ஆயுதத்தைக் கையில் எடுங்கள். நிச்சயம் உங்களுக்கு வேறொரு சந்தர்ப்பத்தில் நீங்கள் நினைக்கும் தேர்ச்சிக் கிடைக்கும். முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்.
(கொண்டாடக் களம் இல்லை என ஏங்கித் தவித்த பல குழந்தைகளின் முதுகைத் தட்டிக் கொடுக்க களம் அமைத்தேன். ‘அவர்களும் கதாநாயகர்களே)
நேர்காணல்: ஆசிரியர் கே.பாலமுருகன்
யூ.பி.எஸ்.ஆர் கதாநாயகன் #1- ஐ வாசிக்க:
https://balamurugan.org/2018/12/02/upsr-star-1-devaggan-kanapathy-sjkt-tun-aminah-johor-அவர்களும்-கதாநாய
யூ.பி.எஸ்.ஆர் கதாநாயகன் #2-ஐ வாசிக்க :
https://balamurugan.org/2018/12/03/upsr-star-2-prishitha-anandan-sjkt-pasir-gudang-johor-அவர்களும்-கதாநாய
மாணவர் பெயர்: பிரிஷித்தா ஆனந்தன்
பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்
யூ.பி.எஸ்.ஆர் அடைவுநிலை: 2 A, 6 C
நேர்காணல்:
கேள்வி: வணக்கம் பிரிஷித்தா. தேர்வு முடிவுகள் எடுத்ததும் உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது?
பிரிஷித்தா: வணக்கம் ஐயா. முதலில் எனக்கு மிகுந்த கவலையாக இருந்தது. அதிகமான பாடங்களில் நான் ‘சீ’எடுத்ததால் மனம் கவலையடைந்தது. இருப்பினும், தமிழ்மொழிக் கட்டுரையிலும் மலாய்மொழிக் கட்டுரையிலும் சிறந்த தேர்ச்சியைப் பெற்றது மகிழ்ச்சியாகவும் இருந்தது.
கேள்வி: தேர்வை நோக்கிய இவ்வாண்டில் நீங்கள் என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள்?
பிரிஷித்தா: நான் ஆசிரியர் போதிக்கும்போது முழுக் கவனத்தையும் செலுத்துவேன். அதுவே எனக்கு வழிகாட்டியாக அமைந்திருந்தது. அடுத்து, கட்டுரை நூல்கள், நிறைய கதை புத்தகங்களும் வாசித்தேன். வாசிப்பு எனக்கு ஓரளவிற்குக் கைக்கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் வீட்டிலும் நிறைய பயிற்சிகளை மேற்கொண்டேன்.
கேள்வி: தேர்வு முடிவுகள் குறித்து உங்களுக்கு உண்டான கவலையை எப்படிப் போக்கிக் கொண்டீர்கள்?
பிரிஷித்தா: என்னுடைய ஆசிரியர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் அனைவரும் எனக்குக் கூறிய ஆறுதல்தான் எனக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்தது. இது முடிவல்ல ஆரம்பம் என்று மனத்திற்குள் கூறிக்கொண்டு நான் தேற்றிக் கொண்டேன்.
கேள்வி: இவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வு உங்களுக்கு அளித்தப் படிப்பினை என்ன?
பிரிஷித்தா: நான் 8ஏ கிடைக்க வேண்டும் என்றுத்தான் நினைத்திருந்தேன். ஆனால், 2 ஏக்கள் மட்டுமே பெறமுடிந்தது. இதன் மூலம் நான் கொடுத்த உழைப்பை இன்னும் அதிகமாக்கிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதிகாலையில் எழுந்து படிப்பது, நூல் வாசிப்பை இன்னும் அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை அடுத்த ஆண்டு நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்று புரிந்து கொண்டேன்.
கேள்வி: ‘ஏ’க்கள் பெற முடியாமல்போன மாணவர்களுக்கு என்ன சொல்ல விளைகிறீர்கள்?
பிரிஷித்தா: அனைத்து மலேசியத் தமிழ்ப்பள்ளி ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கும், இது முடிவல்ல; ஆரம்பம்தான் என்பதை நம்புங்கள். இன்னும் நிறைய படிகள் உள்ளன. அதில் முதல் படியில் நாம் இருக்கிறோம். மனம் தளராமல் அடுத்த அடியை எடுத்து வையுங்கள். ஏதாவது ஒரு படியில் நிச்சயம் சாதிப்பீர்கள். மிக்க நன்றி ஐயா.
(அவர்களும் கதாநாயகர்களே #2)
களத்தில் யாரும் தோல்வியுற்றவர்கள் அல்லர்; வெற்றி என்பது கோப்பையைத் தூக்குபவன் கையில் மட்டும் அல்ல; எதிர்த்துப் போட்டியிட்டவன் கொடுத்த கடுமையான சவாலும்கூட காரணமாக அமையலாம். ஆகவே, இங்கு யாரும் தோற்கவில்லை. வெற்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. உம் முயற்சியில் நீ பலனைக் கண்டாய். எழுந்து வாருங்கள், நம் பயணம் இன்னும் முடியவில்லை. உங்கள் வீட்டிலும் இதுபோன்ற தன் நன்முயற்சிகளால் நல்ல தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் உள்ளார்களா? உடனே முகநூல் வாயிலாகத் தொடர்பு கொள்ளவும். அவர்களைக் கதாநாயகர்களாக மாற்ற நான் தயார். Bahasa Tamil Upsr Balamurugan, Facebook.
நேர்காணல்: ஆசிரியர் கே.பாலமுருகன்