ஜகாட் – திரைப்படப் புத்தகப் போட்டி இரண்டாம் சுற்றின் வெற்றியாளர்: ஜெ. அரவின் குமார்
இரண்டாம் சுற்றின் வெற்றியாளர் அரவின் குமாரின் கேள்விக்கான பதில்:
கேள்வி: ஜகாட் திரைப்படத்தில் ஒருவன் குற்றவாளியாக மாறுவதற்கு எந்தெந்த சூழல்கள் காரணமாக அமைகின்றது என முன்வைக்கப்படுகிறது?
பதில்: குற்றங்களின் பின்னணி ஆராயப்படுகின்றப்போது, குற்றவாளியின் பின்னணியும் ஆராயப்பட வேண்டும் என்பது ஜகாட் திரைப்படம் காட்டும் சிந்தனை. குற்றம் புரிந்தவனைச் சார்ந்திருக்கும் குடும்ப நிலை, சமுதாய நிலை ஆகியவை குற்றங்களில் ஈடுபடுவதற்கான முதன்மை காரணிகளாகத் திகழ்கின்றன என்பதை ஜகாட் படம் காட்டுகிறது. வறுமையினிருள் மெல்ல ஒளிரும் கொஞ்சம் நஞ்ச கல்வி, நம்பிக்கைகளின் குறையொளியை அணைத்துவிட்டப்பிறகு குற்றம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறுகிறது.
(குற்றவாளிகள் உருவாவதற்குக் கல்வியின் வேறுநிலை முகங்களும் ஒரு மூலக்கூறாக இருப்பதை சஞ்சய் அப்படத்தில் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது)
அரவின் குமார் சுங்கைப்பட்டாணியிலுள்ள அப்துல் அலிம் ஆசிரியர் வளாகத்தின் பயிற்சி ஆசிரியர். குவாந்தானில் பிறந்தவர். சினிமா என்ற கலை காட்சி ஊடகத்தைச் சார்ந்தது. எண்ணத்தையும் சிந்தனையயும் எளிதாக காண்போர் மனதில் ஏற்றக்கூடியது…இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் தொழிற்நுட்ப விரிவும் சிந்தனை விரிவும் சினிமாவை இன்னும் முன்னுக்கு கொண்டு செல்கிறது என அழுத்தமாக நம்புகிறார். ஜகாட் திரைப்படம் மலேசியாவின் மற்ற படங்களைவிட வழக்கமாக இல்லாமல் குறைவான சமரசங்களுடன் வெளிவந்ததாலேயே அப்படம் என்னைக் கவர்ந்ததாகக் கூறுகிறார். நல்ல தீவிரமான சிந்தனைமிக்க இளைஞரான அவர் தொடர்ந்து சினிமா, இலக்கியம் என மிளிர்வார் என நம்புகிறேன். வாழ்த்துகள்.
- கே.பாலமுருகன்