UPSR STAR #11: Abhyramy Logadhasan (SJKT KINRARA PUCHONG) அவர்களும் கதாநாயகர்களே 2018

‘இந்த உலகம் எவ்வளவு அழகு என்பதை ஓவியத்திலேயே அறிந்தேன்’ – அபிராமி

 

 

மாணவர் பெயர்: அபிராமி தர்ஷினி லோகதாசன் 

தேசிய வகை கிண்றாரா பூச்சோங் தமிழ்ப்பள்ளி

யூ.பி.எஸ்.ஆர் அடைவுநிலை: 2A, 3B, 3C

 

 

நேர்காணல்:

 

கேள்வி: வணக்கம் அபிராமி. இந்த யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் உங்களுக்கு எவ்வாறு மன உணர்வுகளை உண்டாக்கியது?

அபிராமி: வணக்கம் ஐயா. என் முயற்சி வீண் போகவில்லை என்பதை இத்தேர்வு முடிவு எனக்கு உணர்த்தியுள்ளதால் நான் மகிழ்ச்சியாகவே உணர்கிறேன்.

 

கேள்வி: நீங்கள் எதிர்பார்த்த தேர்ச்சியா இது?

அபிராமி: நான் இன்னும் அதிகமான ‘ஏ’க்களை எதிர்பார்த்தேன் ஐயா. குறிப்பாக ஆங்கிலம் கட்டுரையில் நான் எப்பொழுதும் சிறப்பான தேர்ச்சித்தான் பெறுவேன். ஆனால், அப்பாடத்தில் எனக்கு ‘பி’ கிடைத்தது கொஞ்சம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் என்னால் அக்கவலையிலிருந்து மீள முடிந்தது. இன்னும் முயற்சிக்க வேண்டும் என்று உணர்ந்துள்ளேன்.

 

கேள்வி: இத்தேர்ச்சியைப் பெற நீங்கள் என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள்?

அபிராமி: நான் ஆரம்பத்தில் மிகவும் பலவீனமாக இருந்த பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தினேன். அதனால்தான் என்னால் அப்பாடங்களில் சிறந்த தேர்ச்சிப் பெற முடிந்தது. மேலும், பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்றேன். கண்ணும் கருத்துமாய் படித்தேன் என்றே சொல்லலாம்.

 

கேள்வி: உங்களுக்குப் பிடித்த பாடம் எதுவாக இருந்தது? ஏன்?

அபிராமி: எனக்கு அறிவியல் பாடம் என்றால் மிகவும் பிடிக்கும் ஐயா. இந்த உலகை அறிந்து கொள்ள எனக்கு உதவிய பாடம் அதுதான்.

கேள்வி: அறிவியல் தவிர்த்து வேறு துறையில் உங்களுக்கு ஆர்வம் உள்ளதா?

அபிராமி: ஆமாம், ஐயா. எனக்கு ஓவியம், வண்ணம் தீட்டுதல் என்றால் மிகவும் பிடிக்கும். சிறுவயதிலிருந்தே ஓவியத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறேன். எதிர்காலத்தில் ஓவியத் துறையில் சாதிக்க வேண்டும் என்றும் எண்ணம் கொண்டுள்ளேன். இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை ஓவியத்தின் வழியாகவே உணர்ந்தேன்.

 

கேள்வி: அருமை அபிராமி. கலை குறித்தும் உங்கள் ஆர்வம் மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. இவ்வேளையில் நீங்கள் யாருக்கெல்லாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளீர்கள்?

அபிராமி: நான் எனக்குக் கற்றுக் கொடுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். மேலும், என் பெற்றோருக்கும் என் முழுமையான அன்பு உரித்தாக வேண்டும். இவர்கள் யாவரும் இல்லையெனில் நான் இத்தேர்ச்சியை அடைந்திருக்க இயலாது. என்னை நேர்காணல் செய்து வெளியீடும் உங்களுக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது ஐயா. மிக்க நன்றி.

 

வெற்றியோ தோல்வியோ அல்லது முன்னேற்றமோ உங்களுக்குத் தட்டிக் கொடுத்தவர்களை மறவாதீர்கள். உங்களின் சிறு முன்னேற்றத்தில் அவர்களின் பங்கை என்றுமே நினைவுக்கூர்ந்துவிடுங்கள். செய்நன்றி மறவாமல் வாழும் வாழ்க்கை அற்புதமானது. மேலும், உங்களுக்குக் கைக்கொடுக்கப் பல கைகள் தோன்றும்.

நேர்காணல்: ஆசிரியர் கே.பாலமுருகன்

 

பிற நேர்காணல்களை வாசிக்க:

நேர்காணல் 1 ‘கதாநாயகர் #1 : https://balamurugan.org/2018/12/02/upsr-star-1-devaggan-kanapathy-sjkt-tun-aminah-johor-அவர்களும்-கதாநாய

நேர்காணல் 2 ‘கதாநாயகர் #2: https://balamurugan.org/2018/12/03/upsr-star-2-prishitha-anandan-sjkt-pasir-gudang-johor-அவர்களும்-கதாநாய

நேர்காணல் 3 ‘கதாநாயகர் #3: https://balamurugan.org/2018/12/04/upsr-star-3-neevindrran-narendran-sjkt-mak-mandin-penang-அவர்களும்-கதாநாய

நேர்காணல் 4 ‘கதாநாயகர் #4: https://balamurugan.org/2018/12/04/upsr-star-4-navinesh-pannirselvam-sjkt-ldg-pelepah-kota-tinggi-johor-அவர்களும்-கதாநா

நேர்காணல் 5 ‘கதாநாயகர் #5: https://balamurugan.org/2018/12/05/upsr-star-5-yashini-sundaram-sjkt-ldg-changkat-salak-perak-அவர்களும்-கதாநாய

நேர்காணல் 7 ‘கதாநாயகர் #7  https://balamurugan.org/2018/12/07/upsr-star-7-nagatharaneswary-marimuthu-sjkt-ldg-harvard-3-kedah-அவர்களும்-கதாநா

நேர்காணல் 8 ‘கதாநாயகர் #8 https://balamurugan.org/2018/12/08/upsr-star-8-அவர்களும்-கதாநாயகர்கள

நேர்காணல் 9 ‘கதாநாயகர் #9 https://balamurugan.org/2018/12/09/upsr-star-9-arivalagan-ravichanran-sjkt-mahajothi-அவர்களும்-கதாநாயக

நேர்காணல் 10 ‘கதாநாயகர் #10  https://balamurugan.org/2018/12/11/upsr-star-10-kallieswaran-sargunan-sjkt-sg-tok-pawang-kedah-அவர்களும்-கதாநாய

About The Author