தமிழறி – பயிற்றி அறிமுகம் (அளவு 1-2)

தயாரிப்பு: ஆசிரியர் கே.பாலமுருகன்

லேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அடிப்படைத் தமிழ் வாசிப்புத் திறனைப் புதிய கோணத்தில் மேம்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடனே ‘தமிழறி’ என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன். கடைநிலை மாணவர்களைக் குறைந்தது தமிழறிவு பெற்றவர்களாகவும் தமிழ் அடிப்படை எழுத்துகளை அறிந்து வாசிக்க முடிந்தவராகவும் உருவாக்க வேண்டும் என்பதே இப்பயிற்றியின் எளிய நோக்கமாகும்.

  தமிழறி தொடர்ந்து 12 அளவுகள் கொண்ட பயிற்றியாகும். முதல் கட்டமாக இவ்வாரம் அளவு 1-அளவு 2 அறிமுகம் காண்கிறது. அடுத்தடுத்த அளவுகள் வாரம்தோறும் எனது முகநூல் தளத்திலும் பாரதி கற்பனைத் தளத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் தளத்திலும் வெளியிடப்படும். (facebook.com/bahasatamil.upsr)

  இப்பயிற்றியின் சிறப்பம்சங்கள் யாவை என்கிற கேள்வி எல்லோருக்கும் இருக்கலாம். முதலாவதாக அதிகப்படியான எழுத்துகள் என்றில்லாமல் தமிழ் நெடுங்கணக்கில் அடிப்படைத் தமிழ் எழுத்துகளை அளவு என்கிற பாகப் பிரிவுகளாக மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும்படி இப்பயிற்றி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் அறிந்து, வாசித்து, எழுதும் படிநிலைகளை எளிமையிலிருந்து எளிமைக்கே நகரும் பாணியில் தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, மாணவர்கள் இப்பயிற்றியின் வாயிலாக தன்னைத் தானே சுயமாக மதிப்பீடு செய்து கொள்ளும் வடிவத்திலேயே இப்பயிற்றி எழுதப்பட்டிருக்கிறது.

  நாடெங்கிலும் இருக்கும் ஆசிரியர்கள், பள்ளித் தமிழ்மொழிப் பாடக்குழு இப்பயிற்றியைத் தங்களின் மாணவர்களின் நிலைக்கேற்ப பயன்படுத்தியும் செம்மைப்படுத்தியும் கொள்ளலாம். இது முற்றிலுமாக தமிழ்க்கல்வியை மேம்படுத்த வேண்டும்; தமிழில் அடிப்படை எழுத்துகளை அறிந்த மாணவர்களை உருவாக்கும் குறிக்கோளுடன் இலவசமாகப் பகிரப்படும் பயிற்றி. ஆக, இப்பயிற்றியின் முழு உரிமையும் இதனைத் தயாரித்த எனக்கே (கே.பாலமுருகன்) உரியதாகும், இருப்பினும், இதனை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர் நலனுக்காகப் பயன்படுத்தலாம். எக்காரணம் கொண்டும் இப்பயிற்றியைத் திரித்து, பெயர் மாற்றி அல்லது விற்பனை செய்தலோ கூடாது என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். (copyright act © Barathi Creative Channel 2020)

கல்வி இலவசமாக்கப்பட வேண்டும். நன்றி

To download Module via PDF format click here:

http://www.mediafire.com/file/rgxiehrk50q1u65/Reading_module_2020_k.balamurugan.pdf/file

கே.பாலமுருகன்

ஆசிரியர்/எழுத்தாளர்

பாரதி கற்பனைத் தளத்தின் தோற்றுனர்

SCHOOL CATEGORY CERTIFICATES (GOLD AWARD): WEBINAR OF BARATHI CREATIVE CHANNEL 2020

Click on your school Link and download the E-Certificate.

STEPS: CLICK THE LINK – CLICK DOWNLOAD – DOWNLOAD

 

TOP GOLDEN AWARD

SJKT MASAI, JOHOR

http://www.mediafire.com/view/6nf79bgpw05a9if/MASAI.jpg/file

 

GOLD AWARD OF SCHOOL CATEGORY

1.SJKT KANGAR PULAI, JOHOR: http://www.mediafire.com/view/pd4nu4j5w49po1k/KANGAR+PULAI.jpg/file

2. SJKT LADANG RINI, JOHOR      http://www.mediafire.com/view/3k8w7hq7dl9l5cf/LDG+RINI.jpg/file

3. SJKT CHERAS, KL : http://www.mediafire.com/view/d8mei3w3n2oqtl1/CHERAS.jpg/file

4. SJKT ST.THERESA’S CONVENT, TAIPING : http://www.mediafire.com/view/oenz8ia4x0lhud1/CONVENT.jpg/file

5. SJKT DURIAN TUNGGAL, MELAKA : http://www.mediafire.com/view/75ojegp0vhf3hi9/DURIAN+TUNGGAL.jpg/file

6. SJKT LADANG ELAIEIS, KLUANG : http://www.mediafire.com/view/e9w8chj2gj7qj02/ELAIEIS.jpg/file

7. SJKT HARVARD BHG 3, KEDAH : http://www.mediafire.com/view/imjd8azgffe6sqt/HARVARD+3.jpg/file

8. SJKT JALAN YAHYA AWAL, JOHOR  : http://www.mediafire.com/view/hguhs8egi3ctd7x/JLN+YAHYA+AWAL.jpg/file

9. SJKT KLEBANG, CHEMOR, PERAK : http://www.mediafire.com/view/dmbjinr9djjj1v2/KLEBANG.jpg/file

10. SJKT KUALA MUDA(HOME), KEDAH : http://www.mediafire.com/view/zdk6fnkeskoo83r/KUALA+MUDA.jpg/file

11. SJKT LDG LANADRON, MUAR : http://www.mediafire.com/view/9q3rinovws864dn/LANADRON.jpg/file

12. SJKT LDG LINSUM, SEREMBAN  http://www.mediafire.com/view/y214z0v4nla4xi5/LINSUM.jpg/file

13. SJKT TUN SAMBANTHAN, PAJAM : http://www.mediafire.com/view/glw6jv4r1ibkva7/PAJAM.jpg/file

14. SJKT LADANG REGENT, N.SEMBILAN : http://www.mediafire.com/view/y8rcqit3yekk1n1/REGENT.jpg/file

15. SJKT SARASWAHTY, KEDAH: http://www.mediafire.com/view/30yvtff7u6q36en/SARASWATHY.jpg/file

16. SJKT FES SERDANG,SELANGOR:  http://www.mediafire.com/view/vnrktiv7rgsl8ar/SERDANG.jpg/file

17. SJKT SG CHOH, SELANGOR: http://www.mediafire.com/view/vnrktiv7rgsl8ar/SERDANG.jpg/file

18. SJKT SG TOK PAWANG, KEDAH:  http://www.mediafire.com/view/w5pyim517z0b7up/SG+TOK+PAWNG.jpg/file

19. SJKT LADANG ULU TIRAM, JOHOR:  http://www.mediafire.com/view/rriogwk4dhvp4vh/ULU+TIRAM.jpg/file

Only the Incharge school need to download. Thanks

தமிழ் விடிவெள்ளி பயிற்றி பாகம் 2 – ஆண்டு 1 – ஆண்டு 3 வரை

கீழ்க்கண்ட லின்கைக் கிளிக் செய்து பயிற்றியைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆசிரியர்: கே.பாலமுருகன் 
To save in pdf:

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் காணொளிகள்- கே.பாலமுருகன்

 

கல்வியில் கற்பனைவளமிக்க சிந்தனைகளே மாணாக்கரை உயர்த்தும் மேலும் தனித்துவமிக்கவர்களாக மேம்படச் செய்யும். அவ்வகையில் கற்பனைவளமிக்க படைப்புகளை எப்படி மாணவர்கள் படைப்பது என்பதாக இதுவரை நான் தயாரித்த காணொளிகள் பின்வருமாறு. அவற்றை தமிழ்ப்பள்ளி மாணவர்களோடு பகிர்ந்து பயன்பெற வழிவகுப்போம்.
Please subscribe My Youtube Channel for more videos.

திறன்மிகு ஆசிரியர்/எழுத்தாளர்
கே.பாலமுருகன்
https://balamurugan.org
Facebook: Bahasa Tamil Upsr Balamurugan

Short Story teaching session Part 1, Part 2 and part 3
சிறுவர் சிறுகதை கற்பித்தல் காணொளிகள் பாகம் 1-3 வரை

https://youtu.be/lW7_JEH9Ick
https://youtu.be/2EorkuW9YGo
https://youtu.be/166lPlcX1WY

Short Story teaching and learning for weak students
கடைநிலை மாணவர்களுக்குச் சிறுவர் சிறுகதை கற்பிக்கும் வழிமுறை பாகம் 1 – 2 வரை

https://youtu.be/GanGkPtGooA
https://youtu.be/BXBmh64RMPI

Sentence making learning
வாக்கியம் அமைத்தல் பயிலும் முறை

https://youtu.be/z8gN41h9q1E

Writing Essay’s method
கட்டுரை பிரிவுக்கான கற்றல் வழிமுறை

https://youtu.be/J8mF55JmcMA

How to teach writing story in class? Watch the video above in malay, explaination by writer K.Balamurugan

 

தமிழ் விடிவெள்ளி பயிற்றி (ஆண்டு 1 – ஆண்டு 3 வரை)

 

📕ஓதுவதொழியேல்📘

வீட்டிலிருந்து கொண்டு ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் வந்தபோதே பள்ளிக்குப் போக முடியாமல் வீட்டில் இருக்கும் மாணவர்களைப் பற்றிய சிந்தனைத்தான் முதலில் எழுந்தது. அச்சிந்தனையைச் செயல்வடிவமாக்கும் பொருட்டு நடமாட்டக் கட்டுபாட்டு உத்தரவு காலக்கட்டத்தில் வெளியிடப்படும் இரண்டாவது பயிற்றி இது. ஆண்டு 1 முதல் ஆண்டு 3 வரையிலான மாணவர்கள் தமிழ்மொழியில் பயன்பெற வேண்டும் பொருட்டு உருவாக்கப்பட்டுப் பகிரப்படுகிறது.

என்னுடன் இணைந்து இப்பயிற்றியை உருவாக்கிய ஆசிரியை திருமதி ப.பிரேமா அவர்களுக்கும் நன்றி.

🔊Share To All.🔊

இப்பயிற்றி முற்றிலும் இலவசமாகவே பகிரப்படுகிறது. அனைத்துப் பயிற்சிகளும் புதிதாகும். பகிர்ந்து அனைவரும் நன்மை பெறச் செய்வோம்.
நன்றி

ஆசிரியர்/எழுத்தாளர்
கே.பாலமுருகன்

To download the PDF file click below link.

http://www.mediafire.com/file/eto3ubsd86j4l65/%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AF%258D_%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AE%25BF_%25E0%25AE%25AA%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25BF_%25E0%25AE%2586%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581_1_-3.pdf/file

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான விடுமுறைக் காலத் தமிழ்மொழிப் பயிற்சித் தொகுப்பு 2020

TO DOWNLOAD PDF OF WORKSHEET CLICK BELOW LINK.

http://www.mediafire.com/file/qn3ud6qxb7ka3mj/Tamil_Module_2020_upsr.pdf/file

 

Modul UPSR Bahasa Tamil ini khasnya ditulis untuk murid-murid di rumah akibat Virus Korona. Modul ini dihasilkan oleh Guru Cemerlang Bahasa Tamil, Penulis En.K.Balamurugan secara percuma kepada semua anak murid Sekolah Tamil Malaysia.

அனைத்து மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வணக்கம்.
நாடு கொரோனா கிருமியின் பாதிப்பால் தவித்துக் கொண்டிருக்கையில் மாணவர்களுக்கான கல்வி விடுப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கும் இப்பயிற்சித் தொகுப்பைக் கொண்டு மாணவர்கள் பயன்பெற வேண்டுகிறேன். ஏதேனும் பிழைகள்/கேள்விகள் இருப்பின் தயவுக்கூர்ந்து என்னிடம் தனிப்பட்ட முறையிலும் விளக்கம் கேட்டுத் தெளிவுப் பெறலாம்.

இப்பயிற்றி முற்றிலும் இலவசமாகப் பகிரப்படுகிறது. செய் நன்மை வையகத்துக்கே.

Those need in pdf format can email me. tq

நன்றி,
அன்புடன்

ஆசிரியர், எழுத்தாளர்
கே.பாலமுருகன்
bkbala82@gmail.com
balamurugan.org

TO DOWNLOAD PDF OF WORKSHEET CLICK BELOW LINK.

http://www.mediafire.com/file/qn3ud6qxb7ka3mj/Tamil_Module_2020_upsr.pdf/file

Coronavirus – குடும்பத்தையும் சமூகத்தையும் நாட்டையும் பாதுகாப்போம்

Coronavirus தாக்கம்

 

இன்று உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும், உலகநாடுகளின் எல்லைகளைப் பரப்பரப்பாக்கிக் கொண்டிருக்கும் 100,000 பேருக்கும் மேலாக பரவிவிட்ட இந்தக் கிருமியின் தோற்றம் சீனாவிலுள்ள வூகான் நகரம் என்பதை எல்லோரும் கடந்த டிசம்பர் மாதம் அறிந்தோம். ஆனால், இன்று பல தேசங்களைத் தாண்டி எல்லைகளைக் கடந்து  பல உயிர்களைக் கொன்று  இதே கிருமி நம் நகருக்குள் நுழைந்துவிட்டது.

ஆனால், இன்றளவும் இதனைக் கருத்தில் கொள்ளாமல் பாதுகாப்பற்ற நிலையில் நம்மவர்கள் நகரங்களில் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்களுக்குப் பாதுகாப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்பதை நோக்கி இப்பதிவு சுருக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பற்றி உலகச் செய்திகளைத் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட சுட்டியைப் பயன்படுத்தலாம்.

who.int

 

 

 யாரை இந்தக் கிருமி எளிதாகத் தாக்கும்?

  1. வயதானவர்கள்
  2. குழந்தைகள்

இவ்விரு பாலருக்கும் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துதான் இருக்கும் என்பதால் சட்டென பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

  1. நீரிழிவு நோய் உள்ளவர்கள்
  2. சுவாசம்/இருதயம் தொடர்பான மருத்துவ சிக்கல் உள்ளவர்கள்

இந்த நான்கு வகையினரும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய காலக்கட்டம் இது. குறிப்பாக குழந்தைகள் எளியவர்கள்; அவர்களை நாம் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஆபத்தான நிலையில் மனிதர்களை நோக்கி படையெடுத்துப் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவிடமிருந்து தற்காத்துக் கொள்ள மிக முக்கியமாக நாம் செய்ய வேண்டியவைகள்:

  1. அதிகமானோர் கூடும் இடங்களை முடிந்தவரை தவிர்க்கவும். (குறிப்பாக குழந்தைகள்-வயதானவர்களை அழைத்துச் செல்ல வேண்டாம். அதிகமானோர் என்பது ‘Mass Gathering’ என்பதைக் கருத்தில் கொள்ளவும். எடுத்துக்காட்டாக: Water Theme Parks, Shopping Malls, Teaters, Night Market, கலை நிகழ்ச்சிகள், போட்டி விளையாட்டுகள் போன்றவை ஆகும்.

 

  1. Sanitizer-ஐ உடன் வைத்துக் கொண்டு பொது இடங்களுக்குச் சென்று வந்தால் வீட்டில் நுழையும் முன் அல்லது நுழைந்தவுடன் உடனடியாகக் கைகளைக் கழுவிவிடவும். தாமதிக்க வேண்டாம். எடுத்துக்காட்டாக நீங்கள் வங்கிக்குச் சென்று வந்திருப்பீர்கள். வங்கியின் கதவு பிடியில் கையை வைத்திருப்பீர்கள். அதே கதவில் அன்று பலர் கைகளை வைத்திருப்பார்கள். ஆக, இதன் வழியாகவும் கிருமி தொற்றுவதற்கு வாய்ப்புண்டு. ஆகவே, Sanitizer-ஐஉபயோகிப்பது நிவாரணத்திற்கு வழிவகுக்கும்.

 

  1. காய்ச்சல், சளி இத்துடன் மூச்சுத் திணறல் இருந்தால் சற்றும் தாமதிக்காமல் அருகாமையிலுள்ள மருத்துவமனை அல்லது கிளினிக்கிற்குச் சென்று விடவும்.

 

  1. வெளிநாட்டவர்கள் வேலை செய்யும் அல்லது பயணிக்கும் பொதுபோக்குவரத்துகளை/இடங்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

 

  1. வீட்டின் முன் மஞ்சள் கலந்த நீரை எப்பொழுதும் வைத்திருக்கவும். வெளியில் சென்றுவிட்டு உள்ளே வருபவர்கள் கட்டாயமாக அந்நீரில் கால்கள் கைகளைக் கழுவிவிட்டு வருவதும் மிக முக்கியமானதாகும்.

 

  1. இக்காலக்கட்டத்தில் முடிந்தவரை அசைவ உணவைக் குறைப்பதும் மார்க்கேட்டில் நீங்கள் வாங்கும் இறைச்சிகளைக் குறைப்பதும் நல்லது. சைவ உணவை அதிகப்படுத்தவும்; காய்க்கறிகளை நன்றாகக் கழுவிவிட்டு வேக வைத்துச் சாப்பிடும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கவும்.

 

  1. வெளிநாட்டுப் பயணத்தை ஒத்தி வைப்பது நலம். நீங்கள் செல்லும் சுற்றுலாத்தளம் பாதுகாப்பானதாக இருப்பினும் அது சுற்றுலாத்தளம் என்பதால் வெளிநாட்டவர்கள் அங்கு வருவதை நாம் தவிர்த்தல் இயலாது. இதனால், கிருமி நம்மை எந்நேரத்திலும் தாக்கும். நாமே பணம் கொடுத்து வெளிநாடு சென்று விணையைத் தேடிக்கொள்ளலாமா? இயன்றால் தவிர்க்கவும்.

 

  1. அடுத்து முக்கியமானது வெளியில் யாரைப் பார்த்தாலும் கைக்குலுக்குவதைத் தவிர்த்து விடவும். கிருமிகள் கைகளின் வழியாகவே மிக விரைவாகப் பரவுகின்றது. நம் கைகளில் நூற்றுக்கணக்கான கிருமிகள் எப்பொழுதும் இருக்கும் என்பதால் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. கைக்கூப்பி வணக்கம் சொல்வதை இப்போதைக்குப் பழக்கமாக்கிக் கொள்ளவும்.

 

  1. குழந்தைகளை உணவகங்களுக்குக் கொண்டு செல்வதையும் வெளியுணவையும் இக்காலக்கட்டத்தில் தவிர்ப்பது நன்று.

 

  1. பள்ளிக்கூடம் அல்லது பள்ளிக்கூடத் தொடர்பான நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் மாணவர்களுக்குக் கட்டாயமாக mask அணிவிக்கவும். இதைப் பெற்றோர்கள் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். நம்மைவிட சிறியவர்களுக்கு மிக எளிதில் நோய் தொற்றிக் கொள்ளும் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

 

  1. ஒருவேளை ஆள் கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் சென்றால் எல்லோரிடமிருந்து ஒரு மீட்டர் தள்ளியே நடக்கவும்; நிற்கவும்; பேசவும்.

 

 

 

இந்நோயின் அறிகுறி?

முதலில் சுவாச பிரச்சனை ஏற்படுபவர்கள் மருத்துவமனை சென்றுவிட வேண்டும். இக்கிருமி முதலில் தாக்குவது நுரையீரலை என்பதால் இக்கிருமி கண்டவர்கள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவார்கள். சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி என்பதெல்லாம் அடுத்த நிலைகள்.

 

எப்படி அறிவது?

 

மூச்சை இழுத்து 10 விநாடிகள் அடக்கி மீண்டும் விடும்போது எந்தத் தடுமாற்றமும் மூச்சிரைப்பும் இருமலும் இல்லையென்றால் உங்கள் நுரையீரலுக்கு எவ்வித சிக்கலும் இல்லை என்பதை இதன்வழியும் அறியலாம். இதுவொரு எளிமையான எடுத்துக்காட்டுத்தான். இருப்பினும் மருத்துவரைச் சென்று பரிசோதித்து மட்டுமே அதிகாரப்பூர்வத் தகவலைத் தெரிந்து கொள்ளல் வேண்டும்.

அதிக வெப்பத்தில் கிருமி இறந்துவிடுவதாகச் சொல்லப்படுகிறது. மேலும், கொரொனா கிருமி தாக்கம் ஏற்பட்டால் தொண்டையில் சிலநாள்கள் தங்கியிருக்கும் என்கிறார்கள். ஆகவே, மஞ்சளில் வாய்க் கொப்பளிப்பதையும் வழக்கமாக்குங்கள்.

 

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இத்தனை பாதுகாப்பு அம்சங்களையும் தாண்டி நம்மைத் தொட்டு நம்மை அணுகி நமக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் குறிப்பாக அனைத்து தாதியினருக்கும் நெஞ்சம் நெகிழ்ந்த அன்பு.

 

நாமும் கடைப்பிடிப்போம்; பிறருக்கும் உரைப்போம்.

நன்றி

கே.பாலமுருகன்

Sumber:

KKM

WHO

தேசிய அளவிலான சிறுவர் சிறுகதை எழுதும் போட்டியில் இறுதி சுற்றுக்குத் தேர்வான மாணவர்கள் 2019/2020

மலேசியத் தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகம்

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான

‘சிறுவர் சிறுகதை எழுதும் போட்டி – 2 (2019-2020)

மாணவர் பெயர்

பள்ளிப் பெயர்

ஹேமலக்‌ஷனா சன்முகம் வால்டோர் தமிழ்ப்பள்ளி, பினாங்கு
லிங்கேஷ்வரன் ஜீவன்ஞோதி மாசாய் குழுவகத் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்
சாருமதி திருச்செல்வன் பாரதி தமிழ்ப்பள்ளி, ஊத்தான் மெலிந்தாங், பேரா
பு.தாணியவதனி மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி, பினாங்கு
இலக்கியா பூபாலன் புக்கிட் பெருந்தூங் தமிழ்ப்பள்ளி, ரவாங்
கவினா ஸ்ரீ சங்கர் செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி, தைப்பிங்
கிருத்திகன் பார்த்திபன் குவாலாத் தெர்லாக் தமிழ்ப்பள்ளி, கேமரன் மலை
பிரவின்ராஜ் லோகநாதன் செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி, தைப்பிங்
காவியா சந்திரசேகர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, சுபாங் ஜெயா
ரோஷன்ராஜ் ஸ்ரீ ராஜ் ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி, பினாங்கு
சர்வினி தேவன் சுங்கை சோ தோட்டத் தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர்
ச.துளசி தேவி பூச்சோங் தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர்
தமிழ்ச்செல்வன் கனகநாதன் செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி, தைப்பிங்
தயாகுமாரன் விக்னேஷ்வரன் செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி, தைப்பிங்
ச.யோஷ்வினா சிகாம்புட் தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர்
அருமதி செல்வராஜ் டுரியான் துங்கால் தமிழ்ப்பள்ளி, மலாக்கா
சச்சின் புஷ்பநாதன் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி, கிள்ளான்
விஷாலினி சுகுமாறன் செம்போங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, சிரம்பான்
காயத்ரி அம்பாள் சிவக்குமார் கோலா மூடா (ஹோம்) தமிழ்ப்பள்ளி, கெடா
ஸாருமதி தனசேகரன் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, சுபாங் ஜெயா
துளசி குமார் புனிதா பிலோமினா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி, ஈப்போ
தஷ்வினா முரளி கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்
தரண்யாஷ்ணி சந்திரன் மாசாய் குழுவகத் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்
ஜெயசாதனா முருகன் புனிதா பிலோமினா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி, ஈப்போ
விவேகன் புஷ்பநாதன் வெஸ்ட் கண்ட்ரி (கிழக்கு) தமிழ்ப்பள்ளி, பாங்கி
தருணிக்கா பிரகாசம் வெஸ்ட் கண்ட்ரி (கிழக்கு) தமிழ்ப்பள்ளி, பாங்கி
சர்வினி ராஜா சரஸ்வதி தமிழ்ப்பள்ளி, கெடா
காவியா மணிமாறன் ஆர்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கெடா
தி.கீர்த்தனா பண்டார் ஸ்பிரிங்ஹீல் தமிழ்ப்பள்ளி, நெகிரி செம்பிலான்
பிரவினா ரெட்டி சத்தியசீலன் சுங்கை தோ பாவாங் தமிழ்ப்பள்ளி, கெடா
முகிலன் செல்வமணி சுங்கை சோ தோட்டத் தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர்
திவ்யா பிரகாசன் வாகீசர் தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர்
தேவமஞ்சரி சங்கரன் சுங்கை தோ பாவாங் தமிழ்ப்பள்ளி, கெடா
ஹேஷானி புஷ்பநாதன் கோலா மூடா (ஹோம்) தமிழ்ப்பள்ளி, கெடா
திவாஹர் இராமசந்திரன் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, சுபாங் ஜெயா
நித்தியாஷிணி வடிவேலன் மாசாய் குழுவகத் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்
தீர்த்தனா முத்துராமன் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி, நெகிரி
வித்தியா தியாகு ஆர்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கெடா
P.நமீத்திரா சரஸ்வதி தமிழ்ப்பள்ளி, கெடா
கிருத்திக்கா சுரேஷ் தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர்
ரீனா ஹெரிஸ் வால்டோர் தமிழ்ப்பள்ளி, பினாங்கு
தேவதர்ஷினி வேலாயுதம் குவாலத் தெர்லாக் தமிழ்ப்பள்ளி, கேமரன் மலை

நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது. ஒரு மாதக் காலம் முறையாக வாசித்து, அவற்றுள் போட்டி விதிமுறையை மீறியிருக்கும், சிறுவர் சிறுகதைகள் தன்மைக்குப் பொருத்தமற்றுமிருக்கும் சிறுகதைகள் நீதிபதிகளால் நீக்கப்பட்டுள்ளன என்பதைக் கருத்தில் கொள்ளவும். நீக்கப்பட்டதற்கான காரணங்களைப் போட்டியில் கலந்துகொண்ட 241  பேருக்கும் தனிப்பட்ட முறையில் சொல்லப்படாது. பொதுவான ரீதியில் நீக்கப்பட்டதற்கான காரணங்களை இங்கே பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன:

  1. சிறுவர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் பெரியவர்களை முதன்மைப்படுத்தியிருந்த கதைகள்.
  2. கொடுக்கப்பட்ட படத்தினை அடிப்படையாகக் கொள்ளாமல் எழுதப்பட்டிருந்த கதைகள்.
  3. ஆசிரியரை முதன்மை மாந்தராகப் படைத்து, சிறுவர் கதாபாத்திரத்தைப் பின்னுக்குத் தள்ளிய கதைகள்.
  4. அறிவுரை மட்டுமே சொல்லப்படும் பாணியில் எழுதப்பட்ட கதைகள்.
  5. மொழியில் ஈர்ப்பில்லாமல் விடயங்களை நேரடியாகவே சொல்லிச் சென்ற கதைகள்.

(இவையாவும் நீக்கப்பட்டதற்கான காரணங்களாக நீதிபதிகள் முன்வைத்தவை ஆகும்)

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்குமே வாழ்த்துகள். முயற்சியை விட்டுவிடாமல் தொடர்ந்து நடத்தப்படும் அடுத்தத்தடுத்த போட்டிகளில் கலந்து கொள்ளவும். கலந்து கொண்ட அனைவருக்கும் இணைய நற்சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். நன்றி.

 

இறுதி சுற்றுக்குத் தேர்வான வெற்றியாளர்களே,

 

ஒருவேளை தங்களின் மாணவர்கள் அல்லது பிள்ளைகள் இறுதி சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பின் எங்களை மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். sirukathai2019@gmail.com இறுதி சுற்றின் போட்டி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். மறவாமல் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளவும். (சிலருடைய முழுமையான தகவல்/பாரம் இணைக்கப்படவில்லை)

 

நன்றி

சிறுவர் சிறுகதைப் போட்டி 2019-2020

ஏற்பாட்டுக் குழு

மலேசியத் தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகம்

ஆழ்துளை கிணற்றிலிருந்து சுஜித் மீட்கப்பட வேண்டும்

Latest Update:

இந்திய நேரத்தின்படி நேற்றிரவு 10.30 மணியளவில் சுஜித் விழுந்திருந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து உடல் அழுகிய துர்நாற்றம் வீசியது. சுஜித் இறந்துவிட்டான் என்று பின்னர் அறற்விக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணியளவில் சுஜித்தின் உடல் மீட்கப்பட்டது.

 

கடந்த நான்கு நாட்கள்  திருச்சி, நடுக்காட்டுப்பட்டியில் இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடி இறுதியில் காப்பாற்ற முடியாமல் இறந்துவிட்டான். உலகமே இச்சிறுவனின் மரணத்தின் முன் கையறு நிலையில் மண்டியிட்டுள்ளது.

சிறுவனின் இறுதிசடங்கு தொடர்பான செய்திகளை இங்குக் காணலாம்:

https://www.youtube.com/watch?v=oAkREwn1fv4

சுஜித் இறப்பதற்கு முன் எழுதப்பட்ட கவிதை:

 

உணவுவின்றி 

மகா இருளுக்குள்

கையசைக்க உடலசைக்க வழியின்றி

குறுகிய  ஒரு குழிக்குள்

நம்மையெல்லாம் விட்டு

88 அடி ஆழத்தில் 

தவித்துக் கொண்டிருக்கிறான்

சுஜித்.

மகனே மீண்டு வா.

குறிப்பு: இது சுஜித் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது வெளியிடப்பட்ட காணொளி.

 

https://www.facebook.com/bahasatamil.upsr/videos/1427591294055099/

88 அடி ஆழத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் சிறுவனைக் காப்பாற்ற மீட்புப்பணிக் குழு 90 அடி ஆழத்திற்குப் பக்கத்தில் ஒரு குழியைத் தோண்டிக் கொண்டிருக்கிறது. நல்ல செய்தியை எதிர்பார்ப்போமாக.

#Prayforsujith

#SaveSujith

இந்த Hashtag-ஐ பரப்புவோமாக. இப்பிரபஞ்சம் இச்சூழலைச் சரிசெய்ய குரல் எழுப்புவோமாக.

 

More than 60 hours after Sujith, a two-year-old boy fell into a borewell near Trichy in Tamil Nadu, rescue operations are still underway in the village. The rescue team has drilled a hole around 40 feet deep parallel to the borewell in which Sujith has been trapped. 

Sujith fell into the borewell on Friday evening when he was playing with his cousins. Though he was stuck at 27 feet deep earlier, his position slipped to around 100 feet by Sunday. The officials are also monitoring Sujith’s movements and health condition as the drilling is underway to bring him out. State Health Minister C Vijayabhaskar, who was overseeing the operation, confirmed on Sunday afternoon that the boy’s cries were last heard on Saturday morning around 5:30 am. 

 

கே.பாலமுருகன்

 

Short Film – Click and Like Our Short Film

மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்து சங்கப் பேரவை நடத்திய உலகளாவிய குறும்படம் போட்டியில் தமிழ்ப்பள்ளி ஆசிரியரும், தமிழ்ப்பள்ளி மாணவர்களும் இணைந்து படைத்த ‘இருளும் வெளிச்சமும்’ என்கிற குறும்படத்தைக் கீழ்க்கண்ட ‘லின்க்’ மூலம் பாருங்கள்; பகிருங்கள்; ‘லைக்’ செய்யுங்கள். உங்கள் ஆதரவு இவர்களின் திறனுக்கு ஓர் அங்கீகாரமாகும். மறவாமல் குறும்படத்தைப் பார்த்து; லைக் செய்யுங்கள். Please watch and share and like our short film via link given below. Give a support to us.

https://youtu.be/mwCAPv5XuJI

18 மணிநேரம் படப்பிடிப்பு; இரண்டு நீண்ட இரவுகள்; 12 நாட்கள் எடிட்டிங். தமிழ்ப்பள்ளி ஆசிரியர் மாணவர்களின் உழைப்பு. நீங்கள் செய்யத் தகுந்த மிகப் பெரிய உதவி கீழ்க்கண்ட லின்க் மூலம் எங்கள் குறும்படத்தை ‘லைக்’ செய்வது மட்டுமே. முன் வாருங்கள் நண்பர்களே.

Please watch and share and like our short film via link given below. Give a support to us.
# மலாயாப் பல்கலைக்கழகம் திருக்குறள் குறும்படப் போட்டி 2019 (இந்து சங்கப் பேரவை)

தேசிய அளவில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட சிறுகதை எழுதும் போட்டியின் முதல் சுற்றில் தேர்வான மாணவர்களின் விவரங்கள்.

https://youtu.be/QI7PYrI5QTo

தேசிய அளவில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட சிறுகதை எழுதும் போட்டியின் முதல் சுற்றில் தேர்வான மாணவர்களின் விவரங்கள்.

சிறுவர் சிறுகதை எழுத்தாளர்கள் 2019

நீங்களும் எழுத்தாளர்கள்தான்

அறிவியல் புனைவு களத்தின் வழியாக கனவுருப்புனைவு, அறிவியல் புனைவு, சிறுகதைகள் போன்ற எழுத்தாற்றலை வளர்க்கப் புதிய திட்டமாக ‘தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவில் சிறுகதை எழுதும் போட்டி 2018/2019’ நடத்தப்பட்டது. 200க்கு மேற்பட்ட சிறுகதைகள் நாடு முழுவதிலுமிருந்து கிடைக்கப் பெற்றன. சிறுவர்கள் மத்தியில் நல்ல ஆக்கச் சிந்தனைமிக்க எழுத்தாளர்களை அடையாளங்கண்டு அவர்களை எழுதத் தூண்டுவதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கம் ஆகும்.

அவ்வகையில் முதல் சுற்றில் தேர்வான 22 சிறுகதைகளும் வருகின்ற மார்ச் – ஏப்ரல் மாதம் முறையாக வடிவமைக்கப்பட்டு நூலாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம் இரண்டாம் சுற்றில் சிறந்த பத்து சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகையும் நற்சான்றிதழ்களும் கொடுக்கப்படும். வரலாற்றில் சிறுவர் இலக்கியத்திற்கான சிறந்த முயற்சி என்று பதிவு செய்யவிருக்கும் இத்திட்டம் நிதானமாக முன்னெடுத்துச் செல்லப்படும் என்பதால் கால அவகாசமும் தேவைப்படும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

தேர்வு செய்யப்படாத மற்ற மாணவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள். உங்களின் முயற்சி தொடர வேண்டும். இக்களம் இல்லையெனில் வேறொரு களத்தில் சந்திக்கலாம். முயற்சியுள்ளவரை தோல்வி என்பது நிரந்திரம் அல்ல. முதல் சுற்றில் தேர்வான மாணவர்களுக்கும் நல்வாழ்த்துகள். உங்களின் அனைத்துச் சிறுகதைகளும் நுலில் இடம்பெறும். விரைவில் இரண்டாம் சுற்றுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும்.

முதல் சுற்றில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் ஆசிரியர்கள்/பெற்றோர்கள் விரைவில் புலனத்தின் வாயிலாகத் தொடர்புக் கொள்ளப்படுவர். நன்றி.

இக்கண்

கே.பாலமுருகன்

சிறுகதை போட்டிக் குழுத் தலைவர்

 

மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான சிறுகதை எழுதும் போட்டி 2018/2019

மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான சிறுகதை எழுதும் போட்டியின் முதல் சுற்று முடிவுகள் இன்னும் 5 நாட்களில் வெளிவரும்.

இங்கு நீங்கள் முடிவுகளைப் பெறலாம்.

 

நன்றி.

யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகளும் ஆலோசனைகளும்

வருகின்ற வியாழக்கிழமைக்குத் தள்ளி வைக்கப்பட்டிருக்கும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் குறித்துப் பல்வேறான ஆருடங்களும் கருத்துகளும் வெளிவந்த வண்ணமே உள்ள இவ்வேளையில் அத்தேர்வு முடிவுகள் குறித்துச் சில முன்னேற்பாடுகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியதில் இக்கட்டுரை உருவாகியுள்ளது. ‘Pass vs Fail’ என்கிற இரு முனைகளுக்கும் இடையே மாணவர்களைத் துரத்தும் நாள். அதிலிருந்து அவர்களை மீட்க நாம் போராட வேண்டியுள்ளது. ஆகவே, அது குறித்து நம் அகங்களைத் திறக்க முனைகிறேன். கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் அடுத்த தலைமுறைக்கு நாம் எதைக் கொடுக்கப் போகிறோம் என்பதில் நாம் ஒன்றுப்பட வேண்டியுள்ளது.

  1. மனத்திடம்

எப்பொழுதுமே தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்களுக்கு ஏற்படும் பயம் உண்மையில் அவர்களுடையதல்ல. பெற்றோர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், எதிர்த்த வீட்டுக்காரர்கள் என இன்னும் பலர் உருவாக்கும் எதிர்ப்பார்ப்பின் விளைவுகளே மாணவர்களின் மனத்தில் பயம் என்கிற ஒரு தடுப்பை ஏற்படுத்திவிடுகிறது. வயதிற்கு மீறி ஏற்படும் அச்ச உணர்வால் அவர்கள் சூழப்படுகிறார்கள். ஒரு சிலருக்கு மாணவர்களின் தேர்வு முடிவுகள் கௌரப் பிரச்சனையாகவும் ஆகிவிடுவதால் அப்பயம் மேலும் அழுத்தமாக மாணவர்களின் மனத்தில் ஊடுபாய்ந்து கொள்கிறது. ஆகவே, பெற்றோர்கள் தயவு செய்து தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்கள் முன் அதிகம் பரப்பரப்பையோ பயத்தையோ காட்டிக் கொள்ளாதீர்கள். நம்மை விட மனதளவில் குழந்தைகள் பலவீனமானவர்கள்; நம்மைவிட அவர்களின் பயம் ஆபத்தானது என்பதால் தேர்வு முடிவுகளைத் துணிவுடன் எதிர்க்கொள்ளும் பக்குவத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்தவும்.  யூ.பி.எஸ்.ஆர் தேர்வு என்பது வாழ்க்கையை நிர்ணயிக்கும் களம் அல்ல; ஆரம்பப்பள்ளிக் கல்வியின் ஒட்டுமொத்த மதிப்பீட்டில் ஒரு பகுதி மட்டுமே என மாணவர்களுக்குப் புரிய வைக்கவும். பயத்தோடு இருக்கும் மாணவர்களின் பயங்களைப் போக்கும் பொறுப்பு நம்முடையது என்று உணரக் கேட்டுக் கொள்கிறேன். வியாழக்கிழமைக்குள் அவர்களின் மனத்தைத் திடப்படுத்த முயலுங்கள். அதீதமான எதிர்ப்பார்ப்புகளை மாணவர்களின் மீது திணிக்காதீர்கள்.

 

2. மதிப்பீட்டின் யதார்த்தம்

 

ஓர் ஆண்டு முழுவதும் மிகவும் திறமையுடன் கற்கும் ஒரு மாணவன் தேர்வு நாளின்போது ஏற்படும் சிறிய தடுமாற்றம், பதற்றம், உடல்/மன நல நிலைத்தன்மை பிசகல், போன்ற பல்வேறான புறச்சூழல் தாக்கங்களால்  ஏற்றம் இறக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே, ஒரு மாணவனின் முழு கெட்டிக்காரத்தனத்தை அளக்கும் கருவி ‘தேர்வு’ மட்டுமே என்கிற முடிவுக்கு வரும் பழக்கத்தை நாம் கைவிட வேண்டியுள்ளது. மதிப்பீடு என்பது ஒரு நாள் தேர்வில் நிர்ணயிக்கப்படுவதல்ல. ஆண்டு முழுவதும் அல்லது ஆறாம் ஆண்டு வரையிலும் (ஆறு ஆண்டுகள்) கண்கானிப்பு, கற்றல் நடவடிக்கையில் ஈடுபாடு, விளையாட்டு, சுறுசுறுப்பு, பங்கேற்பு என ஒரு மாணவனின் ஒட்டுமொத்த மதிப்பீட்டில் ‘தேர்வு’ ஒரு பகுதி மட்டுமே என்கிற நம் புதிய கல்வி அணுகுமுறையைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு அப்பால் மாணவர்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் உள்ளது. அவர்களை நிரூபித்துக் கொள்ள நாம் மேலும் வாய்ப்பைத் திறக்க வேண்டுமே தவிர யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகளைக் காட்டி அவர்களின் ஆளுமையைச் சுருக்கிவிடுதல் கூடாது. இங்குக் குறைந்த தேர்ச்சிப் பெறும் மாணவனுக்கு நாம் கொடுக்கும் ஊக்கம் நாளை வெற்றியாக மாறலாம்.

 

 

3. சொல் பிரயோகம் 

வியாழக்கிழமை தேர்வு முடிவுகளைப் பெறும் மாணவர்களை நாம் விமர்சிக்கும்போது நாம் உபயோகிக்கும் வார்த்தைகளின் மீது கவனம் தேவை. அவர்களின் மனத்தையும் உள்ளுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் ஆற்றலையும் சாகடிக்கும் சில வார்த்தைகள் ஒவ்வொரு காலத்திலும் பலர் பயன்படுத்திக் கேட்டதுண்டு.

– நான் தான் சொன்னனே நீ எங்க உருப்படப் போறேனு…

– இது எங்கத் தேரப்போது…

– அவ்ளதான் இனிமேல் நீ…

– அதான் அப்பவே சொன்னேன்டா படிச்சாதானே…

இப்படியாக இன்னும் கொடூரமான வார்த்தைகளும் உண்டு. இவ்வாண்டு நாம் நம்மை மாற்றிக்கொண்டால் என்ன? ஒரு குழந்தையின் வாழ்க்கையில் எப்பொழுது திருப்பம் உண்டாகும் என நம்மால் கணிக்கவே இயலாது. கடைசி வரிசை மாணவர்களே இன்று வாழ்க்கையில் சாதித்தவர்களாக உள்ளார்கள் என்கிற நிஜம் நாம் அறியாததா? நாம் போட்ட விதை நிச்சயம் நல்விளைவைக் கொடுக்கும். ஆனால், அதற்கான காலமும் நேரமும் நம்மால் யூகிக்க முடியாமல் இருக்கலாம். நல்வார்த்தைகள் கொண்டு அவர்களின் மனத்தைத் தேற்ற யாரும் முன்வரமாட்டார்கள். பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் தவிர அவர்களை யார் தூக்கி நிறுத்த முடியும்.

“சரிடா அடுத்த முறை பார்த்துக்கலாம். உன்னால முடியும்”

“கவலைப்படதேமா… இது ஆரம்பம்தான் அடுத்த பரீட்சையில நீ யாருனு காட்டு”

இப்படி நீங்கள் உதிர்க்கும் வார்த்தைகள் அவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடலாம் அல்லவா? சொல்லுக்கு இல்லாத சக்தியா?

 

4. பத்திரிகை நண்பர்கள்

பத்திரிகை நண்பர்களுக்கும் என் வேண்டுகோள் 8ஏ என்பது மட்டுமே கொண்டாட்டத்திற்குத் தகுதியான வெற்றி கிடையாது. தேர்வில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் உற்சாகமூட்டும் பதிவுகளைக் கொண்டு வாருங்கள். வழக்கமாக தேர்வு முடிவுகள் வெளியான மறுநாள் ‘8ஏ’ கொண்டாட்டங்கள் தொடர்பான செய்திகள் மட்டுமே பிரசுரம் ஆகும். இவ்வாண்டு ஏன் நீங்கள் வரலாற்றை மாற்றியமைக்க முடியாது? மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து தேர்வில் முன்னேறியிருக்கும் ஒரு பள்ளிக்கு ஒரு மாணவனை அடையாளம் கண்டு அவனைப் பேட்டிக் காணுங்கள்; அல்லது அவர்களைப் பற்றிய செய்தியைப் பிரசுரியுங்கள். இதுவரை இல்லாத ஒரு முயற்சியாக இருக்கும். வெற்றி என்பதன் அர்த்தத்தையே நாம் ‘ஏக்களை’ கொண்டாடி மறக்கடித்துவிட்டோம். சிறு சிறு அடைவுகள் கூட அங்கீகாரமின்றி அழிந்துவிடுகின்றன.

 

பின் குறிப்பு:

வரும் வியாழக்கிழமை வெளியாகும் தேர்வு முடிவுகள் குறித்து உங்கள் கருத்துகளை, பகிர்வுகளை வெளிப்படுத்த எனது ‘Bahasa Tamil Upsr Balamurugan’ என்கிற முகநூலின் வழியாக செய்யவிருக்கிறேன். கலந்துகொள்ள ஆர்வமும் உள்ளவர்கள் உங்கள் கருத்துகளை முன்கூட்டியே எனக்கு அனுப்பி வைக்கலாம். அதே போல தன் சுய முயற்சியால் வெற்றிப்பெற்றிருக்கும் (8 ஏக்கள் மட்டுமல்ல) மாணவர்கள் ‘http://btupsr.blogspot.com‘ என்கிற வலைத்தலத்தில் அங்கீகரிக்கப்படுவார்கள். அவர்களை நேர்காணல் செய்து பிரசுரம் செய்யவிருக்கிறேன். என் முகநூலில் தொடர்பு கொள்ளவும்.

இத்தேர்வு முடிவுகளை மட்டுமே பிராதானமாகக் கொண்டு நம்மை விமர்சிக்கும்; நம்மை பரிசோதிக்கும் மனப்பான்மைகளுக்கு எதிராக நாம் உரையாட வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. முன்பே சொன்னதைப் போல ‘தேர்வு’ என்பது கல்வியில் இருக்கும் பலவகையான மதிப்பீட்டுக் கருவிகளில் ஒன்றாகும். அது மாணாக்கரின் அறிவின், கற்றலின் முழுமையைக் காட்டிவிடாது என்பதைத் திறந்த மனத்துடன் நாம் ஏற்றுக்கொண்டு அடுத்த தலைமுறையை வடிவமைக்கும் தூரநோக்கு சிந்தனைக்கு மாறிட வேண்டும்.

கே.பாலமுருகன் 

 

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான சிறுகதை எழுதும் போட்டி 2018

Tamil Creative Art & Science Fiction  Movement – தமிழ் கற்பனையாற்றல் & அறிவியல் புனைவுக்களம்  ஏற்பாட்டில் 

அடுத்த தலைமுறை மாணவர்களின் எழுத்தாற்றலை வளர்க்கவும், கற்பனைவளத்தினைத் தூண்டவும்

‘தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான சிறுகதை எழுதும் போட்டி 2018’

 

– வெற்றிப் பெறும் சிறந்த இருபது சிறுகதைகள் நூலாகத் தொகுக்கப்பட்டு 2019ஆம் ஆண்டு வெளியிடப்படும்.

– போட்டியில் கலந்துகொள்ள விண்ணப்பத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டிய இறுதி நாள் : 15.11.2018

-மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்த மாணவர்களுக்குச் சிறுகதைக்கான விதிமுறைகள், வழிகாட்டிப் படம் அனுப்பி வைக்கப்படும். sirukathai2018@gmail.com

–  முதல் பரிசு: ரி.ம 300.00

இரண்டாம் பரிசு: ரி.ம 200

மூன்றாம் பரிசு : ரி.ம 100

ஏழு ஆறுதல் பரிசுகள்  தலா ரி.ம 50.00

(அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்கப்படும்) 

– மாணவர்கள் எழுதும் சிறுகதை வழங்கப்படும் வழிகாட்டிப் படத்தினை ஒட்டி இருத்தல் வேண்டும்.

– 150 சொற்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

– மாணவர்களின் சிறுகதை கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு அனுப்பப்பட வேண்டும்.

 

மேல் விவரங்களுக்கு: sirukathai2018@gmail.com

 

எழுத்தாளர் கே.பாலமுருகன்