மெலாந்தி பள்ளத்தாக்கு: தொடர்க்கதையின் முடிவை ஊகிக்கும் போட்டியில் வெற்றிப்பெற்றவர்களின் அறிவிப்பு
இப்போட்டியில் கலந்து கொண்ட 14 வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இருப்பினும், கதை முடிவை மிக நெருக்கத்துடனும் வித்தியாசமான முறையில் அதை எழுதிய விதத்திலும் இவ்விருவர் வெற்றிக்குரியவர்களாகத் தேர்ந்தடுக்கப்படுகின்றனர்.
ஆனாலும், இவையாவும் மெலாந்தி பள்ளத்தாக்கு தொடர்க்கதையின் முடிவல்ல; வாழ்த்துகள்.
- கதையின் முடிவு: ஊகித்தவர்: ஜெ. இந்துஜா
லோரி பழுதடைந்ததால் குச்சிமிட்டாயின் உதவியை ஏற்று பங்களாவில் அன்றிரவு தங்கிய லோரி டிரைவரின் மனைவியைக் குச்சிமிட்டாயும்மூர்த்தியும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயல்வார்கள். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நடக்கும் போராட்டத்தில் லோரி டிரைவரும், அவருடைய மனைவியும் பேத்தியும் குச்சிமிட்டாய், மூர்த்தியால் கொல்லப்பட்டு மெலாந்தி பள்ளத்தாக்கில் தூக்கி வீசப்படுகின்றனர். பிறகு கொல்லப்பட்டவர்களின் பழிவாங்கும் படலம் ஆரம்பிக்கிறது. மூர்த்தி அந்த வீட்டில் தனித்திருக்கும்போது இறந்து காணப்படுகிறான்.உணவு கொடுக்க வரும் குச்சிமிட்டாய் அந்தத் தகவலைத் தனசேகரிடம் தெரிவிக்கிறான். மன அழுத்தம் காரணமாக மூர்த்தி தற்கொலை செய்து கொண்டதாக முடிவுக்கு வரும் தனசேகர் பாப்பாக்களிடம் தெரிவித்துவிட்டு, மூர்த்தியின் உடலை அப்புறப்படுத்தி பள்ளத்தாக்கில் வீச செய்கிறான். அடுத்தது குச்சிமிட்டாயின் முறை. சரவணனின் உள்நுழைந்து மூர்த்தியின் ஆவியும், இறந்த மறறவர்களின் ஆவியும் மாறி மாறி உரையாடுகின்றன. இறுதியில் சரவணனால் குச்சிமிட்டாய் கொல்லப்பட்டு பள்ளத்தாக்கில் வீசப்பட்டதாகத் தனசேகர் அறிகிறான். அதை மறுக்கும் சரவணன் குச்சிமிட்டாயின் இறப்புக்குப் பிறகு, மூன்று உருவங்களைப் பார்த்ததாகச் சொல்வதாகக் கதை முடிவடைகிறது.
கதைமாந்தர்கள்:
- சரவணன்
- குச்சிமிட்டாய்
- ஐயாவு
- ஐயாவு அடியாள்
- தனசேகர்
- குமாரைய்யா
- சுப்பம்மா
- கிருஷ்ணமணி
- பழுதடைந்த லோரி ஓட்டுநர்
- லோரி ஓட்டுநர் மனைவி
- லோரி ஓட்டுநர் பேத்தி
- மாணிக்கம்
- பெரியசாமி
- மூர்த்தி
- கதையின் முடிவு: ஊகித்தவர்: ச.அர்வின்
ஓராண்டுக்கு முன் மெலாந்தி வீட்டிற்கு வந்து தங்கிய அந்த பெரியவர், பெண்மணி மற்றும் சிறுமி ஆகிய மூவருக்கும் மிகப் பெரிய துயரம் நிகழ்ந்தது. வேறு அறையில் ரகசியமாகத் தங்கியிருந்த மூர்த்தியால் பிரச்சனைக்கு ஆளான ஒரு ரவுடி கும்பல் அன்றிரவு அந்த வீட்டைத் தாக்கியது.அதில், வீட்டில் தங்கியிருந்த இதர மூவரும் மரணம் அடைந்தனர். மரணமடைந்தவர்கள் வேறு யாருமில்லை. சரவணின் மாமனரும் மனைவியும் அவனது குழந்தையும்தான்.அவர்கள் சரவணனைத் தேடிப் போகும்போதுதான் லாரி பழுதடைந்தது.அவர்களின் சாவிற்க்கு குச்சியும் தனசேகரும் ஒரு காரணம் என்பதால் அவர்களைப் பழி வாங்கவே சரவணன் அங்கு வந்திருந்தான். வலிப்பு வந்து கிழே மயக்கமுற்ற மாதிரி குச்சியை ஒரு வகையாக ஏமற்றினான்.குச்சியும் தனசேகருக்கு தொடர்பு கொள்கிறான். தனசேகர் அவ்வீட்டிற்கு வந்தவுடன் அவர்களைக் கொடூரமாக் கொலை செய்தான். இதற்குப் பின்னர், தான் வெளியில் நடமாட முடியாது எனத் தெரியும். அதனால் அவனே காவல்துறையில் சரணடைந்தான்.
வழிநடத்துனர்
எழுத்தாளர் கே.பாலமுருகன்
காந்தி முருகன்
அவரவர் கற்பனைவளத்தோடு அமைகிறது கதை. வாழ்த்துகள். ஆசிரியரின் கற்பனை வளம் நிச்சயமாக மாறுப்பட்ட நிலையில் தான் இருக்கும்..