அறிமுகம்
- என்னைப் பற்றி:
கெடாவில் பிறந்து வளர்ந்து தமிழ்மொழிக்கான சிறப்பாசிரியராfகப் பணியாற்றி வருகிறேன். களம் என்கிற இணைய இதழின் ஆசிரியராகவும் செயல்பட்டு வருகிறேன். இதுவரை அநங்கம், பறை என இரண்டு இலக்கிய சிற்றிதழ்களை நடத்தியுள்ளேன். அநங்கம் முதல் இதழை இலங்கை கவிஞர் எம்.ஏ நுக்மான் அவர்கள் கெடாவில் வெளியீடு செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது. சிறுவர்களுக்கான சிறுகதை எழுதும் பட்டறை, சிறுகதை விவாதங்கள், சிறுவர் நாவல்கள் என அடுத்த தலைமுறை இலக்கியத்திற்கான தடங்களையும் மலேசியா முழுவதும் செயல்படுத்தி வருகிறேன்.
அம்மா ஆவுடையார் கோவில் கல்லநேந்தல் கிராமத்தில் பிறந்து 1955ஆம் ஆண்டில் மலேசியா வந்தவர். அப்பா பட்டவர்த் பினாங்கு மாநிலத்தில் பிறந்தவர். இளம் பிராயத்திலிருந்தே வாகனங்கள் பழுதுபார்ப்பது, சொந்த மோட்டார் பட்டறைகள் வைத்துத் தொழில் செய்தவர் அப்பா. 2014ஆம் ஆண்டில் இயற்கையை எய்தினார்.
- இதுவரை பெற்ற விருதுகள்:
1.2008ஆம் ஆண்டு ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டியில் முதல் பரிசு- “நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்”
2. 2008 ஆம் ஆண்டு தோட்ட தொழிலாளர் சங்கமும் நில நிதி கூட்டுறவு சங்கமும் இணைந்து நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டியில் மூன்றாவது பரிசு: ‘உறவுகள் நகரும் காலம்’
3. மலாயாப்பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதை போட்டிகளில்:
2007: முதல் பரிசு: போத்தக்கார அண்ணன்
2008: இரண்டாவது பரிசு: கருப்பாயி மகனின் பெட்டி
2009: ஆறுதல் பரிசு: சுப்பையாவுடன் மிதக்கும் ஆங்கில கனவுகள்.
4. மலேசிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதை-கவிதை போட்டிகளில்:
2007: சிறுகதை முதல் பரிசு: ‘நடந்து கொண்டிருக்கிறார்கள்’
2008: சிறுகதை: இரண்டாவது பரிசு: ‘பழைய பட்டணத்தின் மனித குறிப்புகள் ‘
நான்காவது பரிசு: ‘உறங்கிக் கொண்டிருப்பவர்கள்’
கவிதை முதல் பரிசும் சி.கமலநாதன் விருதும் கிடைத்தது.
2009: சிறுகதை: இரண்டாவது பரிசு: இருளில் தொலைந்தவர்கள்
கவிதை முதல் பரிசும் எம்.ஏ.இளஞ்செல்வன் விருதும் கிடைத்தது.
5. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் இரண்டு சிறுகதைகள் 2008 ஆம் ஆண்டின் மாதந்திர கதை தேர்வில் சிறந்த கதைகளாகத் தேர்வு செய்யப்பட்டன. அலமாரி , அய்யப்பன் நாதர் இறப்பதற்கு ஒரு மணி நேரம் இருந்தது.
6. இந்திய தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதை போட்டியில்: நான்காவது பரிசு: “11மணி பேருந்து”.
7. சுஜாதா நினைவாக நடத்தப்பட்ட உலகளாவிய அறிவியல் புனைக்கதை போட்டியில் ஆசிய பசிபிக் பிரிவுக்கான சிறந்த கதை/ சிறப்புப் பரிசு: “மனித நகர்வும் இரண்டாவது பிளவும்” தேர்வுப்பெற்றன.
8. மாவட்டக் கல்வி இலாகா – “சிறந்த ஆக்கச்சிந்தனைமிக்க எழுத்துக்கான” அங்கீகாரத்தை, ஆசிரியர் தினக் கொண்டாட்டம் 2009-இல் அளித்தது.
9. 2012ஆம் ஆண்டிற்கான மாவட்டக் கல்வி இலாகாவிடமிருந்து ‘புத்தாக்க ஆசிரியருக்கான’ விருது.
10. 2010ஆம் ஆண்டிற்கான தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்திடமிருந்து ‘கரிகாற் சோழன்’ விருதை என் நாவலுக்காகப் பெற்றேன்.
11. 2011ஆம் ஆண்டில் சிலாங்கூர் இளைஞர் விளையாட்டுத் துறையிடமிருந்து ‘இளம் சாதனையாளர் விருதை’ பெற்றேன்.
12. 2016ஆம் ஆண்டில் பேரரசிடமிருந்து ‘கெடா மாநில திறன்மிகு’ விருதை இலக்கியத்திற்காகப் பெற்றேன்.
13. அன்னை வேளாங்கன்னி அறிவியல் கலைக்கல்லூரியின் 2018ஆம் ஆண்டிற்கான ‘தமிழ் நாயகர் தனி நாயகர்’ விருது.
14. கண்ணதாசன் கலைஞர் கழகத்தின் ஆசிரியர் தினக் கொண்டாட்டம் – ‘பாரதி விருது 2018’.
- இதுவரை எழுதிய நூல்கள்:
1. கடவுள் அலையும் நகரம், தங்கமீன் பதிப்பகம்,
2. தேவதைகளின் காகிதக் கப்பல்(சிறுகதைகள்), பாரதி பதிப்பகம்,
3. தீர்ந்து போகாத வெண்கட்டிகள்( சினிமா கட்டுரைகள்) வல்லினம் பதிப்பகம்,
4. இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்( சிறுகதைகள்) வல்லினம் பதிப்பகம்,
5. நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்( நாவல்) மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்,
6. மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும், சுடர் பதிப்பகம்,
7. மோகினி மலையின் இரகசியமும் பாழடைந்த மாளிகையும், சுடர் பதிப்பகம்,
8. ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல் ( குறுநாவல்கள்) சுடர் பதிப்பகம்.
9. தூக்குலிடப்பட்டவர்களின் நாக்குகள் (கவிதைகள்), வல்லினம் பதிப்பகம்.
10. இறந்தகாலத்தின் ஓசைகள், சிறுகதை தொகுப்பு, தோழிப் பதிப்பகம்.
11. சுடர் கட்டுரைத் தொகுப்பு, சுடர் பதிப்பகம்.
12. மரங்கொத்தியின் இசை, சினிமா கட்டுரைத் தொகுப்பு, மொக்லி பதிப்பகம், தமிழ்நாடு.
13. பதின்மூன்றாவது மாடியும் இரகசியக் கதவுகளும், சிறுவர் நாவல் பாகம் 3, சுடர் பதிப்பகம்.
14. 21ஆம் நூற்றாண்டு கல்வி முறை ஓர் அறிமுகம், சுடர் பதிப்பகம்.
15. யார் அந்த மந்திரவாதி? – சிறுவர் சிறுகதை தொகுப்பு, சுடர் பதிப்பகம்.