UPSR STAR #5: Yashini Sundaram (SJKT LDG CHANGKAT SALAK, PERAK) அவர்களும் கதாநாயகர்களே #5

‘ஆகவே, முயற்சியில்லாமல் இருப்பதுதான் தோல்வி’ – யாஷினி சுந்தரம் 

 

மாணவர் பெயர்: யாஷினி சுந்தரம்

செங்காட் சாலாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி, சுங்கை சிப்புட், பேராக்

யூ.பி.எஸ்.ஆர் அடைவுநிலை: 2B 4C 2D

 

 

நேர்காணல்:

 

கேள்வி: வணக்கம் யாஷினி. இவ்வருடம் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு எப்படி இருந்தது?

யாஷினி: வணக்கம் ஐயா. தேர்வு என்றாலே சிறுவயது முதல் எனக்குச் சவால்தான். இருப்பினும் என்னால் இயன்றவரை தேர்வெழுதினேன்.

கேள்வி: தேர்வு முடிவு உங்களுக்குச் சாதகமாக இருந்ததாக நினைக்கிறீர்களா?

யாஷினி: நான் ‘டி’-யை எதிர்பார்க்கவில்லை ஐயா. ஆகவே, முதலில் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. ஆனால், இப்பொழுதெல்லாம் கல்வி மாற்றம் அடைந்து வருவதால் கேள்விகளும் சிந்திக்க வைத்ததை அறிந்து கொண்டேன். இனி என்னை நான் நிறைய மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இத்தேர்வு எனக்கு உணர்த்தியுள்ளது.

கேள்வி: ஆமாம், யாஷினி. நம் திறமையை உணர இது ஒரு சந்தர்ப்பம். இங்கிருந்து உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள வழிகாட்டுதல் கிடைத்துள்ளது. இருப்பினும், அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி அடைந்துள்ளீர்கள். இந்நிலையை அடைய என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள்?

யாஷினி: நான் என் ஆசிரியர்களின் வழிகாட்டுதலே என்னை இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளது என்றே சொல்வேன். அதோடுமட்டுமல்லாமல் நான் ஆரம்பத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தேன். என்னை உயர்த்தியவர்கள் என் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி பொண்ணுமணி, குமாரி இந்துமதி, திருமதி மாரியம்மாள், திருமதி சர்மிளி, குமாரி மோகனசுந்தரி, திருமதி புனவேஸ்வரி, குமாரி சுமதி, திருமதி பிரியதர்சினி, திருமதி கலைமணி, திருமதி ஷாலினி ஆகிய ஆசிரியர்கள் என்று என்னால் எப்பொழுதும் நினைத்துப் பார்க்க முடியும். இவர்கள் என்னை ஒன்றாம் ஆண்டிலிருந்து செதுக்கியவர்கள்.

கேள்வி:  நான் நினைக்கிறேன் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாக 8ஏ பெற முடியாவிட்டாலும் தன் முயற்சியே பலம் எனக் காட்டித் தேர்ச்சியடைந்து உங்களுக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். ‘பி’,’சி’ பெற வைத்ததும் உழைப்பின் அடையாளமே. சுயமாக படிப்பில் எந்த அளவிற்குக் கவனம் செலுத்தினீர்கள்?

யாஷினி: நான் பள்ளியில் நடக்கும் கூடுதல் வகுப்புகளுக்குத் தவறாமல் சென்றுவிடுவேன். மேலும், ஒவ்வொரு நாளும் ஒரு மாதிரி சோதனை தாளை ஒரு பயிற்சியாக மேற்கொண்டேன்.

 

கேள்வி: இவ்வருட யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் ‘ஏ’க்கள் பெற முடியவில்லை என்று கவலைப்படுவோருக்கு இன்றைய கதாநாயகராக நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

யாஷினி: என் அன்பு நண்பர்களே, தயவு செய்து கவலைப்படாதீர்கள். இது மட்டும் முடிவல்ல. வெற்றிக்கு இதுவே அடித்தளம் என்று நினைத்துக் கொண்டு நீங்கள் பெற்ற அனுபவங்களை மூலதனமாகக் கொண்டு அடுத்து செயல்படவும். செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க இதுவே சரியான கற்றல்.

கேள்வி: அடுத்து என்ன திட்டம் கொண்டுள்ளீர்கள்?

யாஷினி: படிவம் ஒன்றில் ஆங்கிலம், மலாய்மொழி போன்ற பாடங்களில் என் தரத்தை மேலும் உயர்த்திக் கொள்ள பல மூலங்களை நாடவுள்ளேன். இணையம், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், புத்தக வாசிப்பு போன்றவற்றின் மூலம் என்னை நான் வளர்த்துக் கொள்ளவுள்ளேன். நானே சுயமாக இயங்க என்னை நான் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

கேள்வி: இம்முறை தேர்வு உங்களுக்குக் கொடுத்த படிப்பினை என்னவென்று நினைக்கிறீர்கள்?

யாஷினி: உழைத்தால் தான் வெற்றி என்பதைக் கற்றுக் கொடுத்துள்ளது.  நான் வெற்றியடையவில்லை என்று நினைக்கவில்லை. முயற்சிக்கு உரிய அடைவுநிலை பெற்றுள்ளேன். ஆகவே, முயற்சியில்லாமல் இருப்பதுதான் தோல்வி என்று விளங்கிக் கொள்ள வாய்ப்பாக அமைந்தது. நன்றி ஐயா.

 

முயன்றவர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான். முயலாமல் இருப்பது மட்டுமே தோல்வி. ஆகவே, 8பி,8சி,8டி எதாகினும் அது அவர்களின் முயற்சியில் கிடைக்கப்பெற்றது என்றால் தட்டிக் கொடுப்போம்; ஊக்குவிப்போம். அவர்களும் கதாநாயகர்கள்தான். உங்களாலும் பள்ளிப் பெருமை கொள்ளும். 

நேர்காணல்: ஆசிரியர் கே.பாலமுருகன் 

 

 

நேர்காணல் 1 ‘கதாநாயகர் #1 : https://balamurugan.org/2018/12/02/upsr-star-1-devaggan-kanapathy-sjkt-tun-aminah-johor-அவர்களும்-கதாநாய

நேர்காணல் 2 ‘கதாநாயகர் #2: https://balamurugan.org/2018/12/03/upsr-star-2-prishitha-anandan-sjkt-pasir-gudang-johor-அவர்களும்-கதாநாய

நேர்காணல் 3 ‘கதாநாயகர் #3: https://balamurugan.org/2018/12/04/upsr-star-3-neevindrran-narendran-sjkt-mak-mandin-penang-அவர்களும்-கதாநாய

நேர்காணல் 4 ‘கதாநாயகர் #4: https://balamurugan.org/2018/12/04/upsr-star-4-navinesh-pannirselvam-sjkt-ldg-pelepah-kota-tinggi-johor-அவர்களும்-கதாநா

 

 

About The Author