Category Archives: பத்தி

 • களம் இணைய இதழ் அறிமுகம்

  Posted on October 11, 2017 by பாலமுருகன் in பத்தி.

  இலக்கியத்திற்கான வெளியாக உருவாகியிருக்கும் ‘களம்’ இலக்கிய இணைய இதழ்: http://www.kazhams.com பல திசைகளிலிருந்து புறப்படும் இலக்கிய நகர்ச்சிகள் ஒரு நாட்டில் இலக்கியத்திற்கான வெளியை அதிகமாக்கும் என்கிற புரிதலுடன்தான் இவ்விணைய இதழை ஆரம்பிக்கத் தோன்றியது. எப்பொழுதுமே ஒரு குழுவாகச் செயல்படும்போது சில சமயங்களில் யாரோ ஒருவர் அக்குழுவை வழிநடத்த வேண்டிய தேவை உருவாகிறது. அதனாலேயே களம் இலக்கியக் குழுவாக மாற வேண்டியதன் அவசியத்தைப் பல மாதங்கள் சிந்தித்துக் கொண்டே இருந்தேன். இணைய இதழ் என்றும் வரும்போது அதற்கான குழு […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • கேலி வதையின் உச்சநிலை – ஆபத்தும் களையப்படுதலும்

  Posted on June 18, 2017 by பாலமுருகன் in பத்தி.

  கடந்த 2015ஆம் ஆண்டில் மட்டும் பள்ளிக்கூடங்களில் சுமார் 3000 கேலி வதை பிரச்சனைகள் ஏற்பட்டதாகத் தகவல் கூறப்படுகிறது. (http://smasanews.com/index.php/semasa/item/372-3-000-kes-buli-di-sekolah-direkod-pada-2015)   கடந்த ஜூன் 6ஆம் திகதி இரவு கேலி வதையின் கொடூரமான முகம் இன்னொரு உயிரைப் பறித்துவிட்டது. 18 வயது ஆகிய நவீன் என்கிற இளைஞர் ஐந்து பேர் கொண்ட இன்னொரு இளைஞர் கூட்டத்தால் கடுமையாகத் தாக்கப்பட்டு, குதத்தின் வழியாக போத்தல் சொருகப்பட்டு துன்பப்படுத்தப்பட்டுள்ளார். மூளை சாவு அந்த இளைஞருக்கு மட்டுமல்ல என்றே நினைக்கத் தோன்றுகிறது. இதுபோன்ற வன்கொடுமையாளர்கள் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • பேய் விடுதியில் ஒரு நாள்

  Posted on June 7, 2017 by பாலமுருகன் in பத்தி.

  நேற்று முன்தினம் யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்குத் தமிழ்மொழிப் பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காகக் காலையிலேயே ஜாசின் நகரை வந்து சேர்ந்தேன். பரப்பரப்பில்லாத கடைத்தெருக்கள். 200 மீட்டருக்கு ஒருமுறை நாற்சந்தி வட்டம். மீண்டும் மீண்டும் தோன்றி நான்காக உடைந்து மீண்டும் ஒரு சிறிய தெருவையே காட்டி நின்றது. ஒட்டுமொத்தமாக 20 நிமிடத்திலேயே சுற்றிவிட முடிந்த சிறிய நகரம்தான். காலை உணவுக்குப் பிறகு பள்ளிக்குச் செல்லலாம் என முடிவெடுத்த பிறகு ஜாசின் சிறுநகரைச் சுற்றி உணவுக் கடை தேடி அலைந்தேன். திறக்கப்படாத கடைகள் […]

  Share Button
  Continue Reading...
  1 Comment.
 • புதிய திட்டங்களும் பழைய நினைவுகளும் – 2016-லிருந்து 2017-க்கு

  Posted on January 3, 2017 by பாலமுருகன் in பத்தி.

  எப்பொழுதும் கடந்துபோன வருடத்தின் நினைவுகளையும் எதிர்க்கொள்ளப் போகும் வருடத்தின் திட்டங்களையும் எழுதுவது வழக்கமாகும். இன்றோடு (03.01.2017) நான் ஆசிரியர் பணிக்குள் நுழைந்து பத்தாண்டுகள் நிறைவடைகின்றன. 2016ஆம் ஆண்டு எனக்கொரு கத்திமேல் பயணம் மட்டுமே. விருதும் பதவியும் குவிந்தாலும் அதையும் மீறி புகழுக்குள் ஆழ்ந்துபோகாமல் தீமைகளால் மீட்டெடுக்கப்பட்டு நிதானமாக்கப்பட்டேன். எல்லோரும் வயதிற்குரிய வளர்ச்சி கிடையாது; எதுவுமே மெதுவாக நடக்க வேண்டும் ஆனால் உன் வாழ்க்கையில் நீ அடைந்திருப்பது வெகுசீக்கிரமான அடைவுகள் எனச் சொன்னார்கள்; அறிவுரைத்தார்கள். திரும்பிப் பார்க்கிறேன், அப்படியேதும் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • எனது முதலும் கடைசியுமான எதிரியின் கதை

  Posted on October 28, 2016 by பாலமுருகன் in பத்தி.

  குறிப்பு: மனத்தைரியமும் வன்முறை காட்சிகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் இருப்பவர்கள் மட்டும் வாசிக்கவும். தீபாவளி பொதுநல அறிவிப்பு. “எதிரியை அவன் இடத்திலேயே சந்தித்து அவன் கேட்காமலே அவனை மன்னிப்பது எத்தனை ஆபத்தான செயல்?”     என் எதிரிகளை நான் தான் முடிவு செய்ய வேண்டும். எதிரிகளாக இருக்க அவர்களுக்கான தகுதிகளை நான் மட்டுமே தீர்மாணிக்கிறேன். ஆகவே, இவர்கள், இன்னார் என் எதிரிகள் என நீங்களே முடிவு செய்து கொள்ளாதீர்கள். அது அத்துமீறல். இன்று காலையில் எழுந்ததும் என் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • அனுபவ பத்தி: நல்லவனாக இருப்பது எப்படி?

  Posted on September 27, 2016 by பாலமுருகன் in பத்தி.

  5ஆம் ஆண்டு படிக்கும்போதெல்லாம் வருடத் தொடக்கத்திலேயே எப்படி நல்லவனாக இருப்பது எனத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினேன். காலையில் எழுந்ததும் இன்று பள்ளியிலேயே நான் தான் மிகச்சிறந்த நல்லவனாக இருக்க வேண்டும் என சாமியை வேண்டிக்கொள்வேன். இன்று முதல் நான் நல்லவன் என்பதால் இரண்டுமுறை பல் துலக்கினேன். நல்லவர்களுக்குப் பல் பளிச்சென்று இருந்தால்தான் கவர்ச்சியாக இருக்கும்.   நான்குமுறைக்கும் மேல் கண்ணாடியைப் பார்த்து சிரித்து வைத்தேன். மூன்றுமுறை முட்டிகாலிட்டு சுவரைப் பார்த்து கடவுளை நினைத்து வணங்கினால் எல்லாம் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • அசோகமித்ரனின் கண்ணாடி சிறுகதையை முன்வைத்து- சொல்வெளி கலந்துரையாடல்

  Posted on June 22, 2016 by பாலமுருகன் in பத்தி.

  தமிழ் இலக்கிய சூழலில் அசோகமித்ரனின் மிகச் சிறந்த சிறுகதைகள் எனச் சொல்லப்படக்கூடிய புலி கலைஞன், பயணம் போன்ற சிறுகதைகளை வாசிக்க வாய்ப்புக் கிடைத்தபோது அசோகமித்ரனின் கதைஉலகம் தவிர்க்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட, விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மனித மனங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியவை என கடந்தகாலங்களில் அறிய முடிந்தது. ஆனால், சொல்வெளி கலந்துரையாடலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கதை முற்றிலும் அகோகமித்ரனின் வேறொரு கதை உலகத்திற்குள் இட்டுச் சென்றுள்ளது என்றுத்தான் சொல்ல வேண்டும். இங்கு அசோகமித்ரன் என்ற கதைச்சொல்லி வேறொரு அதிர்வலைகளை உருவாக்குகிறார். வேறொரு மனிதர்களைக் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • தைப்பூசம் – அதிர்ச்சி தகவல்கள்

  Posted on January 22, 2016 by பாலமுருகன் in பத்தி.

  குறிப்பு: ஒரு வருடத்தில் தைப்பூசத்தில் மட்டும் மொத்தம் 5 மில்லியன் லீட்டர் பால் சாக்கடையில் கலக்குவதாகத் தகவல் சொல்கிறது.   வெடிகுண்டும் குண்டு வெடியும் தொடர்ந்து இரண்டு நாட்களாகத் தைப்பூசத் திருத்தலங்களில் வெடிகுண்டு போடப்போவதாக பல தரப்புகளிலிருந்து தகவல்கள் வந்திருப்பதாக வாட்சாப் மூலம் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அது இருக்கட்டும், ஆனால், தைப்பூசத்திற்குத் தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்த செல்பவர்களும் அவர்களுடன் செல்பவர்களும் அல்லது தைப்பூசத்திற்குச் செல்லும் பொதுமக்களும் முதலில் தயவு செய்து குப்பைகளைக் கீழே போடாதீர்கள். […]

  Share Button
  Continue Reading...
  2 Comments.
 • எப்பொழுது நீங்கள் கடைசியாகச் சிரித்தீர்கள்?

  Posted on January 3, 2016 by பாலமுருகன் in பத்தி.

    சிரிப்பது கடினமாக மாறிவிட்ட, சிரிப்பது வெட்கப்படும் ஒன்றாக மாறிவிட்ட ஒரூ சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனக்கு தெரிந்து என் அப்பா அவரது கடைசி சில ஆண்டுகள் சிரிக்கவே மறந்திருந்தார். ஒருமுறை கூட அவர் எதற்காகவும் சிரித்துப் பார்த்ததில்லை. எப்பொழுது வாழ்க்கை அவரிடமிருந்து சிரிப்பைப் பிடுங்கியிருக்கும் என்பதை அறியவே முடியவில்லை. எந்தச் சூழல், எந்தத் தருணம், எந்தச் சம்பவம் அவர் சிரிப்பை வெறுக்கக் காரணமாக இருந்திருக்கும் எனத் தெரியாமலே போய்விட்டது. ‘சிரிப்போம் வாருங்கள், சிந்திப்போம் வாருங்கள்’ என்ற […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சர்ச்சை: ஆசிரியர்களும் இன்னொரு தோட்டக்காரர்களே

  Posted on January 2, 2016 by பாலமுருகன் in பத்தி.

  “சட்டையெல்லாம் சாயத்துடன், வியர்வை வடிந்து கொட்டும் முகத்துடன், கருவடைந்த கண்களுடன் பள்ளிக்கூடத்தில் நீங்கள் ஒருவரை சந்தித்தால் அவர் தோட்டக்காரர் என நினைத்துவிடாதீர்கள். அவர்கள் ஆசிரியராகக்கூட இருக்கலாம்.” வருடம் தொடங்குவதற்கு முன்பே தன் விடுமுறையிலோ அல்லது விடுமுறையின் இறுதியிலோ தனக்கு வழங்கப்பட்டிருக்கும் வகுப்பறைக்குச் சாயம் பூசி, ஜோடித்து, அதற்கான அனைத்து வேலைகளையும் செய்து புதுப்பித்தல் பணியை மேற்கொள்வது ஆசிரியர்கள்தான். மேலும், பல பள்ளிகளில் அக்குறிப்பிட்ட ஆசிரியர்களே தனது சொந்த பணத்தைச் செலவிட்டு ஒரு வகுப்பறையை உருவாக்குகிறார்கள். நாம் வேலை […]

  Share Button
  Continue Reading...
  4 Comments.