Category Archives: சிறுகதைகள்

 • சிறுகதை: இரண்டு கிலோ மீட்டர்

  Posted on December 13, 2017 by பாலமுருகன் in சிறுகதைகள்.

  சீன மதுபான கடையில் இருக்கும் பூனை அந்த வெற்றிடத்தில் வந்து நின்று மண்ணில் எதையோ தேடிக் கொண்டிருந்தது. புதிதாகப் பார்க்கும் யாவருக்கும் அல்லது அப்பொழுதுதான் அவ்விடத்திற்கு வரும் யாவருக்கும் பூனை இரையைத் தேடிக் கொண்டிருப்பதாகத் தோன்றலாம். மோட்டாரில் வந்து நின்ற எனக்கும் அவ்வெற்றிடம் சட்டென கவனத்தை ஈர்த்தது. தைப்பூசம் நடக்கும் முருகன் கோவிலுக்கு முன்னே இருக்கும் நாற்சந்தி சாலையிலிருந்து 200 மீட்டர் தள்ளிப் போய் நின்றாலோ, தெற்கில் அமைந்திருக்கும் முருகவேல் சாப்பாட்டு கடையிலிருந்து வெளியாகும் யாராக இருந்தாலும் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுகதை: அழைப்பு

  Posted on September 5, 2017 by பாலமுருகன் in சிறுகதைகள்.

    யாரோ, தூரமாகச் சென்றுவிட்ட யாரையோ அழைக்கும் சத்தம். சட்டென மதிய வெய்யிலின் பிடியிலிருந்து எழுந்து நிதானித்தேன். வெகுநாட்களுக்குப் பின் மனத்தில் ஒரு துள்ளல். கடைசியாக எப்பொழுது இப்படியொரு அழைப்பைக் கேட்டிருப்பேன்? ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அரை இருட்டில் இருந்த அறையிலுள்ள மேசை விளக்கைத் தட்டினேன். சுற்றிலும் அடர்த்தியான சன்னல் துணி. வெளிச்சம் உள்ளே வரவேகூடாது என ஆசிரியர் கோபால் எல்லாவற்றையும் அடைத்து வைத்திருந்தார். பள்ளிக்கூடம் முடிந்து அறைக்கு வந்ததும் இருவரும் அதிகம் பேசிக் கொள்ள மாட்டோம். […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுகதை: சாவித் துவாரம்

  Posted on June 24, 2017 by பாலமுருகன் in சிறுகதைகள்.

  முனியாண்டி வெகுநேரம் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார். கதவு திறக்கப்பட்டதும் காலில் விழுந்திட முடிவு செய்துவிட்டார். ஓராயி பவுடர் பூசும் சத்தம் கேட்டது. சரக் சரக் என ஒட்டத் தடுமாறும் பவுடரை முகத்தில் அவள் தேய்க்கும் சத்தம். அவளுக்குப் பிடித்தது அந்தச் சிவப்பு நிற டப்பாவில் இருக்கும் ‘பேபி பவுடர்’தான். அதைப் பூசிக் கொண்டு அவள் வெளியே வரும்போது இப்பொழுதுதான் தொட்டிலிலிருந்து எகிறிக் குதித்து நடந்து வரும் குழந்தையைப் போல தெரிவாள். அதற்கே முனியாண்டி தவம் கிடக்க வேண்டும். […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுவர் சிறுகதை: பதக்கம்

  Posted on May 27, 2017 by பாலமுருகன் in சிறுகதைகள்.

  “உஷா! உயரம் தாண்டுதல் போட்டியில உயரமா இருக்கறவங்களெ ஜெய்க்க முடியல… நீ 90 செண்டி மீட்டர் இருந்துகிட்டு…ஹா ஹா ஹா!” கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த பதக்கத்தைக் கையில் பிடித்து மீண்டும் பார்த்தாள். அதுவரை இல்லாத மகிழ்ச்சி உஷாவின் முகத்தில் முளைத்திருந்தது. தன்னைப் பார்ப்பவர்களிடமெல்லாம் பதக்கத்தை எடுத்துக் காட்டினாள். எல்லோரும் ஆச்சர்யத்துடன் அவளுக்குக் கையைக் கொடுத்தனர். “சாதிச்சுட்டெ உஷா! எல்லாம் உன் திறமைத்தான்…” தலைமை ஆசிரியர் திரு.கமலநாதன் எப்பொழுது பாராட்டுவார் என உஷா காத்திருந்து சட்டென புத்துயிர் பெற்றாள். […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுகதை: ‘டைகர்’ அணி

  Posted on April 24, 2017 by பாலமுருகன் in சிறுகதைகள்.

  “சொல்லு முனியாண்டி… இப்ப நம்ம ‘டைகர்’ குழு எப்படி இருக்கு?” அவர் அதைக் கேட்பார் என நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. முற்றத்தில் வெகுநேரம் அமர்ந்திருந்து அப்பொழுதுதான் அமைதியிழந்து ஒரு சிட்டுக்குருவி தகரத்திலிருந்த சந்தின் வழி தப்பித்தோடியது. தலையைத் தூக்கி மேலே பார்த்தேன். “வீடுன்னா இருட்டா இருக்கக் கூடாது, மல்லிகா  சொல்லும்… அதான்” அவர் கொண்டு வந்து வைத்திருந்த தேநீர் குவளையைப் பார்த்தேன். மனம் கொஞ்சம் படப்படப்பாக இருந்தது. “முனியாண்டி உன் வீடு மாதிரி நினைச்சுக்கோ. தேத்தண்ணிய குடி” […]

  Share Button
  Continue Reading...
  3 Comments.
 • சிறுகதை: ரொட்டிப் பாய்

  Posted on January 13, 2017 by பாலமுருகன் in சிறுகதைகள்.

  “அப்பு, இனிமேல நீ ரொட்டிப் பாயைத் துரத்தலாம்டா,” அம்மா சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தியவுடன் அப்படி உரக்கக் கூறியதும் அப்புவின் உலகம் விழித்துக் கொண்டது. அப்பொழுது அப்புவிற்கு ஏழு வயதாகி ஐந்து மாதங்கள் கடந்திருந்தன. இதற்காகத்தான் இந்த ஒரு வார்த்தைக்காகத்தான் அப்பு இரண்டு வருடங்கள் காத்திருந்தான். சிரித்த முகத்துடன் வீட்டின் முன் வந்து நின்று கொண்டான். ரொட்டிப் பாய் வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுதெல்லாம் வாரம் இருமுறை ‘ரொட்டிப் பாய்’ கம்பத்திற்கு வருவதுண்டு. அவர் வரும்போதெல்லாம் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுகதை: பூட்டு

  Posted on January 2, 2017 by பாலமுருகன் in சிறுகதைகள்.

  சிறியதாக இன்னும் ஒரு பூட்டு போதும் என முடிவாகிவிட்டதும் உடனே ‘ஆ மேங்’ கடைக்கு இறங்கினேன். மூன்றாவது மாடியிலிருந்து கீழே இறங்கி எதிர்ப்புறம் இருக்கும் பெரிய சாலையைக் கடந்துபோனால் இருக்கும் ஓரே ஒட்டுக் கடை அதுதான். அப்பாவிற்குப் பூட்டென்றால் மிகவும் பிடிக்கும். சதா காலமும் அவருடைய மோட்டார் வண்டியிலும் சிறிய வைப்புப் பெட்டியிலும் பூட்டுகள் இருக்கும். எதையாவது பூட்டியப்படியேதான் இருப்பார். அம்மாவின் அலமாரி, அவருடைய அலமாரி, ஒரு கதவு உடைந்து பாதி சாய்ந்து கிடக்கும் தாத்தாவின் அலமாரி […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுகதை: நெடி

  Posted on December 21, 2016 by பாலமுருகன் in சிறுகதைகள்.

  இரயில் கிளம்பும்போது மணி 4.50 இருக்கும். இரயில் பயணம் என நினைக்கும்போது ஒரு வகையான பூரிப்பு சட்டென மனத்திலிருந்து தாவி உடலில் நெளிகிறது. பயணங்களில் கிடைக்கும் ஓர் அர்த்தமற்ற தனிமை விசாரணைகளற்றது. எவ்வித யோசனையுமின்றி வெறுமனே வெளியைப் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு தவம். காலையில் வேலைக்குப் போனால் மீண்டும் திரும்ப இரவாகும் நாட்களில் அது நமக்கு கிடைக்காது. ‘The next station is Butterworth’ என்னை நான் கவனிக்கும் ஒரு தருணம் எப்பொழுதும் கிடைத்ததில்லை. அவசரமாகத் தலை […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுகதை: டீவி பெட்டி

  Posted on December 14, 2016 by பாலமுருகன் in சிறுகதைகள்.

  அப்பா கொண்டு வந்து வீட்டின் வரவேற்பறையில் வைக்கும்வரை என்னால் அதை யூகிக்க முடியவில்லை. முன்கதவை இடித்துத் தள்ளிக் கொண்டு உள்ளே வரும்போதே ஏதோ கனமான பொருள் என்று மட்டும் தெரிந்தது. “ம்மா! இந்தா டீவி பெட்டி,” என அப்பா உரக்க சொன்னதும் வீடே விழித்துக் கொண்டது. பாட்டியின் கண்கள் அகல விரிந்து மூடின. பாட்டி பெரியப்பா வீட்டில்தான் இருந்தார். மூன்று வாரத்திற்கு முன் மயங்கி கீழே விழுந்து கால் உடைந்து போனதும் இங்கே வந்து விட்டார். பெரியப்பா […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • சிறுகதை: சுருட்டு

  Posted on September 29, 2016 by பாலமுருகன் in சிறுகதைகள்.

    1 பெரியம்மா தலைமுடியை வாரிக் கட்டிக் கொண்டு பெரியப்பாவைக் கெட்ட வார்த்தையிலேயே திட்டிக் கொண்டு மேலே வந்தார். அன்றுத்தான் பெரியம்மா அப்படிப் பேசுவார் எனத் தெரிந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது. பெரியப்பா அண்ணனைத் தூக்கி வரந்தாவில் வீசும்போது அம்மாவும் அங்கு வந்துவிட்டார். அண்ணன் அலறிக் கொண்டு எழ முயன்று மீண்டும் விழுந்தான். “என் சுருட்டெ தொட்டனா…நீ செத்தடா,” எனக் கத்திவிட்டு பெரியம்மா அலறுவதைக்கூட பொருட்படுத்தாமல் பெரியப்பா தன் கையில் வைத்திருந்த சுருட்டை எடுத்து நிதானமாகப் பற்ற வைத்தார். […]

  Share Button
  Continue Reading...
  1 Comment.