Category Archives: சினிமா விமர்சனம்

 • விசாரணை – குரலற்ற மனிதர்களின் மீதான வன்முறை

  Posted on February 7, 2016 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  மிக நீண்ட இடைவேளிக்குப் பிறகு மனத்தை அதிரவைத்த திரைப்படம். நம் மனத்தை ஒரு படம் உலுக்க முடிந்தால் அதைப் படம் என்பதா அல்லது நிஜம் என்பதா? அதிகாரம் எளிய மனிதர்களை உடல்/உள ரீதியில் வதை செய்யும் ஒவ்வொரு காட்சியும் மிரட்டுகிறது. வெற்றி மாறன் தமிழ் சினிமாவின் மாபெரும் கதைச்சொல்லி என்பதில் சந்தேகம் இல்லை. திரையரங்கைவிட்டு ஒரு பெரிய கூட்டமே சத்தமில்லாமல் கனத்த மனத்துடன் வெளியே வந்ததை என் வாழ்நாளில் இன்று மட்டுமே அனுபவித்தேன். ஈவிரக்கமற்ற அமைப்பு தன் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • நான் முக்கியமானதாகக் கருதும் 2015ஆம் ஆண்டின் மிகச் சிறந்த தமிழ்ப்படங்கள்- பாகம் 1

  Posted on February 6, 2016 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  சினிமாவில் நான் எதையும் சாதிக்கப் போவதில்லை. அது என் துறையும் கிடையாது. ஆனால், நான் தீவிரமான சினிமா இரசிகன். சினிமாவில் முக்கியமான கூறுகளான, இசை, ஒளிப்பதிவு, ஒலி, வர்ணம், வசனம், திரைக்கதை, கதை, இயக்கம், பின்னணி இசை என பலவற்றை கூர்ந்து கவனிக்கும் பயிற்சியை உலக சினிமாக்களின் வழியும் சினிமா சார்ந்த நூல்களின் வழியும் பழகிக் கொண்டேன். ஒரு சினிமாவை அதன் கலாச்சாரப் பின்னணியோடும் அந்நாட்டின் அரசியல் சூழலோடும், கலை வெளிபாடுகளுடனும் இணைத்துப் புரிந்து கொள்ளும் விமர்சிக்கும் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • Ola Bola- மலேசிய வரலாற்றின் குரல்

  Posted on January 31, 2016 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  ‘ஹரிமாவ் மலாயா’ எனக் கம்பீரமாக அழைக்கப்பட்ட மலேசியக் காற்பந்து குழுவிலுள்ள விளையாட்டாளர்களின் மனப்போராட்டங்களையும், ஈகோ போரையும், குடும்ப சிக்கல்களையும், குழுவில் நடந்த மனக் கசப்புகளையும், தியாகங்களையும் 1980களின் பின்னணியில் வைத்து ஓர் அழுத்தமான திரைக்கதையுடன் ‘ஓலா போலா’ படைக்கப்பட்டுள்ளது. 1963ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மலேசியக் காற்பந்து குழுவின் எழுச்சி காலம் என 1980-களைச் சொல்லலாம். மலேசியக் காற்பந்து விளையாட்டாளர் மொக்தார் ஆசியாவின் சிறந்த காற்பந்து வீரர் எனும் புகழைப் பெற்று முன்னிலையில் இருந்த காலம். அப்பொழுது ஆசியாவிலேயே […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • உலக சினிமா தொடர் 2: ஸ்பானிஷ் சினிமா: ஒரு தீ மூட்டியும் ஒரு சவப்பெட்டியும்

  Posted on January 19, 2016 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  ஒவ்வொரு வருடங்களும் தூரத் தேசங்களுக்கு வேலைக்குப் போகும் ஏராளமான மனிதர்களில் யாரெனும் ஒருவரைத் தற்செயலாக எங்காவது பார்த்துப் பேசியிருக்கிறீர்களா? விட்டு வந்த நிலம் குறித்த கவலைகளும் ஏக்கங்களும் நிறைந்த கண்களைத் தரிசிக்கக்கூடும். மனைவி மக்களைப் பிரிந்து வருடக் கணக்கில் ஊர் திரும்பாமலேயே கிடைக்கும் இடத்தில் பெரிய எதிர்ப்பார்ப்புகள் ஏதுமின்றி உலகமெங்கும் பல தொழிலாளிகள், பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் சிதறிக் கிடக்கிறார்கள். அது போன்றவர்களின் மன உளைச்சலையும் பரிதவிப்பையும் நேரில் காட்சிகளாகக் கொடுத்து நம்மை வியப்பிலும் பயத்திலும் ஆழ்த்தும் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • உலக சினிமா தொடர் – 1 : Camp X –Ray திரைவிமர்சனம் ஈராக் சினிமா: ஒரு சிறையின் மிகக்கொடூரமான தனிமை

  Posted on January 11, 2016 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  ஒரு தூக்குக் கைதியின் சிறையில் அவன் மரணத்திற்குப் பிறகு என்ன இருக்கும்? மௌனம்.   சில வருடங்களுக்கு முன்பு கோலாலம்பூரில் இருக்கும் ‘புடு சிறை’ பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தபோது அங்குப் போக நேரிட்டது. பல ஆண்டுகளாகச் சிறை கைதிகள் வாழ்ந்து தண்டனைகளை அனுபவித்த ஒவ்வொரு சிறையையும் கடக்கும்போது விவரிக்க இயலாத ஒரு தனிமையின் கதறல் மனத்தில் அப்பிக்கொண்டதை உணர முடிந்தது.  மரணத் தண்டனை என்னைப் பொறுத்தவரை சட்டத்தின் அனுமதியுடன் செய்யப்படும் கொலையே. சட்டமும் தண்டனைகளும் ஒரு மனிதன்/ […]

  Share Button
  Continue Reading...
  1 Comment.
 • குற்றம் கடிதல்: ஒரு மன்னிப்பின் முன்னே மண்டியிடுதல்

  Posted on January 8, 2016 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  ‘குற்றமே பகையாக மாறலாம்’ என்கிற தெளிவான கருத்துடன் சமூகத்தை நோக்கி விரிகிற குற்றம் கடிதல் படம் பள்ளிக்கூடங்களில் இழைக்கப்படும் குற்றங்களுக்கான மையப்புள்ளியைத் தேடி விரிவாக முனைந்துள்ளது என்றே சொல்லலாம். தற்கால சூழலில் இயங்கி வரும் பள்ளிக்கூடங்கள் என்பது அடுத்த தலைமுறை சந்ததியை உருவாக்கி வெளியே அனுப்பும் தொழிற்சாலை என்பதைப் போல பல தமிழ் சினிமாக்கள் காட்ட முனைந்திருக்கின்றன. டோனி, சாட்டை, நண்பன் போன்ற படங்களைக் குறிப்பிட்டு சொல்லலாம். ஆனால், குற்றம் கடிதல் எவ்வித மாற்றுக் கருத்தையோ அல்லது […]

  Share Button
  Continue Reading...
  No Comments.