Category Archives: சினிமா விமர்சனம்

 • 2017-ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்ப்படங்கள் ஒரு பார்வை

  Posted on February 15, 2018 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  2017ஆம் ஆண்டில் நாம் பார்க்கத் தவறிய அல்லது பார்த்தும் மீட்டுணராமல் போன  சிறந்த தமிழ்ப்படங்கள் 25-ஐ இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். கடந்து போய்விட முடியாத நல்ல சினிமாவின் ஆழ்மன குரலை மறுமுறை கேட்கும்போது ஏற்படும் இரசனை மாற்றம் அலாதியானது. tamil movies countdown 2017: 1st place: Aruvi மனித மனங்களின் ஈரத்துள் உறையும் வாழ்க்கை  Arun Prabu Purushothaman இயக்கத்தில் வெளிவந்த இவ்வாண்டின் தமிழ் சினிமா சூழல் மட்டுமல்லாமல் 60க்கும் மேற்பட்ட உலகத் திரைப்பட விழாக்களிலும் மிகுந்த […]

  Share Button
  Continue Reading...
  1 Comment.
 • சவரக்கத்தி – ஓர் அன்பு கத்தி- திரைப்பார்வை

  Posted on February 11, 2018 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  மிஷ்கின் ‘மங்கா’ எனும் கதாபாத்திரத்திலும், இயக்குனர் ராம் ‘பிச்சை’ என்கிற முடித் திருத்தம் செய்பவராகவும் இரு துருவங்களில் நின்று நடித்திருக்கிறார்கள்.  புதுமுக இயக்குனர் என்றாலும் ஜி.ஆர் ஆதித்யா மிஷ்கினிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அனுபவத்துடன் மிஷ்கின் பட சாயல் ஆங்காங்கே வியாபித்திருக்கும்படியே படத்தை உருவாக்கியிருக்க்கிறார். சினிமாத்தனங்களைப் பல இடங்களில் உதறித்தள்ளிவிட்டு தனித்துவத்துடன் ‘சவரக்கத்தி’ மனத்தில் ஆழ நுழைகிறது. பெரும்பாலான கதாநாயக முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் கதாநாயகனை நோக்கிய துதிப்பாடல்களும் தூயக் கட்டமைப்புகளும் மட்டுமே வழக்கமான தமிழ் சினிமாவின் […]

  Share Button
  Continue Reading...
  2 Comments.
 • சினிமாவிற்கும் எனக்குமான இடைவெளி

  Posted on November 30, 2017 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தைத் திரையில் பார்த்துவிட்டு வந்ததும் அதன் நிறைகுறைகளை எழுதி முகநூலில் அல்லது வலைத்தலத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன். ஆனால், இப்பொழுது அவசரம் ஏதுமின்றி மௌனமாகவே இருக்கிறேன். சில சமயங்களில் சினிமா விமர்சனம் எழுதுவது குறித்தே சோம்பல் தட்டிவிட்டது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் உள்ளன. ‘யூடியுப்’ திரைவிமர்சகர்கள் ஏராளமாகப் பெருகி வழிந்து கொண்டிருக்கிறார்கள். தினம் ஒரு பட்த்தை விமர்சனம் செய்து நிறைய வீடியோக்கள் மக்கள் மத்தியில் கவனமும் வரவேற்பும் பெற்று வருகிறது. சினிமாவைப் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • திரை ஒப்பீட்டு விமர்சனம்: நிபுணன் vs துருவங்கள் பதினாறு

  Posted on August 1, 2017 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  கொலை, கொலை தொடர்பான விசாரணை என்கிற போக்கில் தமிழ்ப்படங்கள் நிறைய வந்துள்ளன. குறிப்பாக, யுத்தம் செய் சமீபத்திய திரைவரிசையில் முதன்மை வகிக்கிறது. கொரிய மொழியில் வெளியான ‘Memories of murder’ படத்திற்குப் பிறகு வந்த தமிழ்ப்படங்களில் ‘யுத்தம் செய்’ படத்தில் மட்டுமே பெரியளவு தாக்கத்தையும் புதிய கதைச்சொல் முறையையும் கவனிக்க முடிந்தது.   கொலையைக் கண்டறிதல் கொலை தொடர்பான படங்களை மூன்று வகைகளில் புரிந்து கொள்ளலாம். ஒன்று ஒரு கொலையை அல்லது கொலை செய்தவனை நோக்கி விசாரணை […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • ரங்கூன் – ஒரு பர்மா அகதியின் துரோகமிக்க வாழ்வு

  Posted on July 7, 2017 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

    இவ்வாண்டின் மிகச் சிறந்த படைப்புகளில் இப்படம் நிச்சயமாகச் சேரும். 1980களின் இறுதியில் பர்மாவிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த ‘பர்மா அகதிகளின்’ ஒரு குறுங்கதை. அகதிகளின் வாழ்வை மிகச் சொற்பமாகப் பேசிச் சென்றாலும் திரைக்கதை ஒரு பர்மா இளைஞனின் வாழ்வில் சுற்றி நிகழும் துரோகம், இழப்பு, நட்பு, வஞ்சமிக்க தருணங்கள், குற்றங்கள் என யதார்த்தப்பூர்வமாகப் பதிவாகியுள்ளது. முதலில் பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஒப்பனை, கலை ஆகிய பகுதிகளைப் படத்தின் மையக்கதையோடு வைத்துச் செதுக்கிய கலைஞர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தே […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • தாவரங்களின் நாவும் மனித தற்கொலைகளும் – The Happening

  Posted on June 9, 2017 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  அம்மா தினமும் காலையில் எழுந்தவுடன் வீட்டின் எதிர்புறத்தில் இரும்பு கதவில் ஊர்ந்து கிடக்கும் கொடியைப் பார்த்துக் கொண்டிருப்பார். ஒவ்வொருநாளும் அதன் அளவு நீண்டு கொண்டே இருக்கும். அதனைப் பார்த்தப்படியேதான் எங்களின் காலை பொழுதுகள் விடியும். கொடி ஊர்வதைப் போல எங்களுக்குள் வீட்டைச் சுற்றியிருக்கும் தாவரங்கள் மீதான அன்பும் ஊர்ந்து ஊறிக் கிடக்கின்றன. அப்பா கொண்டு வந்து சேர்த்த செடிகளில் வர்ணங்கள் எப்பொழுதும் வேறுவேறாகத்தான் தெரியும். காலையில் பார்க்கும்போது இருந்த வர்ணம் மாலையில் சூழலுக்குத் தகுத்தமாதிரி மங்கிப் போயிருக்கும். […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • Dangal – பெண்களின் மீதான அடக்குமுறைகளை வெல்லுதல்

  Posted on January 18, 2017 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  அமீர் கான் அவர்கள் தயாரிக்கும் அனைத்து படங்களும் சமூக அக்கறையும் கலை எழுச்சியுமிக்க படைப்பாக இருக்கும் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படத்தைப் பற்றி வேறு என்ன சொல்வது? இந்திய சினிமாவையே பெருமைப்பட வைத்துள்ளது. இயக்கம், இசை, ஒளிப்பதிவு, கலை, நடிப்பு, திரைக்கதை என அனைத்திலும் ஆய்வுப்பூர்வமாகவும் தெளிவாகவும் படத்தைத் தயாரித்துள்ளார்கள். இந்தியக் கிராமங்களில், மூலை முடுக்குகளில், சமூகத்தின் அடியாழத்தில், திறமையான பெண்கள் நம்பிக்கையுடன் திரைக்குப் பின்னால் காத்திருக்கிறார்கள். அவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்கிற அகத்தூண்டலைப் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • பைரவா: ஒரு திரைப்பார்வை

  Posted on January 14, 2017 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  பரதன் இயக்கத்தில் பொங்கலை முன்னிட்டு வெளியான ‘பைரவா’ திரைப்படத்தின் விமர்சனம் என்பதைவிட ஓர் எளிய திரைப்பார்வை என்றே சொல்லலாம். பெரும்பாலும் தமிழில் வெளிவரும் ‘மாஸ்’ கதாநாயகர்களின் படங்களில் இருக்கும் வழக்கமான ‘பார்மூலாக்கள்’ இப்படத்திலும் இருக்கின்றன. ஆனால், அவற்றுள் நம்மை இரசிக்க வைக்கும் பகுதிகளையும் மனத்தைக் கவலைக்குள்ளாக்கும் பகுதிகளையும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.   விஜய் சண்டைக்காட்சிகளுக்கு மட்டுமே அவருக்கு வாய்ப்பிருந்தது. நடிப்பதற்கான, நடிப்பை வெளிப்படுத்துவதற்கான பகுதிகள் திரைக்கதையில் அத்தனை முக்கியம் பெறவில்லை. ஆனால், சண்டைக்காட்சிகளில் சலிக்காமல் இயந்து போயிருக்கிறார் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • 2016 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்ப்படங்கள் – ஒரு பார்வை

  Posted on January 1, 2017 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

  ஒரு வருடத்தில் வெளிவந்த 100க்கும் மேற்பட்ட படங்களைலிருந்து நல்ல சினிமாக்களைத் தொகுத்துப் பார்க்கும் ஒரு முயற்சிக்காகத்தான் சினிமாவைத் தரவரிசைப்படுத்தியுள்ளேன். பற்பல திரைவிமர்சகர்களின் விமர்சனங்களை உட்படுத்தி, என் இரசனைக்குள்ளிருந்து இப்படங்களை முன்மொழிந்துள்ளேன். சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதோடு மட்டும் நின்றுவிட முடியாது. கலைக்கு ஒரு பொறுப்புண்டு என்பதையும் நான் நம்புகிறேன். கலைக்கு ஒரு வெளிப்பாட்டுத்தன்மையும் உண்டு. 2016ஆம் ஆண்டில் வெளிவந்த 191 தமிழ்ப்படங்களில் மிகச் சிறந்த 20 படங்களை இங்கே வரிசைப்படுத்தியுள்ளேன். வணிக ரீதியில் அதிகம் சம்பாரித்த […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • Train to Busan – கொரிய சினிமா / அறம் என்பது சமூகத்தின் கட்டமைக்கப்பட்ட பொதுவிதிகளுக்கு உடந்தையாவதாகும்

  Posted on September 14, 2016 by பாலமுருகன் in சினிமா விமர்சனம்.

    “Selfish people are weak and are haunted by the fear of loss of control” Selfishness is putting your goals, priorities and needs first before everyone else even those who are really in need. By M.Farouk Radwan, MSc. மேற்சொல்லப்பட்டிருப்பதைப் போல சுயநலம் என்பது ஒரு வகையான மனநோய் தொடர்புடையது எனத் தெரிந்து கொள்ளலாம். இதைத்தான் இன்றைய உளவியல் பகுப்பாய்களும் நிறுவுகின்றன. ஆனால், சுயநலம் என்பது […]

  Share Button
  Continue Reading...
  No Comments.